Bigg Boss 8 Tamil grand finale மேடையில் தீபக்கிற்க்கு கிடைத்த பெரிய கிப்ட்.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது தீபக்கிற்கு “மாஸ்டர் ஆப் கேப்டன்” என்ற அவார்ட் விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அதைத் தொடர்ந்து ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களும் இந்த இருந்தனர். 24 போட்டியாளர்களோடு இந்த நிகழ்ச்சி தரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பினாலே மேடைக்கு வந்திருக்கின்றனர். அதில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை தொடர்ந்து ரன்னராக சௌந்தர்யாவும் ,இரண்டாவது ரன்னர் அப்ஆக விஜே விஷாலும் பெயர் வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் இந்த சீசனில் டைட்டில் வின்னராக வருவார் என்று ஆரம்பத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்டவர்களில் தீபக் பெயரும் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தீபக் அதிரடியாக எவிக்ஷன் செய்யப்பட்டார். தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டது போது முத்துக்குமரன் கதறி அழுததும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் இன்று கிரான்ட் பினாலே மேடையில் ஒரு சில போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் டீம் சிறப்பு பரிசுகள் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதல் போட்டியாளராக தீபத்திற்கு இந்த சீசனின் மாஸ்டர் ஆஃப் கேப்டன் என்ற விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தீபக் வெளியேறும் போது பிக்பாஸ் இதைத்தான் சொல்லி இருந்தார்.
இதுவரைக்கும் ஏழு சீசன் நடைபெற்று இருக்கிறது. அதில் பலர் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய கேப்டன் சி திறமையாகவும் எல்லாவற்றிற்கும் மாஸ்டர் ஆகவும் இருந்தது என்று பாராட்டி இருந்தார். அதுபோல இன்று தீபத்திற்கு அவார்ட் கொடுத்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பாராட்டு பெற்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications