சோகத்தோடு மகனை கட்டி அணைத்து பீல் பண்ணும் ஜிபி முத்து..எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஜி பி முத்து தன்னுடைய மகனோடு எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார்.
சோகத்தோடு லேசாக தாடி வளர்ந்ததை கூட எடுக்காமல் இருக்கும் ஜிபி முத்துவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.
எப்போதும் கிளீன் ஷேவ் செய்து சிரித்த முகமாக இருக்கும் ஜிபி முத்து இப்போது சோகத்தின் வடிவமாக இருப்பது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்கள் கொடுத்த ஆதரவு
ஜி பி முத்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக பலருக்கும் தெரிந்த முகமாக இருந்தாலும் இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் தான் வெற்றியாளர் என்று ரசிகர்கள் முதல் நாளே அடித்து கூறி வந்தனர். இவருக்கு நாங்கள் இருக்கோம் சப்போர்ட்டுக்கு என்று இவருக்கு பலர் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார். ஒரு வாரம் இவருடைய அட்ராசிட்டி இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் ரசிகர்களை வரவேற்றது.

மனதில் ஏற்பட்ட சோகங்கள்
இரண்டாவது வாரத்தில் இருந்தே குடும்பத்தின் நினைவாகவே இருந்த ஜி பி முத்து விளையாட்டில் அதிகமாக கவனத்தை செலுத்தாமல் ஏதோ போல அமைதியாக மாறிவிட்டார். முதல் நாளில் ஜிபி முத்து மற்றும் கமலுக்கும் இடையே நடந்த ஆதாம், ஏவால் கதை சமூக வலைத்தளத்தில் ஜிபி முத்துவுக்கு அதிகமான ரசிகர்களை ரசிக்க வைத்தது .இவர் குழந்தைத்தனமாகவும், வெகுளித்தனமாகவும் பேசும் வார்த்தைகள் பலர் மனது விட்டு சிரிப்பதற்கு காரணமாக இருந்து வந்தது .ஆனால் இவர் மனதிற்குள் இரண்டாவது வாரத்தில் பல்வேறு சோகங்கள் குடிகொண்டு இருந்து விட்டது.

மகனை நினைத்து ஏக்கம்
இரண்டாவது வாரத்தில், முதல் பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஜிபி முத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த போட்டிக்கு கூட இவர் அதிக அளவில் தன்னுடைய திறமையை காட்டி அந்த டாஸ்க் ஜெயித்து முதல் தலைவர் பொறுப்பை ஏற்று இருந்தார். திடீரென்று இவர் தன்னுடைய மகன் விஷ்ணுவிற்கு உடல்நிலை சரியில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தன்னை தான் அதிகமாக தேடுவார் .அதனால் நான் போக வேண்டும் என்று போட்டியாளர்களிடமும், பிக் பாஸ் இடமும் கூறத் தொடங்கி விட்டார் .பிக் பாஸ் மற்றும் கமல் என அனைத்து தரப்பினரும் இவருக்கு அறிவுரை கூறினாலும் இவர் ஏற்றுக் கொள்வதாக இல்லாமல் கடைசியில் வெளியேறி விட்டார்.

இது பிடிக்கவில்லையாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் முதல் வேலையாக வீட்டிற்கு ஓடோடி வந்த ஜி பி முத்து தன்னுடைய குழந்தைகளை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தாராம். குழந்தைகளோடு பிரியாணி வாங்கி கொடுத்து சாப்பிட்டு சந்தோஷமாக விருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தீபாவளி பங்க்ஷனை இவர் கொண்டாடி இருந்தாலும், இவர் முகத்தில் இன்னும் அந்த டயர்டும், கவலையும் முகத்தை விட்டு போகவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று தன்னுடைய மகனை கட்டி அணைத்தபடி போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஜி பி முத்துக்கு என்னதான் ஆச்சு? எதற்காக இந்த சோகம் இவர் இப்படி இருந்தால் நன்றாகவே இல்லை. எப்போதும் போல இவர் அடுத்தவர்களை திட்டிக்கொண்டு ஜாலியாக இருந்தால் தான் ரசிகர்களுக்கும் ஜாலியாக இருக்கும். அதனால் பழைய நிலைக்கு வாருங்கள் என்று அன்பு கட்டளைகளையும் விட்டு வருகிறார்கள்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications