
பிக்பாஸ் அல்டிமேட்:டாஸ்க் என்கிற பெயரில் இந்த மாதிரியா கேள்வி கேட்பாங்க...முகம் சுளிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ட்ரூ ஆர் ட்ரூத் என்னும் டாஸ்க்கில் கேட்கப்பட்ட முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சபையில் பேச கூச்சப்படும் வார்த்தைகளை கேள்விகளாக கேட்டு அதற்கு போட்டியாளர்களை பதில் சொல்ல வைத்திருப்பது இது வே. ..ற ரகம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் அல்டிமேட்: தாமரைக்கே டப் கொடுத்த பாலாஜி...வேற லெவல் பதிலைக் கேட்டு கொண்டாடும் ரசிகர்கள்

பரிச்சயமான போட்டியாளர்கள் தான்
தற்போது தொடங்கியிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். போட்டியாளர்கள், ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் களாக இருந்தாலும் இவர்கள் செய்யும் செயல்களை 24 மணி நேரமும் ரசிகர்கள் பார்த்து வருவதால் உள்ளே நடக்கும் பல விஷயங்கள் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு இருபத்தி நான்கு மணி நேரமும் எடுக்கப்படும் காட்சிகளை எடிட் செய்து ஒரு மணி நேரம் மட்டுமே காட்டி வந்தனர்.

ஹாட்ஸ்டாரில் அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்ததால் உள்ளே நடந்த பல நிகழ்வுகள் ரசிகர்களுக்கு மறைக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அனைத்துமே ரசிகர்கள் பார்த்து வருவதால் உள்ளே நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக பார்த்து திகைத்துப் போய் இருக்கின்றனர். அதுவும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருவதால் இதை குழந்தைகள் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்க போவதில்லை என்று முடிவு கட்டி விட்டார்கள் போல, அதனால்தான் இதில் இருக்கும் கண்டெண்ட்கள் பல இளைஞர்களை மகிழ்விப்பதற்காக எடுக்கப்பட்டதாக இருந்து வருகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

முதல்நாள் டாஸ்க்
ஏற்கெனவே முதல்நாள் எபிசோடில் போட்டியாளர்கள் புகைபிடிக்கும் காட்சிகள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்த நேரத்தில் தற்போது முதல் நாளில் டாஸ்க்கில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடி அல்லது குடி என்று வித்தியாசமாக தலைப்பு வைத்து பிக்பாஸ் பல தலைப்புகளில் கேள்விகளை கேட்டு ஒரு பேப்பரில் எழுதி பவுல் உள்ளே போட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியாளர்களும் அந்த பாட்டிலில் இருந்த கேள்விகளை எடுத்து படிக்க வேண்டும். அதற்கு அனைத்து போட்டியாளர்களும் உண்மையா?? அல்லது இல்லையா?? என்று, உண்மையாக இருந்தால் பாகற்க்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். பொய்யாக இருந்தால் நொறுக்குத்தீனிகளை கடிக்க வேண்டும் என்று இருந்தது.

இப்படியுமா கேள்விகள் கேட்பாங்க
இதில் கூட்டத்தில் நீங்கள் குசு விட்டுவிட்டு இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களா??, நீச்சல்குளத்தில் தண்ணீருக்குள சுச்சு போய் இருக்கீங்களா..!!??,காண்டத்தை பலூன் போல ஊதி விளையாடி இருக்கிறீர்களா..!!??, அடுத்தவர்களின் மீது வாந்தி எடுத்து இருக்கிறீர்களா..!!???, என்று அப்பட்டமான பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் ஆமாம் செய்துள்ளோம்...இல்லை செய்யவில்லை என்று பதிலை கூறிக்க௧ண்டு குடிக்கிறது அல்லது கடிக்கிறது செய்யவேண்டுமென்று இருந்தது. இந்த மாதிரி கேள்விகளை கேட்டதும் போட்டியாளர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு காண்டாகத்தான் இருந்து வருகிறதாம்.