எதிர்நீச்சல்: ஜீவானந்தம் பற்றி ஜனனிக்கு தெரிய வந்த உண்மை.. இனி குணசேகரன் எடுக்கும் முடிவு..?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரின் சொத்துகளை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கம்பெனியில் தன்னுடைய ஆட்களை வைத்து குணசேகரனையும் மொத்த குடும்பத்தையும் மிரட்டுகிறார்.
இந்த நிலையில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் பெயருக்கு தன்னுடைய சொத்து மாறிவிட்டது என்பதை தெரிந்து கொண்ட குணசேகரன் கடும் கோபத்தில் திட்டிக்கொண்டு காரில் வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அப்போதும் கூட நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை எவனோ ஒருத்தன் வந்து உரிமை கொண்டாடுகிறான். இது எந்த வகையில் நியாயம் அவனை சும்மா விடமாட்டேன். யாரு அவன் என்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
அத்தோடு குணசேகரனுக்கு ஆடிட்டர் மீதும் சந்தேகம் வருகிறது. ஆடிட்டர் கூட இதை இத்தனை நாட்களாக நம்ம கிட்ட சொல்லலையே என்று ஆடிட்டரிடமே கேள்வி கேட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜனனி இடம் ஈஸ்வரி ஜீவானந்தம் குணசேகரனின் ஆளாகத்தான் இருக்கும் என்று தன்னுடைய சந்தேகங்களை கொளுத்தி போட ஜனனியும், ஜீவானந்தம் குணசேகரன் ஆள் தான் என்று நம்பிக் கொண்டு நான் ஆபீஸில் போய் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆபீஸுக்கு வந்து விடுகிறார்.
அதே நேரத்தில் தன்னுடைய சொந்த ஆபிஸில் அங்கிருந்த வேலையாடகளை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு ஜீவானந்தம் அவருடைய அடியாள்களோடு இருப்பதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். அதுவும் எதிர்த்துப் பேசிய கதிரை பர்ஹானா கையைப் பிடித்து முறுக்கி அடித்ததை குணசேகரனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் யார் இந்த ஜீவானந்தம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் போது, வழக்கம்போல குணசேகரனும், ஜனனியும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது. இதில் குணசேகரன், சக்தி, ஞானம், கதிர், நந்தினி என அனைவரும் அமர்ந்திருக்க ஜீவானந்தம் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது ஜனனி ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் எந்த ரைட்சோட உள்ள வந்து இருக்கீங்க. அப்பத்தாவிடம் கைரேகை எடுத்த தைரியமா? என்று கேள்வி கேட்க, அதற்கு ஜீவானந்தம் நீ தான் அந்த ஜனனியாம்மா என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு அதிர்ச்சியான ஜனனி மட்டுமல்ல குணசேகரனும் தான். இந்த நிலையில் அங்கே கைகலப்பு ஏற்பட அப்போது ஜீவானந்தம் கையில் இருக்கும் துப்பாக்கியை மேலே நோக்கி சுட்டு, குணசேகரன் உனக்கு பத்து நிமிஷம் டைம் என்று சொல்லி மேலும் சில வார்த்தைகளை பேசுகிறார். இதைக் கேட்டு கதிர் உடைந்து போய்விட, குணசேகரன் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்று ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications