பிரபல அரசியல்வாதி நடிகைக்கு எய்ட்ஸ்? டெஸ்ட் எடுத்த ஹீரோயின்! வதந்தியில் சிக்கிய பரிதாப நடிகர் மோகன்
சென்னை: நடிகர் மோகனை பல பத்திரிகைகள் அன்று கேவலப்படுத்தின. ஒரு வாரப் பத்திரிகையில், மோகனை ராமராஜனுடன் கேவலப்படுத்தியிருந்தனர்.. "மோகன், ராமராஜன் இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், ராமராஜனுக்கு கொஞ்சம் நடிக்க தெரியும்" என்று எழுதினார்கள்.. எல்லா படங்களிலும் பாட்டுக்காரனாகவே மோகன் நடித்திருந்தார்.. இவரது சொந்த குரல் யாருக்குமே தெரியாது என்றெல்லாம் டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகரும், சினிமா ஆய்வாளருமான டாக்டர் காந்தராஜ், "நடிகர் மோகன் என்று சொல்வதை விட, 'மைக் மோகன்' (Mike Mohan) என்று சொன்னால்தான் பலருக்கும் புரியும்.. ஒரு காலகட்டத்தில், ரஜினி, கமலுக்கே டஃப் ஃபைட் தந்தவர்..

கமலுக்கு மாற்று மோகன்?
அதாவது ரஜினிக்கு மாற்றாக வந்தவர் விஜயகாந்த் என்றால், கமலுக்கு மாற்றாக வந்தவர் மோகன் என்றார்கள்.. ஆனால், மோகனால் கமல் மார்க்கெட் பாதிக்கப்படவில்லை என்பதே உண்மை..
மோகன் ரொம்ப சாஃப்ட்டான நடிகர்.. எதிர்பார்க்கும் அளவுக்கு அவரிடம் எதுவும் இல்லை.. கொடுக்கிற ரோலை சரியாக செய்துவிட்டு போவார்..
வெற்றிப்படங்களில் எல்லாம் மோகன் இருந்தார்.. ஏறக்குறைய விஜய் போலத்தான்.. மோகனால் படங்கள் ஓடவில்லை.. ஆனால் ஓடக்கூடிய படங்களில் மோகன் இருந்தார்.. மோகன் ரோலில் யார் நடித்திருந்தாலும் அந்த படங்கள் ஓடியிருக்கும்..
இளையராஜாவின் பாடல்களும் இவரது வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.. ஒரு கட்டத்தில், ஒரே நாளில் இவருக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகி, மூன்றுமே வெள்ளி விழாப் படங்களாக ஓடிய வரலாறு இவருக்கு உண்டு...
மோகன் - ராமராஜன் ஒப்பீடு
மோகனை பல பத்திரிகைகள் மிகக் கேவலப்படுத்தின. ஒரு வாரப் பத்திரிகையில், இவரை ராமராஜனுடன் கேவலப்படுத்தினார்கள்.. "மோகன், ராமராஜன் இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், ராமராஜனுக்கு கொஞ்சம் நடிக்க தெரியும்" என்று அப்பத்திரிகை எழுதியிருந்தது..
எல்லா படங்களிலும் பாட்டுக்காரனாகவே மோகன் நடித்திருந்தார்.. அதேபோல இவரது இவரது சொந்த குரல் யாருக்குமே தெரியாது.. இவருக்குக் டப்பிங் கொடுத்தது, நடிகர் விஜய்யின் தாய்மாமன் சுரேந்தர்..
சினிமா உலகை விட்டு திடீரென மோகன் விலகியதற்கும், தலைமறைவானதற்கும் காரணம், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று வதந்திகள் கிளம்பியது....
பிரபல நடிகைக்கு எய்ட்ஸ் வதந்தி
இதே போல இன்னொரு நடிகையும் எய்ட்ஸ் வதந்திக்கு ஆளானார்.. உடம்பு சரியில்லாமல் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்த லேப் டெக்னீசியன் ஒருவர், நடிகையின் ரத்தத்தை எடுத்து எய்ட்ஸ் பரிசோதனை செய்து, அந்த நடிகைக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக வதந்தியை கிளப்பிவிட்டார்.
