For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சினேகனால் செதுக்கப்பட்ட வரிகள்.. கண்டுகொள்ளாத தேசிய விருது.. ரசிகர்களின் கருத்துக்கள்

Google Oneindia Tamil News

சென்னை:2500க்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி இருந்தாலும் கவிஞர் சினேகனின் முகமும் பெயரும் சாதாரண மக்கள் மத்தியில் பரிச்சயமானது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

பிக் பாஸ் முதல் சீசனில் நூலிலையில் வெற்றி வாய்ப்பை இழத்த கவிஞர் சினேகன் எழுத்தாளர்,கவிஞர், பத்திரிக்கையாளர், நடிகர், அரசியல்வாதி, என்று பல முகங்களை கொண்டவர்.தற்போது தேசிய விருது கதவுகளை தட்டிய கவிஞர் சினேகனின் பாடல்கள் குறித்து வரும் செய்திகள் பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.

கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.. ‛முக்கிய’ காரணத்தை கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுகனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.. ‛முக்கிய’ காரணத்தை கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

வைரமுத்துவின் சிஷ்யன்

வைரமுத்துவின் சிஷ்யன்

சினிமாவில் காதலை கண்ணதாசனுக்கு பிறகு கவிதையாக தந்ததில் கவிஞர் வைரமுத்துக்கு நிகர் எவருமில்லை என்று கூறலாம். அந்த வைரமுத்து பயிற்சி பட்டறை இருந்து வெளிவந்த மாணவன் கவிஞர் சினேகன் ஆவார். கவிப்பேரரசு வைரமுத்து மட்டுமின்றி கவிஞர் வாலியின் தாக்கத்தையும் கலந்து இவரது பாடல்கள் இருக்கும் .காதல், பாசம், நட்பு,என்ற எந்த உணர்வாக இருந்தாலும் வெறும் கவிஞராக மட்டும் இருந்து பாடலை எழுதாமல் கதாபாத்திரமாகவே மாறி பாடலை தந்து உருக வைப்பதில் சினேகன் வேற லெவல்.

தேசிய அளவில் கவனம் பெற்றவை

தேசிய அளவில் கவனம் பெற்றவை

இவர் பாடல்கள் எழுதியுள்ள பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றிருக்கின்றன. இவரது பாடல்களும் தேசிய விருது பெரும் அளவிற்கு தரமானதாக இருந்தும் இன்னும் ஏனோ அது எட்டாக்கனியாகவே உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தில் வரும் 'பொய் சொல்ல இந்த மனசுக்கு' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தை பெற்ற சினேகன், பாண்டவர் பூமி படத்தில் எழுதிய "அவரவர் வாழ்க்கையில், ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்" "தோழா..தோழா" பாடல்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார்.

கவிஞரின் கைவண்ணம்

கவிஞரின் கைவண்ணம்

ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்று இருந்த "ஞாபகம் வருதே" பாடல்களின் வரிகள் பாடல்களை கேட்போரின் இறந்த காலத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் பசுமையான நினைவுகளை எண்ணி நெகிழ வைத்தது. பருத்திவீரன் படத்திலிருந்து "அய்யய்யோ" பாடல்,ஆடுகளம் படத்தில் "வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா" ,சூரரைப் போற்று படத்தில் இவர் எழுதி இருந்த "காட்டுப் பயலே" போன்ற பாடல்கள் தேசிய விருது பெற்ற படங்களுக்கு இவர் எழுதி இருந்த பாடல்களாகும்.

எதற்கும் சளைத்தவர் இல்லை

எதற்கும் சளைத்தவர் இல்லை

இயக்குனர் அமீர் இயக்கத்தில் ராம் படத்திற்கு இவர் எழுதியிருந்த "ஆராரிராரோ.. நான் இங்கு பாட" பாடலுக்கு இணையாக தாய் பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் இன்றுவரை வெளிவந்ததில்லை என்றே சொல்லலாம். காதல், பாசம் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களில் இறங்கி அடிக்கும் கவிஞர் சினேகன் சாமி படத்தில் இடம்பெற்று இருந்த "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" வில்லு படத்தில் "தீம்தனக்க தில்லானா" போன்ற ரொமாண்டிக் குத்து பாடல்கள் எழுதுவதிலும் சளைத்தவர் இல்லை என்று நிரூபித்துள்ளார்.

English summary
Poet Sinegan has written more than 2500 songs but the national award is of great quality but still remains an octogenarian. Many of the films for which he has written songs have received national awards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X