விஜயகாந்த்தின் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர".. வியப்பை தரும் மாநகர காவல்.. பூரித்த லியாகத் அலிகான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் பற்றின வீடியோ ஒன்றை, அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.. விஜயகாந்த் குறித்து பிரபல வசனகர்த்தாவும், இயக்குனருமான லியாகத் அலிகான் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா?

விஜயகாந்த்தின் 150 வது படம் மாநகர காவல்.. இந்த படத்தின் இயக்குனர் எம்.தியாகராஜன் மிகவும் திறமைசாலி.. 1991ம், ஆண்டு ஜூன் 28ம் தேதி ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படமாக இந்த படம் வெளியாகியிருந்தது.. ஆனால், 2 வருடங்களுக்கு முன்பு, ஏவி.எம்.ஸ்டுடியோ வாசலில், இறந்துகிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியையே தந்திருந்தது.

television vijayakanth

பரிசீலனை: ஆனால், மாநகர காவல் படத்தை யார் டைரக்ட் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டபோது, பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன.. இறுதியாக, எம்.தியாகராஜனை, விஜயகாந்த்தே தேர்ந்தெடுத்துள்ளார்.
விஜயகாந்த், சுமா, ஆனந்த ராஜ், லட்சுமி, நாசர், வைஷ்ணவி, தியாகு உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.. சந்திரபோஸ் இசையில் "வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர" என்ற பாடல் இன்றும்கூட ரசிகர்களால் மறக்க முடியாத பாடலாக உள்ளது.

ஆக்‌ஷன்: ஆக்‌ஷனும், அரசியலும் கலந்த "மாநகர காவல்" படம், மிகப்பெரிய வெற்றியை அன்று பெற்றது. இதற்கு முக்கிய காரணம், இந்த படத்தில் பிரதமர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.. இது கிட்டத்தட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை நினைவுப்படுத்துவது போலவே இருந்தது... அதுவும் இல்லாமல், போலீஸ் கெட்டப்பில் விஜயகாந்த் நடித்தாலே, அந்த படம் சக்ஸஸ்தான் என்பதும் அப்போது வழக்கமான ஒன்றாக இருந்தது.

விஜயகாந்த்துக்கு ஷார்ப் வசனங்களை எழுதி, ரசிகர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்ற லியாகத் அலிகான், 'மாநகர காவல்' படத்துக்கும் வசனம் எழுதியிருந்தார்.. லியாகத் அலிகானை பொறுத்தவரை, பல வருடங்களாக விஜயகாந்த்துடன் நட்பில் இருந்தவர்.. மதுரையில் இருக்கும்போது விஜயகாந்துடன் நெருங்கி பழகியவர்..

நண்பர்கள்: விஜயகாந்த்தின் ஆரம்ப கட்ட சினிமாவில், அவரது ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி அதை சரியான பாதையில் கொண்டு சென்றதில் இப்ராஹிம் ராவுத்தரோடு சேர்ந்து செயல்பட்டவர் லியாகத் அலிகான்தான். விஜயகாந்த்தின் அரசியல் படங்களில், அனல் பறக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர் லியாகத் அலிகான.. அந்த வரிசையில் மிக முக்கியமானது, "மாநகர காவல்"

32 வாரங்களுக்கு பிறகு, இந்த படத்தை சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்திருந்தனர்.இதுகுறித்து சமீபத்தில் ஒரு சேனலுக்கு லியாகத் அலிகான் பேட்டி தந்துள்ளார். அதில் ''மாநகர காவல்' படத்தை பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நம்பிக்கை: குறிப்பாக விஜயகாந்த் குறித்து லியாகத் அலிகான் அந்த பேட்டியில் சொல்லும்போது, "இந்த படத்தில் விஜயகாந்த் சார், என்னை நம்பி, மிகப்பெரிய பொறுப்பை தந்துள்ளார். என் மீது அவருக்கு நிறைய நம்பிக்கை.. எனக்கு வாழ்க்கை கொடுத்து, உயர்த்தியவர் அவர் என்பதால், விஜயகாந்தின் நம்பிக்கையை நானும் எப்போதும் காப்பாற்ற நினைப்பேன்.

இதுவரை 35 படங்களுக்கு மேல வசனம் எழுதியிருப்பேன். 6 படங்கள் இயக்கியிருக்கேன். ஆனால், என்னை வசனகர்த்தா ஆக்கினவர் விஜயகாந்த் தான். அதனால 'மாநாகர காவல்' ல கதையில் என் பெயர் வரலைனாலும் நான் பெரிதாக எடுத்துக்கவில்லை. காரணம், விஜயகாந்த் மீதான அன்புதான்.

லப்பர் பந்து: சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" படத்துல விஜயகாந்த் பாட்டு வருவதாகவும், தியேட்டர்களில் ஜனங்க ரசித்து பார்க்கிறதாகவும் கேள்விப்பட்டேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. அந்த டைரக்டர் விஜயகாந்தின் ரசிகரா? என்றும் தெரியல. ஆனால், விஜயகாந்தின் மீது நிறைய பாசம் வைத்திருக்கார்ன்னு மட்டும் தெரியுது. சந்தோஷமா இருக்கு'' என்றெல்லாம் லியாகத் அலிகான் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த பேட்டியைதான், இணையவாசிகள் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு லியாகத் அலிகான் தந்த பேட்டியையும் விஜயகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

நெருக்கம்: அதில், "விஜயகாந்தை எம்ஜிஆரை போல கொண்டு வரவேண்டுமென்று பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தோம்... அதில் வெற்றியும் பெற்றோம்.. ஆனால், அவருடன் நெருக்கமானவர்களை எல்லாம் பிரித்துவிட்டார்கள்.. முதலில் வெளியேறியது இப்ராஹிம் ராவுத்தர்தான். அவர்களாக பிரிந்தது பாதி.. பிரித்தது பாதிதான் என்று சொல்வேன்.

விஜயகாந்த்தை அரசியலை நோக்கி செல்ல வைத்தது நாங்கள்தான்... என்மீது அவருக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவர் தேமுதிகவை துவங்கிய பின்னர் நான் அதிமுகவில் இணைந்தேன். அதில், அவருக்கு மிகுந்த வருத்தம். அண்ணன் தப்பு செய்துவிட்டார். அவர் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என எல்லோரிடமும் சொல்வாராம்.

உதவும் குணம்: விஜயகாந்தை போல ஒரு நல்ல மனிதரை, அதிலும் பிறருக்கு உதவும் குணம் கொண்டவரை, தனக்கு கிடைக்கும் புகழை கூட மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்த மனிதரை நான் பார்த்ததே இல்லை. இனிமேல் பார்க்க போவதும் இல்லை" என்று லியாகத் அலிகான் சமீபத்தில் தந்திருந்த பேட்டியையும், விஜயகாந்த் ரசிகர்கள் வைரலாகி கொண்டிருக்கிறார்கள்" என்றார்.. இந்த வீடியோவையும் விஜயகாந்த் ரசிகர்கள், சோஷியல் மீடியாவில் வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+