ஆனால், அந்த நடிகை எய்ட்ஸால் பாதிக்கப்படவில்லை.. இன்றும் அந்த நடிகை உயிரோடுதான் இருக்கிறார்.. இந்த சம்பவம் நடந்த பல காலம் ஆகிவிட்டது.. எனினும், இப்படியொரு வதந்தி கிளம்பியதுமே, அந்த நடிகையின் மார்க்கெட்டும் கீழே சரிய துவங்கிவிட்டது.
மற்றொரு பிரபல நடிகைக்கும் இப்படியான எய்ட்ஸ் என்று வதந்தி அப்போது பரவிவிட்டது. ஆனால் அந்த நடிகை, இன்றும்கூட அரசியலிலும் சமூகத்திலும் பிரபலமாக இருக்கிறார்..
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரியாக நான் அன்று பணியாற்றி கொண்டிருந்ததால், மேற்கண்ட நடிகைகள் பதறியடித்து கொண்டு என்னிடம் வந்தார்கள்.. 'எய்ட்ஸ் நோய் வந்தாலும்கூட, பயப்பட வேண்டாம்' என்று அவர்களுக்கு கவுன்சிலிங் தந்து அனுப்பி வைத்தேன்.
மோகனுக்கு வந்த நெருக்கடி
அந்த வரிசையில்தான் மோகனும் எய்ட்ஸ் வதந்தியால் பாதிக்கப்பட்டார்.. யாரோ திட்டமிட்டு இதை பரப்பினார்கள் என்று சொல்லப்பட்டது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக நாகப்பட்டினத்துக்கு நான் சென்றிருந்தேன்.. அங்கே ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன்.. நான் அந்த ஓட்டலின் படியிறங்கி வரும்போது, நடிகர் மோகன் படிக்கட்டில் ஏறி மேலே வந்தார்.. என்னை பார்த்ததுமே, "சார், நீங்கள் தானே அந்த எய்ட்ஸுக்கான டாக்டர்? என்னைப்பற்றி இப்படி எல்லாம் சொல்கிறார்கள்" என்று வருத்தப்பட்டு பேசினார்.
மோகனுக்கு அந்த நோய் இல்லாவிட்டாலும், அந்த வதந்தியால் அவர் ரொம்பவே பயந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.. அதனால்தான் என்னை அன்று சந்தித்து பேசினார்..
சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி
எய்ட்ஸ் வதந்தியால் தலைமறைவாகி போயிருந்த மோகன், தற்கொலை செய்து கொண்டு இறந்த சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெங்களூரிலிருந்து சென்னை வந்தார்.. அதாவது "தனக்கு அந்த நோய் இல்லை, தான் நலமாகத்தான் இருக்கிறேன்" என்று எல்லாருக்கும் வெளிப்படையாக காட்ட வேண்டிய கட்டாயம் அன்று மோகனுக்கு ஏற்பட்டதால்தான் பெங்களூருவிலிருந்து அஞ்சலி செலுத்த சென்னை வந்துவிட்டு போனார்.
அதேபோல பல முன்னணி நடிகைகள் அன்று எய்ட்ஸ் நோய்க்கு பயந்தார்கள்.. ஆனால் வெளிப்படையாக பத்திரிகைகளில் பெயர் வந்தது மோகனுக்கு மட்டும்தான்.. அந்த நோயால் மோகன் பாதிக்கப்படவில்லை என்பதே உண்மை.
"தவறான ஒழுக்கத்தினால் வரும் நோய் எய்ட்ஸ்" என்ற சமூகத்தின் தவறான பார்வையும், அவப்பெயர் ஏற்பட்டுவிடுமே என்ற பயமும்தான், பலரும் தலைமறைவாக காரணமாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications