பிக்பாஸ் அல்டிமேட்: வீட்டிற்குள் வந்ததும் செருப்பை கையில் எடுத்த அபிராமி..முதல் நாளே இப்படியா
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அபிராமி செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Recommended Video
ஏற்கனவே அபிராமியின் அடாவடித்தனத்தை எதிர்ப்பார்த்த ரசிகர்கள் முதல் நாளில் வனிதாவிடம் அபிராமி செய்த செயலை விமர்சித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் அல்டிமேட் தொடக்கம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைத் தொடர்ந்து இப்போது பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கப்பட்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்தி இருக்கின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இதில் புது போட்டியாளர்கள் எவரும் அறிமுகமாகவில்லை. கடந்த 5 பிக் பாஸ் சீசன்களில கலந்து கொண்டவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதால் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

கமலின் மறைமுகமான பேச்சு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் 14வது போட்டியாளராக அபிராமி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய கலகலப்பான குணத்தை பலர் ரசித்து இருந்தாலும், இவருடைய அதிரடியான சண்டைக் காட்சிகளையும் பலரும் மறக்காமல் இருந்து வருகிறார்களாம். அதனாலேயே இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சொன்னதும் அப்போ இங்கே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர். அதையேதான் கமல் கூட இவருடைய அறிமுகத்தில் மறைமுகமாக கூறியிருந்தார்.

கொஞ்சம் பயமாக தான் இருக்காம்
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வனிதா அறிமுகமானதும் அவரை தொடர்ந்து அபிராமி இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். வந்ததும் தன்னுடைய பேச்சால் அனைவருக்கும் அள்ளு விடும் வகையில் தான் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வனிதாவின் செருப்பை கையில் எடுத்து இவ்வளவு பெரிய ஸ்டூல்...சில நேரங்களில் இது ஆயுதமாகவும் பயன்படும் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இப்பவே நாங்கள் பயந்து விட்டோம்...கையில் செருப்பை பார்த்ததும் மிரண்டு விட்டோம்...இதை ஆயுதமாக யூஸ் பண்ண போகிறாரா??என்று கேள்விகளை பயத்தோடு எழுப்பி வருகிறார்கள்.

மிரளவைத்த திடீர் செய்கை
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வார தலைவராக சாரிக் வெற்றி பெற்றிருக்கும் நேரத்தில் அவருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கிரீடம் மற்றும் செங்கோல் போன்றவற்றை வனிதா தொட்டுப்பார்த்து உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கும்போதே, நான் இப்படியெல்லாம் இல்லை என்று அடாவடியாக அதை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டார் அபிராமி . அபிராமியின் இந்த திடீர் செய்கை வந்த முதல் நாளே இப்படியா?? என்று முகம் சுளிக்க வைத்துள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்போதே வனிதா மற்றும் அபிராமி இடையே கருத்து போர் வெடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றமாகவும் இருந்ததாம். ஆனால் எப்படியும் விரைவில் தொடங்கிவிடுவார்கள் என்று மனதை தேற்றி வருகிறார்களாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications