Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊருக்கே பஞ்சாயத்து பண்றவங்களுக்கே இப்படியா நிலைமை... லட்சுமி ராமகிருஷ்ணனுக்காக வாதாடும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தற்போது விருது வழங்கும் விழாவில் நடைபெற்றதை வைத்து நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு குரல் எழுப்பி வருகிறார்.

தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்விற்கு ஒரு மணி நேரமாக சென்று காவலிருந்த லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக தற்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்களும் கமெண்டுகளை அனுப்பி வருகிறார்கள்.

விருது வழங்கும் நிகழ்வில் தனக்கு நிகழ்ந்ததை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதும் அதற்கு ரசிகர்கள் பலர் ஆறுதலை கூறி வருகிறார்கள்.

இவருக்கே இப்படியா நிலைமை

இவருக்கே இப்படியா நிலைமை

ஊருக்கே பஞ்சாயத்து பண்ற.. பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரு விருதுக்காக பஞ்சாயத்து பண்ண வச்சுட்டாங்க என்று ஆதங்கப்பட்ட பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவை பார்த்தவர்கள் இம்மாதிரியான அரசு விழாக்களை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் மேலும் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பிரபலம்

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பிரபலம்

சில வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த திரை துறை க்கான விருதுகளை தற்பொழுது தமிழக அரசு வழங்கி வருகிறது.அந்த வரிசையில் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்காக, பிரபல நடிகையும் இயக்குனருமான 'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.விருதை பெற ஆர்வமுடன் நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நீண்ட நேரமாக காத்திருந்தும்,2011 ஆம் ஆண்டிற்கான விருது பட்டியல்களே முடிந்தும் தன்னுடைய பெயர் அழைக்கப்படாதவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தவறை சரி செய்தல்

தவறை சரி செய்தல்

கோபமும் அதிர்ச்சியும் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், நேரடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சென்று, தன்னுடைய பெயர் விருது பட்டியலில் அழைக்கப்படாததை குறித்தும், தன்னை அழைத்து அவமானப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தங்களது தவறை உணர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனை சமாதானப்படுத்தி, அவருக்கு வழங்க வேண்டிய விருதையும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

நெட்டிசன்களின் கருத்துக்கள்

நெட்டிசன்களின் கருத்துக்கள்

விருதைப் பெற்ற லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் அவர்களுக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதோடு, தன்னுடைய பெயர் மட்டுமின்றி வேறு சிலரது பெயர்களும் விருது பட்டியலில் இல்லாமல் இருந்தது சற்று ஏமாற்றமாக இருந்ததாகவும், ஆனால் விழா ஒருங்கிணைப்பு குழுவினர் அதை மிக விரைவாக கையாண்டு சரி செய்ததாகவும் அவர்களுக்கும் நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் ஒருவேளை லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து பண்ணுகிற வேலை பார்ப்பதால் விருதையும் பஞ்சாயத்து பண்ணியே வாங்கட்டும் என்று விழா குழு நினைத்து விட்டார்கள் போல என்று கலாய்த்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+