அவ்வளவு பெரிய இயக்குனரை அசால்டா கலாய்த்த ஜெயராம்.. அசலையும் மிஞ்சி விட்டாரே..குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழாவில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் ஜெயராம் சிவாஜி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிரபுவை கலாய்க்கும் வீடியோ செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
நடிகர் ஜெயராமை பற்றி முழுமையாக தெரியாதவர்களுக்கு இந்த வீடியோ ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்துள்ளது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகர் ஜெயராம். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக மிமிக்ரி மூலம் தன் திரை ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

நடிகராக ஜெயராம்;
பத்ம ஸ்ரீ விருதை வென்றுள்ள ஜெயராம் ஒரு சிறந்த செண்டா கலைஞரும் கூட, மலையாள திரை உலகில் இவரும் நடிகர் கலாபவன் மணி போல மிமிக்ரி செய்து ஸ்டாண்டிங் காமெடி பண்ணுவதில் வல்லவர் தான் . மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ் மற்றும் பல மொழிகளில் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பாலும், அப்பாவித்தனமான முக பாவனைகளாலும் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதுடன் மட்டுமின்றி ரசிக்கவும் வைத்தவர்.

தமிழில் நடிகராக ஜொலித்தவர்;
கோகுலம்,புருஷ லட்சணம், பிரியங்கா,முறைமாமன், கோலங்கள், போன்ற படங்கள் இவருக்கு ஆரம்ப காலத்தில் தன்னை ஒரு சகலகலா நடிகராக நிரூபித்துக் கொள்ள உதவியது. உலக நாயகன் கமலஹாசன் உடன் இவர் இணைந்து நடித்த தெனாலி மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் எவர்கிரீன் காமெடி படங்களாக உள்ளது. தெனாலி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த டாக்டர் கைலாஷ் கதாபாத்திரமும்,பஞ்சதந்திரம் படத்தில் ஐயப்பன் நாயராக இவர் நடித்திருந்த கதாபாத்திரமும் இன்றளவும் இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மணி மகுடமாக ஜொலித்துக் கொண்டு இருக்கிறது.

தந்தை வழியில் தனையன்;
நடிகர் ஜெயராமை போலவே அவரது மகன் காளிதாஸ்ம் ஒரு சிறந்த மேடைக் கலைஞர் ஆவார். தனது ஏழாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பத்தாவது வயதிலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெரும் அளவிற்கு நடிப்பு அவர் ரத்தத்திலிருந்து. தந்தையைப் போலவே மிமிக்ரி செய்வதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர். விஜய் டிவியின் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் இவர் மிமிக்ரி செய்து காட்டியது இவரது திறமையை ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு தெரிய செய்தது.

ஆழ்வார்கடியானாக ஜெயராமின் டெடிகேஷன்;
தமிழ் சினிமாவின் பெருமையாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆழ்வார் கடியான் என்ற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டீசரில் இருந்த இவரது கெட்டப்பை வைத்து பல மீம்ஸ் கண்டெண்டுகள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆழ்வார்கடியான் கதாபாத்திரம் குட்டையாக தெரிய வேண்டும் என்ற காரணத்தால் படம் முழுவதும் காலை மடக்கி கொண்டே நடித்தார் என்று நடிகர் கார்த்திக் இவரை பாராட்டியது படத்திற்கான இவரது டெடிகேஷன் லெவலை காட்டுவதாக உள்ளது.

பிரபு, மணிரத்தினத்தை கலாய்த்த சம்பவம்;
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் சமீபத்தில் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்தியா முழுவதிலும் இருந்து பல திரை நட்சத்திரங்கள் வந்து கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியது. ஆழ்வார்கடியான் ஜெயராம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததாக கூறி ஒரு நிகழ்ச்சியை பிரபு மற்றும் மணிரத்தினத்தின் குரல்களில் அச்சு அசலாக மிமிக்ரி செய்து காண்பித்துள்ளார்.விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சிவாஜி குடும்பத்திடம் முன்னதாகவே மன்னிப்பு கேட்டுக் கொண்டு பிரபுவை போல் பேசி வியக்க வைத்த ஜெயராம் இயக்குனர் மணிரத்தினத்தையும் இமிடேட் செய்து பேசி அரங்கத்தை அதிர வைத்தார். பார்வையாளர்கள் மட்டுமின்றி சிவாஜி குடும்பமும் இயக்குனர் மணிரத்தினமும் ஜெயராமின் பெர்பாமென்ஸ் கண்டு ரசித்து, குலுங்கி குலுங்கி சிரித்துள்ளனர். ஜெயராமின் இந்த திறமையை கண்ட பல நெட்டிசன்கள் இவரை இன்னும் தமிழ் சினிமா நன்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications