எல்லோரையும் சிரிக்க வைக்க காரணம் இதுதான்...சிரிச்சுகிட்டே அழவைத்த பிரியங்கா
சென்னை: எந்த சூழ்நிலையிலும் அனைவரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ப்ரியங்கா.
என்னதான் வெளியில் சிரித்தாலும் அவர்கள் மனதிற்குள் கவலைகள் இருக்கத்தானே செய்கிறது என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
தன்னுடைய இந்த குணத்திற்கு காரணம் இதுதான் என்று உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார் பிரியங்கா.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததுமே அவருடைய ரசிகர்கள் முதலில் வேண்டாம் என்றுதான் கூறி வந்தனர். காரணம் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் நெகட்டிவ் கேரக்டரை உருவாக்கிவிடும் என்ற பயம்தான். ஆனால் நம்முடைய குணத்தில் நாம் இருந்து கொண்டு இருந்தால் யாரை பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று விடாபிடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறாராம். பிரியங்கா வந்த நாள் முதல் இன்று வரைக்கும் தன்னுடைய இடத்தை நல்லபடியாக நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

கண்ணீரை வர வைக்கும் சோகக்கதை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் எல்லாமே தாறுமாறாக தான் இருந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் மனதைக் குழப்பும் விதமாகவும், போட்டியாளர்களை பற்றி ரசிகர்கள் நன்றாக தெரிந்து கொள்ளும் விதமாகவும் ஒவ்வொரு போட்டியும் பல சீசன்களில் வந்து கொண்டிருக்கிறது. என்ன தான் புதுசு புதுசாக போட்டிகள் வந்து கொண்டிருந்தாலும் தங்களுடைய சொந்த கதைகளை சொல்லும் போட்டிகள் ஒவ்வொரு சீசனிலும் ரிப்பீட்டு ஆகி கொண்டு தான் இருக்கிறது. தற்போது கூட அதே போலத்தான் வந்த நாளிலிருந்து ஒரு நாளைக்கு இரண்டு போட்டியாளர்கள் வீதம் தங்களுடைய கதைகளை கூறி ரசிகர்களை அழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கவலையையும் கலகலப்பாக மாற்றிவிடுவார்
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் கதைகளும் ரசிகர்களுக்குள் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஃபீலிங்கை சொல்லி அடுத்தவர்களை அழ வைத்து தானும் அழுது விடுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் விதமாக ஒரு சில போட்டியாளர்கள் அவர்களுக்கு ஆறுதல்களை வழங்கி வருகின்றனர். அந்த மாதிரிதான் அழுது மனதை உருக்கும் நேரங்களில் கூட அந்த இடத்தில் பிரியங்கா ஆஜராகி கலகலப்பாக மாற்றிவிடுகிறார். ஏற்கனவே பாவனி ரெட்டி தன்னுடைய சோகமான கதையை கூறி அழுது கொண்டிருக்கும் போது, அவரிடம் சாப்பாடை பற்றி பேசி கதையை மாற்றியதாக இருந்தாலும் சரி, தாமரை செல்விக்கும் நமிதாவுக்கும் பிரச்சனை ஏற்படும் போது அவர்களுக்குள் கலகலப்பை ஏற்படுத்தியதாக இருந்தாலும் சரி, இவர் வந்தாலே அந்த இடம் பரபரப்பாக மாறிவிடுகிறது.
Recommended Video

சிரிச்சிக்கிட்டே அழ வைத்து விட்டார்
நேற்றைய எபிசோட்டில் இவர் தன்னுடைய கதையை தொடங்கி எளிமையாகவும் மன உருக்கமாகவும் பலருக்கும் புரியும் படியும் கூறிவிட்டார். அது மட்டுமல்லாமல் தனக்கு முதல் ஹீரோவான தன்னுடைய தந்தை இறப்பு பற்றியும், அதனால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் கூறி இருந்தார். தந்தை ட்ரெயினில் வரும் போது இவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் யாருமே அருகில் சென்று கவனிக்கவில்லையாம்.
அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் அவருடைய அம்மாவுக்கும் யாரும் எந்தக் கெல்ப்பும் பண்ணாமல் ஒதுங்கி சென்று விட்டார்களாம். இது அவருடைய மனதில் ஏற்பட்ட தாக்கத்தால் தான் அடுத்தவர்கள் கஷ்டப்படும்போதும், கவலையில் இருக்கும் போதோ கலகலப்பாக மாற்றி விடுவேன் என்று கூறியிருக்கிறார். இதனை சிரிச்சுகிட்டே இவர் சொல்ல அதைக் கேட்டு சக போட்டியாளர்களும் அழுது விட்டனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications