எதிர்பாராத மாற்றம்...இந்த வாரம் கடைசி இடத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்
சென்னை: எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று பிக்பாஸ் சொல்வது போல தான் இந்த வாரம் நடந்திருக்கிறது.
இந்த வாரத்தில் நடந்த பிரச்சினைகளை பார்க்கும்போது ரசிகர்கள் நினைத்த எலிமினேஷன் வேறு என்று கூறி வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை மீறி கடைசியில் இருக்கும் போட்டியாளரின் வாக்குகளை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எதிர்பார்க்காமல் நடந்த எலிமினேஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் தொடங்கி இதோடு 4 வாரங்கள் முடிவடைகின்றது. இந்த வாரத்தில் மூன்றாவது எலிமினேஷன் இருக்கின்ற நிலையில் யார் இந்த வீட்டை விட்டு வெளியே செல்வார் என ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏற்கனவே ரசிகர்கள் எதிர்பார்த்தபடி போன வாரத்தில் அபிஷேக் வெளியேறியது, கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாகவும், அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

நாடியா சிங் வெளியேற்றம்
முதல் வாரத்தில் நாடியா சிங் மற்றும் அபிஷேக்கும் குறைவான ஓட்டு வாக்குகளின் அடிப்படையில் பின்தங்கியிருந்த நிலையில் கடைசியாக அபிஷேக் தான் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி நாடியா சிங் வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய பிறகு அபிஷேக் ராஜாவின் மீது ரசிகர்கள் பலர் காண்டில் இருந்து வந்தனர்.

ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பு
இந்த நிகழ்ச்சியிலிருந்து அபிஷேக் வெளியேறினால் நிகழ்ச்சி நன்றாக விறுவிறுப்பாக இருக்கும் என்று பலர் கமெண்டுகளை அனுப்பி வந்தனர். இந்த நிலையில் இரண்டாவது எலிமினேஷன் ஆக அபிஷேக் வெளியேற்றப்பட்டார் தற்போது மூன்றாவது எலிமினேஷன் யாரென்று அதுதான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கேட்கும் கேள்வியாக இருந்துவருகிறது.

கடைசி இடத்தில் சின்ன பொண்ணு
ஏற்கனவே இந்த வார காயின் டாஸ்கில் பல பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதில் அதிகமாக சுருதியின் பெயர் கெட்டுப் போய் விட்டது. அதனால் அவர்தான் வெளியேறுவார் என்று நினைத்திருந்த நேரத்தில் அவரைவிடவும் வாக்குகள் அடிப்படையில் சின்ன பொண்ணு பின்தங்கி இருக்கிறார். அதனால் இந்த வாரத்தில் சின்ன பொண்ணு தான் எப்படியும் வெளியேறுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவருக்கு அடுத்ததாக அபிநய் அதற்கு அடுத்ததாக சுருதி இருக்கிறார். கடைசி இடத்தில் சுருதி, அபிநய், சின்னப்பொண்ணு மூவரும் இருக்கின்ற நிலையில் என்ன வேணாலும் நடக்கலாம் என சிலர் கருத்து கணித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications