முன்னணி நடிகர்களின் மெகா உதவி.. கடலில் விழுந்தாரே விஜய் ஆண்டனி.. என் உயிர் தோழன் பாபு ஞாபகமிருக்கா?
சென்னை: கிட்னி பாதிப்பால், டயாலிசிஸ் சிகிச்சையில் உள்ள நடிகர் பொன்னம்பலம், "எனது எதிரிக்குகூட டயாலிசிஸ் பிரச்சனை வரக்கூடாது.. 250 ஊசிகளுக்கு மேல் போட்டுவிட்டேன்.. 2 நாளைக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது... உப்பு இல்லாமல் சாப்பிடுவதுதான் உலகத்திலேயே அதிகபட்ச தண்டனையாக இருக்க முடியும், உயிரை விட்டுவிடலாம்ன்னு நினைக்கிற அளவுக்கு கிட்னி பிரச்சனை இப்படி கொண்டுவந்துவிட்டது" என்று கலங்கி சொல்லியிருந்தார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பெரும்பாலும் ஹீரோக்களுக்கு டூப் போட்டே சண்டை காட்சிகள் எடுக்கப்படுகின்றன.. 80களில் பச்சைக்கொடி என்ற பாண்டியராஜன் படம் வெளியானது. இதில், அண்ணாநகர் டவரிலிருந்து கீழே விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது..

கிழிந்து நொறுங்கிய அட்டை பெட்டி
எப்போதுமே கீழே விழும் காட்சி என்றால், நெட் கட்டி விடுவார்கள்.. அட்டைப்பெட்டிகளையும் அடுக்கி வைத்திருப்பார்கள்.. எவ்வளவுதான் நெட் கட்டிவிட்டாலும், மேலிருந்து குதிக்கும்போது, சிலசமயம் நெட் கிழியவும் வாய்ப்புள்ளது.. ஆனால், அன்றைய தினம் பழைய அட்டை பெட்டிகளுக்கு பதிலாக, புதிய அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்..
இது தெரியாமல், நடிகர் பாண்டியராஜனுக்கு பதிலாக டூ போட்ட கனல் கண்ணன் அண்ணாநகர் டவரிலிருந்து கீழே குதித்துவிட்டார். ஆனால், இடறி விழுந்து முதுகுத்தண்டில் முறிவு ஏற்பட்டுவிட்டது.. 6 மாதத்துக்கு மேல் ரெஸ்ட்டில் இருக்கும்படி நிலைமை வந்தது. இப்படி ரிஸ்க் எடுத்து இன்று ஸ்டண்ட் கலையில், உயர்ந்த நிலையை எட்டிவிட்டார் கனல் கண்ணன்.
முதுகுதண்டு காயம்
இதுபோல பலமுறை நடிகர் அஜித்துக்கும் ஸ்டண்ட் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.. பைக் விபத்துக்களும் நடந்துள்ளது.. இதில் நிறைய முறை முதுகுத்தண்டில்தான் அஜித்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஒருசிலர் தங்களையும் ஹீரோவாகவே நினைத்து கொள்வார்கள்.. இதனால் ரிஸ்க்கான சண்டை காட்சிகளையம் ஏன் நாம் செய்யக்கூடாது? என்று நினைக்கிறார்கள்.. அப்படித்தான் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தில், நடித்த பாபு என்ற ஹீரோவுக்கு நடந்தது.
அந்த ஒரு படத்தினால் 15 படங்கள் உடனே புக்காயின. 2வது படத்தில் நடித்து கொண்டிருந்தபோது, 2வது மாடியிலிருந்து கீழே குதிக்கும்
காட்சி படமானது, தானே குதிப்பதாக சொன்னார்.. பல ஸ்டண்ட் கலைஞர்கள் சொல்லியம் கேட்காமல், பாபு ரிஸ்க் எடுத்தார்.. கடைசியில் முதுகுதண்டு அடிப்பட்டு, இடுப்புக்கு கீழே செயலிழந்துவிட்டது.. 30 வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்து, சமீபத்தில் இறந்துவிட்டார்.. அவருடைய திரை வாழ்க்கையுடன் மொத்த வாழ்க்கையும் அத்துடன் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2
இப்படி பல படங்கள் புக்காகிய நிலையில், ரிஸ்க் ஆன காட்சியில் நடித்திருக்கக்கூடாது.. அதேபோல தங்களது உயிரை பணயம் வைத்து, சில ஹீரோக்களை காப்பாற்றிய கதைகளும் இங்குண்டு..
உதாரணத்துக்கு,. பிச்சைக்காரன் 2 படத்தில் மலேசியாவில் விஜய் ஆண்டனி படப்பிடிப்பு நடந்தது.. அங்கு படகில் செல்லும் படமாக்கப்பட்டுவிட்டது.. அந்த காட்சி சரியாக வந்தாலும், அதே காட்சியை இன்னும் சிறப்பாக நடிப்பதாக கூறி, மீண்டும் படகில் வேகமாக சென்றுள்ளார் விஜய் ஆண்டனி.
கடலில் விழுந்த விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனிக்கு எதிரே இன்னொரு படகில் கேமரா பொருத்தப்பட்டு, ஷூட் செய்யப்பட்டது. ஆனால், விஜய் ஆண்டனியின் படகு, கட்டுப்பாட்டை இழந்து, எதிரிலிருந்த படகு மீது பயங்கரமாக மோதியது.. இதில் முகமெல்லாம் ரத்த காயம் ஏற்பட்டு, கடலுக்குள்ளேயே கவிழ்ந்துவிட்டார்.. உடனே மற்றொரு படகிலிருந்த ஸ்டண்ட் கலைஞர், தண்ணீருக்குள் பாய்ந்து, விஜய் ஆண்டனியை மீட்டு கொண்டுவந்தார்.
இப்படியான ரிஸ்க்குள் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உள்ளது.. ஆனால், சினிமாவில் பெரும்பாலான கை தட்டல்கள் ஹீரோக்களுக்குதான் போய் சேருகின்றன.. சேருகிறது. அதேபோல நடிகர்கள் தங்களது சம்பளத்தையும் கோடிகளிலும், லட்சங்களிலும் வாங்குகிறாரகள். ஆனால் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அந்த அளவுக்கு சம்பளம் தரப்படுகிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்..
முன்னணி ஹீரோ உதவி
நிறைய முன்னணி நடிகர்கள், ஸ்டண்ட் கலைர்களுக்கு உதவி செய்வதை மறுக்க முடியாது. அதேபோல ரிஸ்க்கான காட்சிகள் நடிக்கும்போது, அந்த பட கம்பெனி சார்பாக ஒரு தொகை ஸ்டண்ட் கலைஞருக்கு தரப்படும்.. எந்த ஹீரோவுக்காக , அந்த ஸ்டண்ட் கலைஞர் ரிஸ்க் எடுக்கிறாரோ அந்த ஹீரோவும் ஒரு தொகையை அவருக்கு தருவார்..
இப்படி நிறைய நல்ல விஷயங்கள் செய்தாலும்கூட, ஸ்டண்ட் கலைஞர்களுக்கான ஆபத்துகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications