For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களே.. சித்திரை திருவிழாவை நினைச்சுக் கவலைப்படாதீங்க.. ஹிஸ்டரி 18 டிவியில்!

Google Oneindia Tamil News

சென்னை: சித்திரை என்றாலே மதுரை சித்திரை திருவிழா நினைவுக்கு வரும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோகம்..அழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் என்று மதுரை நகரம் திருவிழா பூண்டு இருக்கும்.

லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இவை எல்லாம் கிடையாது. என்றாலும் மும்பையை தலைமை அலுவலகமாக கொண்டு செயல்பட்டு வரும் cnn news 18 சானலின் ஹிஸ்டரி 18 டிவியில் மதுரை சித்திரைத் திருவிழா...

சவுத் கிங்டம்.. மார்வல் மதுரை என்கிற தலைப்பில் சித்திரை திருவிழா மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் தல வரலாறு குறித்தும் விரைவில் ஒளிபரப்ப இருக்கிறது ஹிஸ்டரி 18 டிவி.

விரும்பும் மொழியில்

விரும்பும் மொழியில்

ஹிஸ்டரி 18 டிவியில் நிகழ்ச்சிகள் பொதுவாக ஆங்கிலத்திலும். மாநில மொழிகளுக்கு ஏற்ப தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று நீங்கள் விரும்பிப் பார்க்கும் மொழியிலும் இந்த ஹிஸ்டரி ஒளிபரப்பாக இருக்கிறது. cnn news 18 சானல் இந்திய மொழிகளின் பெரும்பாலான மொழிகளில் செய்தி சானலை வழங்கி வருகிறது.

ஹிஸ்டரி 18 டிவி

ஹிஸ்டரி 18 டிவியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் உள்ள சிறப்பம்சம்...வரலாற்று தலங்கள்...நினைவு சின்னங்கள் என்று அனைத்தையும் சிறப்பாக எடுத்து, அதன் விவரங்களை கூறி ஒளிபரப்பி வருகிறது. அதன் படி மதுரையின் மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய சிறப்பை ஒளிபரப்பத் திட்டமிட்டு, ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.

மீனாட்சி அம்மன் கோயில்

மீனாட்சி அம்மன் கோயில்

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் இருப்பதனாலேயே அந்த ஊருக்கு வருடாவருடம் பல சிறப்பம்சங்கள் கூடிக்கொண்டே இருக்கினறன. எப்போதும் இந்த சித்திரை மாதத்தில்தான் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பச்சை நிற பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்குவது என்று மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டு உலகத் தமிழர்கள் பார்வையை தன்னகத்தே ஈர்த்து இருக்கும்.

இந்த வருடம் இல்லை

இந்த வருடம் இல்லை

அழகர் ஆற்றில் இறங்கும் திருநாளில் கோடை மழை பெய்வது வருடாவருடம் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு. இந்த வருடம் திருவிழா நடக்காது என்கிற நிலையில், மக்கள் மதுரையின் பெருமைகளை ஹிஸ்டரி 18 டிவியில் கண்டு மகிழ நல்ல வாய்ப்பு. சவுத் கிங்டம் என்று அழைக்கப்படும் மதுரையின் பல சிறப்புக்களை இந்த நிகழ்ச்சியில் வழங்க ஹிஸ்டரி 18 டிவி திட்டமிட்டு இருக்கிறதாம்.

English summary
madurai chitra festival will be remembered as chithirai. madurai meenakshi amman thirukkalayana vaibokam ... the landing in the river alakur will be the festival of madurai city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X