“செயினை அடமானம் வச்சி”கூட்டத்தில் உண்மையை உளறிய கூல் சுரேஷ்.. இது தேவையா? அறிவுரை கூறும் ரசிகர்கள்
சென்னை:எதுக்கு கூவுறோம்கிறது விஷயமில்லை... எப்படி கூவுறோம்கிறது தான் விஷயமே... என்று பொன்னியின் செல்வன் படத்திற்காக வித்தியாசமான முறையில் வந்திறங்கிய கூல் சுரேஷ் பேட்டி சோஷியல் மீடியாக்களில் வழக்கம் போல் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
வெந்து தணிந்தது காடு படத்தின் புரோமோட்டராக களம் இறங்கி தமிழ் சினிமாக்களின் புரோமோட்டர் என்று சொல்லும் அளவிற்கு கூவல் சுரேஷ் ஆக அவதாரம் எடுத்துள்ள கூல் சுரேஷிடமிருந்து இன்னும் பல வித்தியாசமான கூவுதல்களை ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

கூல் சுரேஷ் டூ கூவல் சுரேஷ்
தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும்,ரசிகராகவும் தன்னை காட்டிக் கொள்பவர். இவர் படங்களில் நடித்து வந்த போது கூட பெரிய அளவில் பிரபலமடையவில்லை. ஆனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர்கள் வித்தியாசம் பார்க்காமல் எல்லா திரைப்படத்திற்கும் சென்று வெந்து தணிந்தது காடு படத்தோடு அந்த படத்திற்கும் சேர்த்து வணக்கத்தை போட்டு ஏதோ ஒரு விதத்தில் நன்கு பிரபலமாகிவிட்டார்.

ரொம்ப நல்லவர்யா இவரு
தற்போது கூல் சுரேஷ் செயல்களை பார்க்கும் பொழுது வடிவேலு காமெடியாக சொல்லும் 'எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்யா.. ரொம்ப நல்லவர்யா' என்ற வசனங்கள் தான் ஞாபகம் வருவதாக பலர் கூறி வருகின்றனர்.வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸின் போது ஆடி காரில் வந்தார் கூல் சுரேஷ், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சிக்கி கார் கண்ணாடி உடைந்து உள்ளுக்குள்ளே குமுறிகொண்டு வாயளவில் தான் அதை பற்றி கவலை படாததாக கூறினார். அதையெல்லாம் மறந்துவிட்ட கூல் சுரேஷ் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்து இறங்கி உள்ளார்.

அடுத்த ஐபோனுக்கு அடிபோடுறாரோ
சிம்புவின் படத்திற்காக தான் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இடமிருந்து ஆறுதல் அன்பளிப்பாக ஐபோனை பெற்றுக் கொண்ட கூல் சுரேஷ் தன்னுடைய பூஜை அறையில் அவரது புகைப்படத்தை வைக்கும் லெவலுக்கு சென்று விட்டார். சிம்புவின் படத்தை விளம்பரப்படுத்த வித்தியாசமான முயற்சி மேற்கொண்ட கூல் சுரேஷ் தற்போது எல்லா படத்துக்கும் விளம்பரதாரராக மாறி உள்ளதாகவும், போகிற இடத்தில் எல்லாம் புரோட்டா(ஐபோன்) கிடைக்காது என்றும் இணையத்தில் பலர் கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரத்தில் தவிர்க்க வேண்டிய வில்லங்கம்
தன்னுடைய தங்க செயினை அடகு வைத்து தன்னுடன் 21 பேர் கொண்ட குழுவை பொன்னியின் செல்வன் படத்திற்கு அழைத்துச் சென்றுள்ள கூல் சுரேஷ், படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் பயன்படுத்திய அதே குதிரையை வேண்டுமென்று அடம்பிடித்து, கண்டுபிடித்து அந்தக் குதிரையில் சென்று பொன்னியின் செல்வன் படம் ஓடும் தியேட்டரில் இறங்கியுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தோடு கூல் சுரேஷின் கூவும் பணி முடிந்து விட்டதாக நினைத்த பலருக்கு இவருடைய என்ட்ரி கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்திருக்கும். அதிலும் தன் சொந்த செலவில் இப்படி இவர் செய்வதை பார்ப்பவர்கள் பலர் கூல் சுரேஷ் வேடிக்கையாக பார்த்துவிட்டு கடந்து செல்கின்றனர். காருக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரும் கேட்க மாட்டாங்க. குதிரைக்கு ஏதாவது ஆச்சுன்னா ப்ளூ கிராஸ் வந்துரும்னு கூல் சுரேஷுக்கு அறிவுரை செய்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications