பிரச்சனை ஏற்படுத்த பிக்பாஸ் கொடுத்த புது டாஸ்க்.. மாட்டிக் கொண்ட போட்டியாளர்..இவருக்கு இது தேவைதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி கண்டென்ட் கிடைக்கும் வகையாக பார்த்து பார்த்து உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இன்று செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பது போல சக போட்டியாளர்களை குறித்து சேகரித்து வரும் தகவல்கள் வேற லெவலில் பிரச்சினையை ஏற்படுத்த காத்திருக்கிறது.

இன்றைய முதல் ப்ரோமோவில் சிக்கி இருக்கும் போட்டியாளர் தனலட்சுமி தான் .அவரைப் பார்த்து நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வருகிறார்கள்.

செய்தி சேகரிப்பு

செய்தி சேகரிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசன் தொடங்கி இருந்தாலும், முதல் சீசனில் நடந்த பல போட்டிகள் இப்ப வரைக்கும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் டிவி நிகழ்ச்சி இந்த வாரம் தொடங்கப்பட்டிருக்கிறது .இதில் இன்று செய்தி வாசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அந்த டிவி இந்த டிவி என இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து தங்களுடைய அணியை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்து வரும்போது அந்த டிவியில் இருந்து இந்த டிவி போட்டியாளர்களையும், இந்த டிவியில் இருந்து அந்த டிவி போட்டியாளர்களையும் பற்றி இன்று செய்தி சேகரித்து வருகிறார்கள்.

கேள்வி கேட்கும் விக்ரமன்

கேள்வி கேட்கும் விக்ரமன்

அந்த டிவி அணியில் ஆரம்பமாகும் போதே ஜனனி செய்தி வாசிப்பாளராக தன்னுடைய செய்தி வாசிக்கும் திறமையை சிறப்பாக காட்டுகிறார். அந்த டிவியில் ஆக்டிவிட்டி ஏரியாவில் ஆக்டிவாக இருந்த மணி என்று கடந்த வாரம் மணிகண்டன் செய்த செயலை குறித்து இன்று விவாதிக்கப்படுகிறது. அவரிடம் நேரடியாக விக்ரமன் மைக்கைப் பிடித்தபடி கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். சும்மாவே விக்ரமனுக்கு கேள்விகள் கேட்க சொல்லவே கொடுக்க வேண்டாம். இப்போது கையில் மைக்கோடு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் .

மணிகண்டன் கொடுத்த விளக்கம்

மணிகண்டன் கொடுத்த விளக்கம்

நடுநிலையாக இவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு கொடுக்கும் விளக்கங்களும் ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கிறது. தன் மீது தப்பான பொய் கருத்துகளை வைக்கும் போது தனக்கு கோபம் வந்ததை குறித்து மணிகண்டன் விவரமாக பேசி வருகிறார். அதனால் தான் நான் கடந்த வாரம் அப்படி நடந்து விட்டேன் என்று அவர் கூறிய பதில் அவருடைய தவறுக்கு விளக்கம் கொடுப்பதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த டிவியில் இருந்து தனலட்சுமி செய்தி வாசிக்கிறார்.

தனலட்சுமியின் புது செயல்பாடு

தனலட்சுமியின் புது செயல்பாடு

தவறை தட்டிக் கேட்கும் ஒரு நபரை அவரிடம் இருக்கும் குணத்தை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு போட்டியாளர்களும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர் பதிலே சொல்லாமல் குழந்தை போல சிரித்தது குறிப்பிடத்தக்கது என்று கூறி இருக்கிறார் .இதற்கு கருத்து கேட்டு விக்ரமனிடம் சக போட்டியாளர்கள் மைக்கை நீட்டியுள்ளனர். அதற்கு அவர் அவங்க அவங்க ஒரு ஒப்பினியன் சொல்லுவாங்க ,அதற்கு நாம மாறணுமா? வேண்டாமா? என்பது அவர்களுடைய கருத்து என்று பொதுப்படையாக விக்ரமன் கூறி முடித்திருக்கிறார்.

அதிகரிக்கும் நெகட்டிவ் கருத்துக்கள்

அதிகரிக்கும் நெகட்டிவ் கருத்துக்கள்

இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இரண்டு வாரங்களாக தனலட்சுமியின் தரப்பு நியாயங்களுக்கு கமல் மதிப்பு கொடுத்து பாராட்டியதால் இந்த வாரம் தனலட்சுமி ஓவராக ஆடுகிறார். தனலட்சுமி தலைக்கனத்தில் பேசுகிறார். சக போட்டியாளர்கள் தனலட்சுமி குறித்து பேசுவது எல்லாம் சரிதான் ,இது அவருக்கு தேவை தான் என்றெல்லாம் அவரைப்பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+