ராஜுவுக்கு இன்று கிப்ட் இருக்கு... இப்போதே வெற்றி பெற்று விட்டாரே!!
சென்னை: ராஜுவின் செயலுக்கு இன்று அவருக்கு நிச்சயமாக கிப்ட் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்று சொல்வதை ராஜூ நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கூறுகிறார்கள்.
என்னதான் விளையாட்டாக இருந்தாலும் அதில் உண்மையாக இருக்கும் ராஜுவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

மனதைக் கவர்ந்த கேரக்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர்கள் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து விடுகிறார்கள். என்னதான் அவர்கள் செய்தாலும் அவர்களுடைய கேரக்டரை ரசிகர்களுக்கு நன்றாக பிடித்துவிடுகிறது. அது முதல் சீசனில் இருந்து தற்போது வரைக்கும் தொடர்ந்து தான் வருகிறது. அந்த வகையில் தற்போதைய சீசனில் ஒரு போட்டியாளராக களமிறங்கி தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்த ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜுவுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.

உணர்ச்சிகரமான தருணம்
ராஜுவின் திறமை மட்டுமல்லாமல் கேரக்டரும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விடுகிறது. இவர் ஒரு காமெடி நடிகராக இருப்பதால் காமெடி மட்டும் தான் செய்வார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. இவர் காமெடியையும் தாண்டி தான் ஒரு ஹீரோ என்பதை பல நேரங்களில் நிரூபித்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். விளையாட்டாக இருந்தாலும் சரி நிஜமாக இருந்தாலும் சரி நான் நானாக தான் இருப்பேன் என்பதை பலமுறை ராஜு அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். அந்த மாதிரிதான் இந்த வார எலிமினேஷன் போட்டிகள் போனவாரம் நடைபெற்றது அதில் உணர்ச்சிகரமான தருணத்தை ஏற்படுத்தி இருந்தார்.

ராஜுவை கவர்ந்த நண்பர்
பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்திலிருந்து ராஜு, இமான் அண்ணாச்சி உடன் நெருக்கமாக இருந்தார். அவரை எப்படியும் 106 நாட்கள் கூட்டி செல்வேன் என்று நம்பிக்கையோடு கூறி வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ராஜுவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து விட்டது. முதல்முறையாக கண்ணீர் சிந்தி அனைவரையும் கலங்கடித்து விட்டார். உண்மையான நட்புக்கு எப்போதும் துணையாக இருக்கும் இவர் செய்த செயல் அனைவரையும் வியப்படைய வைத்திருந்தது. அண்ணாச்சி வெளியேறிய பிறகு ராஜூவுக்கு பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக சஞ்சீவ் மாறிவிட்டார்.
Recommended Video

ஸ்பெஷல் கிப்ட்
நாமினேஷனில் சஞ்சீவ் பெயர் இருக்கும் நிலையில் சஞ்சீவ் மற்றும் ராஜுவுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜூ,சஞ்சீவ்வை காப்பாற்றிவிட்டார். இதை பார்த்த சஞ்சீவின் மனைவி ராஜுவுக்கு நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது ஒரு கிப்ட் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும்போது சஞ்சீவின் மனைவி இன்று வருவதால் கண்டிப்பாக ராஜுவுக்கு அவருடைய குணத்தை பாராட்டி ஒரு கிப்ட் கிடைக்கப்போகிறது. இது அவர் இந்த டைட்டிலை வென்றதற்கு சமமாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications