Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Captain Prabhakaran: விஜய் படத்தின் வசூலை தாண்டிய கேப்டன் பிரபாகரன் ரீ- ரிலீஸ்.. அதுவும் 12 நாளில் இத்தனை கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் 'புரட்சிக் கலைஞர்', 'கேப்டன்' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது என்றால் அது 1991-ல் வெளியான 'கேப்டன் பிரபாகரன்' தான். இந்தப் படம் இப்போது, 34 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸ் ஆகி, வசூலில் சரித்திரம் படைத்து வருகிறது.

Captain Prabhakaran 12th day Box Office Vijayakanth s cult classic Captain Prabhakaran 1991 returns in 4K format and creates box office history grossing 24 28 crores in just 12 days Fans celebrate the legendary actor s timeless legacy

தமிழ் சினிமா கண்ட அற்புதம்

1991-ம் ஆண்டு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தளபதி', பிரபுவின் 'சின்னத் தம்பி', கமல்ஹாசனின் 'குணா' போன்ற பிரம்மாண்டப் படங்கள் வெளியான அதே வருடத்தில், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் ஒரு ஹாலிவுட் படம் போல வெளியான திரைப்படம் தான் 'கேப்டன் பிரபாகரன்'. இந்தப் படத்தில், வெறும் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன. இது, அப்போதைய தமிழ் சினிமா வழக்கத்திற்கு முற்றிலும் மாறான ஒன்று.

படத்தில், வனத்துறை அதிகாரியான தனது நண்பன் சரத்குமார், வீரப்பனைப் பிடிக்க காட்டுக்குள் போய் காணாமல் போக, அவரைத் தேடிச் செல்லும் விஜயகாந்தின் கதைக்களம் ரசிகர்களைக் கவர்ந்தது. அப்போது போலீஸுக்கே சிம்மசொப்பனமாக இருந்த வீரப்பனின் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் அட்டகாசமாக நடித்து, தனது வில்லன் பயணத்தைத் தொடங்கினார். படத்தின் அனல் பறக்கும் வசனங்களும், சண்டைக் காட்சிகளும் ரசிகர்களைத் திரையரங்குகளில் ஆர்ப்பரிக்க வைத்தன.

மீண்டும் ஒரு சரித்திரம்

விஜயகாந்த் இப்போது நம்மோடு இல்லை என்றாலும், அவரது நடிப்பு, ரசிகர்கள் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, 'கேப்டன் பிரபாகரன்' படம் 4K தரத்தில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் மீண்டும் வெளியானது. படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நாள் முதலே, ரசிகர்களின் வரவேற்பு மலைக்க வைக்கிறது.

முதல் இரண்டு நாட்கள் சில லட்சங்கள் மட்டுமே வசூலான நிலையில், மூன்றாம் நாள் முதல், தினமும் ₹2 கோடிக்கு மேல் வசூலாகி வருகிறது. படம் வெளியாகி 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை இப்படம் ₹24.28 கோடி வசூல் செய்திருக்கிறது. இது, தமிழ்த் திரையுலகில் ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

கில்லியை மிஞ்சிய கேப்டன்

கடந்த ஆண்டு வெளியான விஜய்யின் 'கில்லி' திரைப்படம், ரீ-ரிலீஸில் கிட்டத்தட்ட ₹30 கோடி வரை வசூலித்தது. ஆனால், அந்த வசூலை அடைய 'கில்லி'க்கு ஒரு வருடம் ஆனது. ஆனால், 34 வருடங்களுக்கு முன்பு வெளியான 'கேப்டன் பிரபாகரன்' வெறும் 12 நாட்களில் ₹25 கோடிக்கு அருகில் வந்து, பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இது, வெறும் வசூல் சாதனை மட்டுமல்ல. இது, 'கேப்டன்' விஜயகாந்த் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அளவற்ற அன்பையும், அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் புகழையும் உணர்த்துகிறது. "ஒரு நல்ல கதை, ஒரு மக்கள் கலைஞன்... இந்த இரண்டும் இருந்தால், எத்தனை வருடங்கள் கழித்தும் அந்தப் படைப்பு பேசப்படும்" என்று திரையுலகப் பிரபலங்கள் இந்தப் படத்தின் வெற்றியைக் குறித்துப் பேசி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+