Coolie vs war 2 box office collection: கூலி ரூ 216 கோடி! முந்த முயலும் வார் 2! 6வது நாள் வசூல் என்ன?
சென்னை: ரஜினிகாந்தின் கூலி, ரித்திக் ரோஷனின் வார் 2 ஆகிய படங்கள் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் எந்த படம் 6ஆவது நாள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்தது என்பதை பார்க்கலாம். இரு படங்களில் யாருடைய படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த், உபேந்திரா, சத்யராஜ், சவுபின், நாகார்ஜுனா, ஆமீர் கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் 172 ஆவது படமான கூலி, கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

சென்னையில் மேன்சன் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. இங்கு தங்கும் இளைஞர்களுக்கு சில நல்ல விதிமுறைகளை விதிக்கிறார். அதாவது குடிக்கக் கூடாது, சிகரெட் பிடிக்கக் கூடாது. இரவு நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது உள்ளிட்ட விதிகள் இந்த மேன்சனில் உள்ளன.
தேவா மேன்சன்
அந்த "தேவா மேன்சன் " நடத்தும் ரஜினிக்கு அவருடைய நண்பர் சத்யராஜ் மாரடைப்பில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், அவரது இறப்பு இயற்கையானது அல்ல, யாரோ நெஞ்சில் ஓங்கி அடித்தது போல் இருந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நண்பனை கொலை செய்து , 3 பெண் குழந்தைகளையும் நிராதரவற்றவர்களாக மாற்றியது யார் என்பதையும் ரஜினி கண்டறிகிறார்.
ரஜினி பிளாஷ்பேக்
இந்த படத்தில் ரஜினிக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் சூப்பராக அமைக்கப்பட்டுள்ளது. அது போல் ரித்திக் ரோஷனின் வார் 2 என்ற இந்தி படமும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. உளவு பணி சார்ந்த கதையை கொண்டது. இதில் ரித்திக் ரோஷன் ஒரு ரா ஏஜென்சியில் பணிபுரிபவராக நடித்துள்ளார். காளி எனும் சர்வதேச மாஃபியா கும்பல் உள்ளது.
இந்தியாவை பலவீனப்படுத்துவதும் பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதும்தான் இந்த காளி குழுவின் நோக்கம். இந்த குழுவில் ரித்திக்கும், ஜூனியர் என்டிஆரும் சேர்கிறார்கள். இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. காளி குழு தனது இலக்கை அடைந்ததா என்பதுதான் மீதி கதை.
கூலி வெர்சஸ் வார் 2
கூலியும், வார் 2 படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலை் எவ்வளவு பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம். அந்த வகையில் Sacnilk என்ற டிராக்கரின் டேட்டாவின்படி, கூலி படம் முதல் நாளில் 65 கோடியும் வார் 2 ரூ 51 கோடியும் வசூலித்தது. இரு படங்களும் இணைந்து ரூ 100 கோடியை முதல் நாளில் வசூலித்தாலும் நாளுக்கு நாள் இரு படங்களுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.
4 நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
இரண்டாவது நாள் கூலி 54 கோடி வசூலை குவித்துள்ளது. அதே போல் வார் 2 படம் ரூ 57 கோடியை பெற்றது. மூன்றாவது நாளான நேற்று கூலி திரைப்படம் இந்தியளவில் 38.5 கோடி வசூலை பெற்றது. ஆனால் வார் 2 படம் ரூ 33 கோடிதான் பெற்றது. எனவே கடந்த 3 நாட்களில் வார் 2 படம் மொத்தமாக ரூ. 142 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் கூலி திரைப்படமோ 3 நாட்களிலும் மொத்தமாக ரூ 158.25 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 4ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று கூலி படம் ரூ 35.25 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. வார் 2 திரைப்படமானது ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ. 31.3 கோடியாகும்.
வார இறுதி
அது போல் வார இறுதி முடிந்து திங்கள்கிழமை வந்ததும் தியேட்டர்கள் காலியாக இருக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை கூலி படத்தை பார்க்க ஏராளமானோர் கூடினர் என்கிறார்கள். அது போல் இந்தியிலும் வார் 2 படத்திற்கு அமோக ஆதரவு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
5,6 ஆவது நாள் வசூல்
5ஆவது நாள் வசூல் இரு படங்களுக்கும் குறைந்திருந்தாலும் திங்கள்கிழமையில் இது அதிகம்தான் என்கிறார்கள். அந்த வகையில் கூலி படம் ரூ 8.37 கோடியும் , வார் 2 படம் ரூ 6.66 கோடியும் வசூலானது. அது போல் 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று கூலி படம் ரூ 9.50 கோடியும் வார் 2 படம் ரூ. 8.25 கோடியும் வசூலித்தது.
கூலி, வார் 2 மொத்த வசூல்
கூலியை வார் 2 படம் முந்தும் என வடஇந்திய ரசிகர்கள் விரும்பினர். 6 நாட்களில் கூலி படம் மொத்தம் ரூ 216 கோடியையும் வார் 2 படம் 190 கோடி ரூபாய் வசூலையும் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications