இன்று களமிறங்கும் வைல்டு கார்டு என்ட்ரி!?..பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த பிரபலமா? அவரே வெளியிட்ட தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் வைல்ட் கார்டு என்ட்ரி தான் கலந்து கொள்ளப் போகிறேன் என்று யூடியூப் பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

50 நாட்களை கடந்து விட்ட நிலையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு வைல்ட் கார்டு என்ட்ரிக்காக காத்திருக்கும் நேரத்தில் இப்படி ஒரு வைல்ட் கார்டா சிலர் குழப்பத்தில் தான் இருப்பார்கள்.

கடந்த சீசனில் அமீர் வைல்ட் கார்டு

கடந்த சீசனில் அமீர் வைல்ட் கார்டு

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு சிலர் கலந்து கொள்வார்கள். கடந்த சீசனில் கூட அமீர் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்து அதற்கு முன்பு இருந்த போட்டியாளர்களுக்கு டப் கொடுக்கும் விதத்தில் விளையாடி கடைசி நாள் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார். இதற்கு முன்பும் ஒரு சில போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமானாலும் ஒரு சில வாரங்களில் வெளியேறி இருக்கின்றனர் .ஆனால் அமீர் கடைசி வரைக்கும் நிகழ்ச்சியில் இருந்து வந்தார். அது மட்டுமல்லாமல் பாவனியோடு இவர் அதிகமாக நெருக்கம் காட்டி காதலிப்பதாக கூறிவந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது அவர்கள் காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.

இந்த முறை இருக்கா இல்லையா

இந்த முறை இருக்கா இல்லையா

இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்களோடு ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பமே 21 போட்டியாளர்கள் அறிமுகம் ஆனதும் இந்த சீசனில் வைல்டு என்ட்ரி இருக்கா? இல்லையா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று 54-வது நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களில் எப்படியும் வைல்ட் என்ட்ரி ஆக போட்டியாளர்கள் உள்ளே வந்துவிடுவார் என்று சிலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு

போட்டியாளர்களின் எதிர்பார்ப்பு

ஏற்கனவே சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த ஆறாவது சீசனில் புது போட்டியாளர்கள் வந்து என்ன மாதிரி விளையாட்டை கொண்டு போகப் போகிறாரோ? அல்லது இவர்களிடம் தாக்குப் பிடிக்காமல் வெளியேறி விடுவார்களோ? என்று தான் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் வைல்ட் கார்டு என்ட்ரி எதிர்பார்த்து இருக்கின்றனர் .தங்களுடைய விளையாட்டு வெளியே இந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்பதை வரும் போட்டியாளர்களிடம் இருந்து தெரிந்து விடலாம் என்பது இவர்களுடைய கணிப்பாக இருந்து வருகிறது.

 கடைசியில் இப்படி ஆகிவிட்டது

கடைசியில் இப்படி ஆகிவிட்டது

இந்த நிலையில் youtube பிரபலமாக இருக்கும் ஆல்பர்ட் அஜய் என்பவர் சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிட்சயமானவர்தான். இவருக்கு அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர் . இவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து போடும் வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் இவரை பாலோ செய்பவர்கள் மட்டும் அதிகமாக இருக்கின்றனர். இந்த நிலையில் இவர் பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் முடிவெடுத்து இருப்பதாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று தன்னுடைய அறிமுகம் இருக்கும் என்றும் தன்னை எல்லோரும் டிவியில் பார்க்கலாம் என்று பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் முதலில் தான் இவர் பிக் பாஸ் வைல்டு கார்டு என்ட்ரி ஆக கலந்து கொள்ளப் போகிறேன் என்று கூறியிருக்கிறார். கடைசியில் நான் இது எல்லாமே பிராங்க் பண்ணினேன் என்று முடித்திருக்கிறார். ஆனால் கடைசிவரை பார்க்காத ரசிகர்கள் பலர் இவர்தான் இந்த சீசனில் வைல்ட் கார்டு என்று தகவலை பரப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+