தேவயானி தந்த இன்ப அதிர்ச்சி.. சந்தில் நடந்து வந்து, கிங்காங் வீட்டுக்குள் நுழைந்த மற்றொரு பிரபலம்.. செம
சென்னை: கிங்காங் எளியவராக இருந்தாலும், தன்னுடைய மகள் திருமணத்தை பிரம்மிப்பாக நடத்தி காட்டியது, இந்த திருமணத்துக்காக பிரபலங்களை அழைத்திருந்தது, அவர்கள் திருமணத்துக்கு வராமல் போனது, என அனைத்துமே செய்தியாக வந்து பரபரப்பை தந்துவிட்டது. எனினும், அதற்கு பிறகு வந்த பிரபலங்களை பற்றி சொல்லியாக வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
கிங்காங் கல்யாணத்துக்கு முதல் நபராக வந்தவர் மன்சூர் அலிகான்.. ஆனால், மதுரையில் ஷூட்டிங்கில் இருந்ததால், கிங்காங் மகள் திருமணத்துக்கு மன்சூர் அலிகானால் வரமுடியவில்லை.. எனினும் வீடியோ பதிவிட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

மன்சூர் அலிகான்
இதற்கு காரணம், அரும்பாக்கம் திருநகரில் மன்சூரலிகான் வீடு ஒன்றை வைத்திருந்தார்.. அன்றைய காலகட்டத்தில், கிங்காங், போண்டாமணி மட்டுமல்லாமல், வடிவேலு, விவேக்குடன் நடித்த வாய்ப்பு இல்லாதவர்களை தன்னுடைய அங்கே தங்கவைத்து, 3 வேளையும் சாப்பாடு போட்டவர்.. இந்த பாசம் இன்றுவரை தொடர்கிறது. அதனாலேயே கிங்காங் மகளுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ பதிவிட்டிருந்தார் மன்சூர் அலிகான்.
அடுத்ததாக, வடிவேலு கிங்காங்குடன் போன் போட்டு பேசியிருக்கிறார். ஆளாளுக்கு ஒவ்வொருத்தன் ஒவ்வொரு விதமாக பேசுவான், அதையெல்லாம் மனசில் வெச்சுக்காதே பிரம்மாதமாக கல்யாணம் செய்துட்டே, உன் உழைப்புதான் காரணம் என்றெல்லாம் பேசியிருந்தார்.. இந்த ஆடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது..
1 லட்சம் தந்த வடிவேலு
பல வருடமாகவே வடிவேலுவை சினிமாவில் பலரும் குற்றஞ்சாட்டி வந்தபோது, கிங்காங் மட்டும்தான், "அவர் நல்லவரோ, கெட்டவரோ தெரியாது.. அவருடைய படங்களில் நான் நடித்ததால்தான், எனக்கு நிறைய புகழ் கிடைத்தது. அந்த புகழை வைத்துதான், கலை நிகழ்ச்சிகளில் சம்பாதித்து வருகிறேன்"என்று நன்றியுடன் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல, வடிவேலு சார் ஒரு லட்சம் ரூபாய், மகளின் திருமணத்துக்கு தந்ததாக கிங்காங் கூறியிருக்கிறார்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், நேற்று கிங்காங் வீட்டுக்கே சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார்.. எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில், ஒரு சந்துக்குள்ள கிங்காங் வீடு உள்ளது.. அந்த சந்தில் கார் போகாது.. எனவே காரை நிறுத்திவிட்டு, கிங்காங் வீட்டுக்கு நடந்து சென்றார் சிவகார்த்திகேயன்.. கிங்காங் மகள் கீர்த்தனா சிவகார்த்திகேயன் ஃபேன் என்பதால், அனைவருமே மகிழ்ச்சியாகிவிட்டார்கள்..
சிவகார்த்திகேயன்
கிங்காங் பத்திரிகை வைத்தும் யாருமே வரவில்லை என்று, சோஷியல் மீடியாக்கள், சேனல்களில் திரும்ப திரும்ப சொல்லி கொண்டேயிருந்ததுகூட, இவர்களின் மனம் மாற காரணமாக இருந்திருக்கலாம். அதற்காக யாரையுமே தவறாக பேசவும் கூடாது, கணிக்கவும் கூடாது.. அதையெல்லாம் நொறுக்கி விட்டு, விஸ்வரூபமாய் நிற்பார்கள். அப்படித்தான் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
தேவயானி
தேவயானி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.. அதில், அந்த திருமணம் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில்தான்.. 400 மீட்டரில்தான் இருக்கும்.. நடந்தேகூட வந்திடலாம்.. நாங்கள் கல்யாண மண்டபத்துக்கு காரில் வந்தபோது, மண்டபம் வாசலிலேயே ஜேஜே என கூட்டம் இருந்தது.. கூட்டத்தை பார்த்து பயமாகிவிட்டது.. அதனால், கிளம்பி வந்துட்டேன் என பதிவிட்டிருந்தார்..
தேவயானி சொல்வது நியாயமான காரணம்தான்.. கூட்டத்தை சமாளித்து, மிகவும் சிரமப்பட்டுதான் டி.ராஜேந்தரும் மண்டபத்துக்குள் வரமுடிந்தது..
பெரிய மண்டபத்தில் திருமணம் வைக்க வசதியில்லை.. அவுட்டரில் திருமணத்தை வைக்கலாம் என்றால், இப்போது வந்துள்ள கூட்டம்கூட வராமல் போயிடுவார்களோ என்று நினைத்தேன்" என்று கிங்காங் ஒரு பேட்டியில் வருத்தப்பட்டிருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications