பிக் பாஸ் தமிழ் OTTயில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்.. இந்த முறை தொகுப்பாளர் மாற்றமா??
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் பிக் பாஸ் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது.
Recommended Video
தங்களுடைய ரசிகர்களை கவர்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சி OTTயில் களம் இறங்கியுள்ளது.

டி ஆர் பி யில் பின்னடைவா? ?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் ஜனவரி 17வது தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் இந்த ஒரு ரியாலிட்டி ஷோ தான் பெரிய அளவில் டிஆர்பியை வாங்கி தந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஆர்பி எதிர்பார்த்த அளவில் உயரவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை விட குறைவாக ஒரு சில நாட்களில் பிக்பாஸ் டிஆர்பி குறைந்துவிட்டது என்று செய்திகள் பரவி வருகிறது . அதனால் அடுத்ததாக சீசன் ஆறாவது 2022ல் ஒளிபரப்பாகும் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஏற்கனவே முதல் ஐந்து சீசனுக்கு மட்டும்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸின் அடுத்த கட்டம்
இதனால் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் அடுத்த சில மாதங்களில் புத்தம் புதிதாக போட்டிக்கு என்றே ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சியை திட்டமிட்டு இருக்கிறது. ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் ஏதும் பிரச்சனைகள் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் சொந்தக்காரர்களான எண்டமால் நிறுவனத்துடன் விஜய் டிவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உளளது. இந்த நிகழ்ச்சியில் இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்
அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் ஒரு சில புது முகங்களையும், ஒரு சில பிக் பாஸ் போட்டியாளர் களையும் சேர்த்து 13 போட்டியாளர்களை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த பிக்பாஸ் ஏற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாற்பத்தி இரண்டு நாட்களுக்கு ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் கமல்தான் தொகுத்து வழங்குவார் என்று பலரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விரைவில் ஒளிபரப்பு
ஏற்கனவே பிக்பாஸ் தெலுங்கு தொகுப்பாளரான நாகர்ஜுனா கிராண்ட் பைனலுக்கு பிறகு பிக்பாஸ் தெலுங்கு ஓ.டி.டி.யை தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிக் பாஸ் லைவ் தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி ஷோ நடிகர்களை தேர்வு செய்ய தொடங்கினார் .அதேபோல தமிழ் நேரடி ஒளிபரப்பு ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு சீசன் ஓடிடி பிப்ரவரியில் ஒளிபரப்பப் தொடங்கப் போகிறது. அதைத் தொடர்ந்து தமிழ் சீசனும் ஒளிபரப்பப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications