Coolie vs war 2 box office collection: 5ஆவது நாள் வசூலில் அடித்து ஆடிய கூலி! சற்று தள்ளாடிய வார் 2!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் கூலி, ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் கடந்த 14 ஆம் தேதி ஒரே நாளில் வெளியான நிலையில் இரண்டில் எந்த படம் 5ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது என்பதை பார்க்கலாம். இரு ஸ்டார்டாம்களின் படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் யாருடைய படம் நின்று ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் 172 ஆவது படமான கூலி, கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Coolie vs War 2 2

சென்னையில் மேன்சன் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. இங்கு தங்கும் இளைஞர்களுக்கு சில நல்ல விதிமுறைகளை விதிக்கிறார். இந்த விடுதிக்கு வார்டன் போல் லொள்ளு சபா மாறன் இருக்கிறார். இவர் கடைசி வரை ரஜினியுடன் நடித்து பெரும் பெயரை பெற்றுள்ளார்.

தேவா மேன்சன்

இந்த நிலையில் "தேவா மேன்சன் " நடத்தும் ரஜினிக்கு அவருடைய நண்பர் சத்யராஜ் மாரடைப்பில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அங்கு செல்கிறார். ஆனால் அவரை பார்த்ததும் சத்யராஜின் 3 மகள்களான ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் "அங்கிள்" என ஓடி வந்து தங்களது துக்கத்தை பகிர்ந்து கொள்வார்கள் என நினைத்தால் ஸ்ருதியோ, "இங்கு ஏன் வந்தீர்கள்" என கத்தி கூப்பாடு போட்டு ரஜினியை வெளியே அனுப்புகிறார்.

நட்புக்கு மரியாதை

ஆனால் நட்புக்கு மரியாதை கொடுக்கும் ரஜினியோ நண்பரின் இறுதி சடங்கு வரை வெளியவே இருந்து அஞ்சலி செலுத்துகிறார். அப்போது அவருடைய நண்பர்களிடம் கேட்ட போது அவருக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். உடனே ரஜினி, தனது நண்பரின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த போது அவரது மரணம் இயற்கையானது இல்லை, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்ததால் நடந்தது என தெரியவருகிறது. யார் அந்த கொலையாளி என்பதை கண்டறிகிறார் ரஜினி.

சத்யராஜை கொலை செய்தது யார்

இந்த கொலைக்கு காரணம் துறைமுகத்தில் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு தொடர்பிருப்பது தெரிகிறது. அந்த கும்பலின் தலைவனை ரஜினி பழிவாங்குகிறாரா, ஒரே ரூமில் உபேந்திரா ஏன் அடைந்திருக்கிறார், ரஜினி மீது ஸ்ருதிக்கு கோபம் ஏன் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும்.

ரித்திக்கின் வார் 2 படம்

அது போல் ரித்திக் ரோஷனின் வார் 2 என்ற இந்தி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதால் இரு படங்களும் 14 ஆம் தேதி ரிலீஸானது. வார் 2 படம் அதிரடி த்ரில்லர் படமாகும். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்துள்ளார்.

வார் 2 பர்ஸ்ட் பார்ட்

வார் 2 படத்தின் முதல் பாகத்தில் டைகர் ஷெராஃப் நடித்திருந்தார். தற்போது இந்த 2ஆவது பாகத்தில் என்டிஆர் இணைந்துள்ளார். உளவு பணி சார்ந்த கதையை கொண்டது. இதில் ரித்திக் ரோஷன் ஒரு ரா ஏஜென்சியில் பணிபுரிபவராக நடித்துள்ளார். காளி எனும் சர்வதேச மாஃபியா கும்பல் உள்ளது.

வார் 2 படம் எப்படி இருக்கிறது

இந்தியாவை பலவீனப்படுத்துவதும் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதும்தான் இந்த காளி குழுவின் நோக்கம். இந்த குழுவில் ரித்திக்கும், ஜூனியர் என்டிஆரும் சேர்கிறார்கள். இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. காளி குழு தனது இலக்கை அடைந்ததா என்பதுதான் மீதி கதை. மேலும் ரித்திக் ரோஷனும் ஜூனியர் என்டிஆரும் எதற்காக மோதிக் கொள்கிறார்கள் என்பதும் திரையில் பார்த்தால் தெரியவரும்.

கூலி - வார் 2 ஒரு ஒப்பீடு

தற்போது கூலியும், வார் 2 படமும் இரு நட்சத்திரங்கள் நடித்த படங்களாகும். இவற்றில் எந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் Sacnilk என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது. இரு படங்களும் இணைந்து ரூ 100 கோடியை முதல் நாளில் வசூலித்தாலும் நாளுக்கு நாள் இரு படங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.

2, 3,4 ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

இரண்டாவது நாள் கூலி 54 கோடி வசூலை குவித்துள்ளது. அதே போல் வார் 2 படம் ரூ 57 கோடியை பெற்றது. மூன்றாவது நாளான நேற்று கூலி திரைப்படம் இந்தியளவில் 38.5 கோடி வசூலை பெற்றது. ஆனால் வார் 2 படம் ரூ 33 கோடிதான் பெற்றது. எனவே கடந்த 3 நாட்களில் வார் 2 படம் மொத்தமாக ரூ. 142 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் கூலி திரைப்படமோ 3 நாட்களிலும் மொத்தமாக ரூ 158.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 4 ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரு படங்களும் குறைந்த வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது.

4ஆவது நாள் வசூல்

அந்த வகையில் 4ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று கூலி படம் ரூ 35.25 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. வார் 2 திரைப்படமானது ஞாயிற்றுக்கிழமை அன்று 31.3 கோடியாகும்.

வார இறுதி

அது போல் வார இறுதி முடிந்து திங்கள்கிழமை வந்ததும் தியேட்டர்கள் காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை கூலி படத்தை பார்க்க ஏராளமானோர் கூடினர் என்கிறார்கள். அது போல் இந்தியிலும் வார் 2 படத்திற்கு அமோக ஆதரவு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

5ஆவது நாள் வசூல்

5ஆவது நாள் வசூல் இரு படங்களுக்கும் குறைந்திருந்தாலும் திங்கள்கிழமையில் இது அதிகம்தான் என்கிறார்கள். அந்த வகையில் கூலி படம் ரூ 8.37 கோடியும் (மாலை காட்சி வரை), வார் 2 படம் ரூ 6.66 கோடியும் வசூலானது. ஆக இரு படங்களும் கடந்த 5 நாட்களில் முறையே ரூ 202.87 கோடியும், 180 கோடியும் வசூலித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+