டூரிஸ்ட் பேமிலிக்கு எதிர்மாறாக எடுக்கப்பட்ட புவனா ஒரு கேள்விக்குறி! சிவகுமார் வென்றது எப்படி?
சென்னை: டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஹீரோ ரொம்ப நல்லவர் என காட்ட நிறைய சீன்களை வைக்க வேண்டும் என்றும் அந்த சீன்கள் வராமல் இருக்க சசிகுமாரை தான் தேர்வு செய்ததாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார். அது வெற்றியும் பெற்றது. புவனா ஒரு கேள்விக்குறிக்கு டூரிஸ்ட் பேமிலி படத்திற்கும் சம்பந்தம் என்ன?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஒரு விஷயம் பற்றி கூறினார்.

"ஹீரோ ரொம்ப நல்ல கேரக்டர். அந்த ரோலில் வேறு ஒருவரை நடிக்க வைத்திருந்தால் அவர் நல்லவர் எனக் காட்டுவதற்காக அடிஷனலாக சில சீன்கள் வைக்க வேண்டி வரும்.
ஆனால் சசிகுமார் நடிப்பதால் அது தேவைப்படவில்லை. ஏனென்றால் அவருக்கு நல்லவர் என்கிற இமேஜ் இந்த படத்துக்கு முன்பே இருந்தது வசதியாகப் போய்விட்டது" உண்மை தானே. சசிகுமார் போன்ற ஹீரோ நடித்தால் அவர் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார் என்கிற இமேஜ் இருக்கிறதே... இந்த உத்தி இந்த படத்துக்கு நன்றாக உதவி இருந்தது.
ஆனால் இந்த உத்திக்கு எதிர்மாறாக வைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள் பஞ்சுவும், எஸ்.பி.முத்துராமனும். அது வரை வில்லன் நடிப்பையே தந்த ரஜினி ஒரு புறம். அது வரை ஸாஃப்ட் ஹீரோவாகவே நடித்த சிவகுமார் ஒருபுறம். இரண்டு பேரும் கடைத்தெருவில் கூவி கூவி துணி விற்கிறார்கள். இருவரின் இமேஜை வைத்து நாம் என்ன நினைப்போம்?. ரஜினி சிவகுமாருக்கு ஏதோ துரோகம் செய்யப் போகிறார்....அப்படித்தானே.
ஆனால் கதையின் போக்கு மாறி சிவகுமார் சுமித்ராவை ஏமாற்றுவதும், ரஜினி நல்ல மனிதனாக மாறுவதும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு ஷாக். கடைசியில் படம் முடிந்து வெளிவரும் போது அதுவரை ரஜினி மீதிருந்த வில்லன் இமேஜ் உடைந்து சுக்கு நூறாகி ரஜினி நல்ல நடிகனாக நம் கண்களுக்கு தெரிந்தது தான் பஞ்சுவின் அழகான திரைக்கதை உத்தி.
புவனா ஒரு கேள்விக்குறி ரஜினிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இது ரஜினிக்கு மட்டுமல்ல. மலையாளத்தில் மம்முட்டிக்கும் திருப்பு முனையாக அமைந்த படமும் கேரக்டரும் இது தான். அது வரை சிறிய ரோல்களிலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் வந்த மம்முட்டிக்கு 'புவனா ஒரு கேள்விக்குறி' மலையாளப் படம் பெரும் முன்னேற்றமாக அமைந்தது.
ஆம்... படத்தின் பெயரும் 'முன்னேற்றம்' தான். நாயகி சுமித்ரா வேடத்தில் நடிகை மேனகா. சிவக்குமார் ரோலில் நடிகர் ரதீஷ்.
'முன்னேற்றம்' படம் வெற்றி. ஆனால் அதற்கு மலையாளிகள் செய்த மாற்றம் என்ன தெரியுமா?. க்ளைமேக்ஸில் மம்முட்டி சுமித்ரா ரோலில் நடித்த மேனகாவை திருமணம் செய்து இருவரும் புது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பார்கள்.
தமிழில் ரஜினி, சுமித்ராவை திருமணம் செய்திருந்தால் படம் ஓடி இருக்குமா தெரியாது. புவனா என்கிற பெண்ணின் கேரக்டரின் புனிதத் தன்மை மாறிவிடும் என விடாப்பிடியாக இதே க்ளைமேக்ஸை வைத்தார் பஞ்சு அவர்கள். அது ரஜினியையும் பேச வைத்தது.
ஒரு நல்ல இமேஜ் உள்ள நடிகரை வைத்து எதிர்மறை செய்யும் போது அதுவே கதைக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும். இன்னும் சொல்லப் போனால் இமேஜ் ஏதுமின்றி நடிக்கும் போது கிடைக்கும் வெற்றியை விட இமேஜை மாற்றி நடிப்பது சில நேரங்களில் வென்று விடும். மம்முட்டி புதுமுக நடிகர் என்பதால் இந்தப்படம் எந்த இமேஜ் கவலையுமில்லாமல் கதைப்படி வென்றது. பின்னாளில் இதில் நடித்த ஒருவர் சூப்பர் ஸ்டார். ஒருவர் மெகா ஸ்டார். மொழி கடந்த வெற்றி....மகரிஷியின் கதையாச்சே.... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications