தானும் சளைத்தவரல்ல என்று காட்டிய சின்ன பொண்ணு.. பிக் பாஸில் ரெக்கார்டு அடித்துவிட்டார்
சென்னை: இவருக்கு வயசு ஆகிவிட்டதால் இவரால் டாஸ்க் செய்யமுடியாது என்று நினைத்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து விட்டார் சின்ன பொண்ணு.
இவரால் முடியாது என்று பிக்பாஸ், இவருக்கு நடுவர் பதவியை கொடுத்து வெளியே இருக்கச் சொன்ன போதும் இவர் திறமையை நிரூபித்து விட்டார்.
இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரும் செய்யாததை இவர் செய்து அசத்தி விட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வேற லெவல் திறமை
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசனை தொடங்கி இருந்தாலும், இதற்கு முந்தைய சீசன்களில் ஒவ்வொன்றிலும் ஒரு சில சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடைபெற்று ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் இடம் பெற்றுவிடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது சின்ன பொண்ணு செய்தது அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.

ரசிகர்களின் அன்பு
யாரையும் உருவத்தை பார்த்து எடை போட கூடாது என்பதை தற்போது இவர் நிரூபித்து விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். நிகழ்ச்சி நான்காவது வாரத்தை முடிவடையும் நிலையில் தொடர்ந்து அனைத்து வாரங்களிலும் எலிமினேஷனில் இவருடைய பெயர் இருந்துவருகிறது. ஆனாலும் ஒவ்வொரு வாரமும் இவர் சேவ் ஆகி விடுகிறார். இந்த வாரத்தில் இவருடைய வாக்குகள் மிகவும் குறைவான நிலையில் இருந்தாலும் இவர் இந்த நிலையில் தொடர்வாரா என்பது நாளை தான் தெரியும்.

அமைதியான செயல்பாடு
ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு போட்டியிலும் இவர் அதிகமாக ஈடுபடவில்லை, அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் அதிகம் சுவாரசியம் இவரால் கிடைக்கவில்லை என்று போட்டியாளர்கள் ஒரு பக்கமும், ரசிகர்கள் ஒரு பக்கம் கூறிக் கொண்டிருந்த நிலையில் நான் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என்னுடைய முறை வந்தால் நான் சரியாக அதை பயன்படுத்துவேன் என்பதை இவர் அமைதியாக நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

வித்தியாசமான விளையாட்டு
நேற்றைய எபிசோட்டில் சுவாரசியமான ஒரு டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து மஞ்சை, கருப்பு அணியினர் என விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் போட்டியில் நடுவராக சின்ன பொண்ணை பிக்பாஸ் நியமித்திருந்தார். இதில் போட்டியாளர்கள் கைகளை ஊன்றி தரையில் தண்டால் பொசிசனில் ஒரு நிமிடம் நிற்க வேண்டும் என்பதுதான். அதை பலர் திணறிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் அதில் வெற்றி பெற்றுக் கொண்டு வந்திருந்தார்.

இதெல்லாம் அசால்ட்
போட்டியின் முடிவுகளை சின்ன பொண்ணு அறிவித்து போட்டியாளர்களுக்கு பரிசை கொடுத்த பிறகு, இவரால் தம்மால் முடியவில்லை என்றுதான் பிக்பாஸ் இப்படி தனக்கு வாய்ப்பு தராமல் மறுத்துவிட்டார் என்று நினைத்துவிட்டார் போல. அதனால்தான் ரசிகர்கள் இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நினைத்து விடக் கூடாது என்பதற்காக தான் அதேபோல செய்து காட்டுகிறேன் என்று ஐக்கியிடம் கூறியிருக்கிறார். அவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து இவருக்கு மோட்டிவேஷன் கொடுக்க, சின்னப்பொண்ணு சரியாக ஒரு நிமிடங்களில் கடந்து விட்டார். இதை பார்த்த ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications