உதடுகளை இறுக்க மூடி.. வாய் விரிய சிரிச்ச ரம்யா பாண்டியன்.. ஓடி வந்த ரசிகர்கள்!
சென்னை: கண்ணை மூடி கனவு கண்ட ரம்யா பாண்டியனை பார்ப்பதற்காக ஓடி வந்த ரசிகர்களின் கமெண்ட்ஸ்களால் இன்ஸ்டாகிராமே கலங்கிக் கிடக்கிறது.
Recommended Video
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் புலம்பித் தள்ளினாலும் கண்ணை திறக்காமலே தன்னுடைய புன்னகையால் வந்தவர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் க்யூட் அழகி ரம்யா பாண்டியன்.
இப்படி பண்ணினா எப்படி என்று கேட்கும் ரசிகர்களின் கேள்விகளுக்கு இந்த புன்னகை தான் பதிலோ? என்று வந்தவர்கள் அப்படியே ரசிச்சுகிட்டே இருக்காங்க.

எதிர்பார்க்காத போட்டோஷூட்
இடுப்பை காட்டி பேமஸ் ஆனாலும் இப்போது சிரிப்பை காட்டி வேற லெவலில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். இவரைப் பார்த்து போட்டோஷூட் எடுக்கவேண்டும் என்றால் ரொம்பவே மெனக்கெடவோ மேக்கப் போடவோ வேண்டாம். இந்த மாதிரி சிம்பிளா வந்தாலே ரசிகர்களுக்கு பிடித்து விடும் என்று பல நடிகைகளும் பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எத்தனை பேர் இவரை காப்பி செய்து போட்டோ சூட் எடுத்தாலும் இவருடைய இடத்துக்கு யாராலும் வர முடியாது என்பதை மேலும் மேலும் நிரூபித்து வந்து கொண்டிருக்கின்றார்.

ரசிகர்களை மறக்காத மனசு
திரைப்படங்களில் அறிமுகமாகி இப்போது சமூக வலைத்தளம், சின்னத்திரை, போட்டோஷூட், மாடலிங் என பிசியாக கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், அவருடைய ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் கமெண்ட்ஸ்களால் வர்ணித்து வருகின்றனர். இவருக்கு சினிமாவை விடவும் அதிக பெரும் புகழையும் வாங்கிக் கொடுத்த இன்ஸ்டாகிராம். அதை இவர் மறந்துவிடவில்லை. அதனால்தான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் போட்டோஸ் எடுத்து இதில் பதிவிட்டு விடுகிறார். இவர் ஓட்டு போடவில்லை என்றால் உரிமையோடு ரசிகர்களும் எப்போ தலைவி போஸ்ட் வரும் என்று கேட்டு வருகின்றனர்.

ஏங்க வைக்கிறீங்களே
அடிக்கடி மார்டன் உடைகளில் வலம் வந்து கொண்டிருந்த இவர் இப்போ மீண்டும் புடவையில் வந்து இருக்கிறார். புடவையில் போட்டோஷூட் என்றதும் அந்த மொட்டைமாடி போட்டோசூட் தானா என்று சந்தோஷமாக ஓடி வந்த ரசிகர்களை இப்போ ஏமாற்றம் அடைய வைத்துவிட்டார். அப்போ அப்படி பார்த்தீங்க இப்போ இப்படி பாருங்க என்று இவருடைய கலக்கலான புன்னகையை கண்மூடி சிந்தித்தபடி சும்மா கேஷுவலாக காட்டியிருக்கிறார். இதை பார்த்ததும் சிலர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என்று அரைகுறை மனதோடு கமெண்ட்ஸ் போட்டிருக்கின்றனர்.

கண்முன் வரும் மொட்டை மாடி நியாபகம்
ஜோக்கர் படத்தில் கிராமத்து தேவதையாக வலம் வந்த இவர் அதற்கு பிறகு சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி யாருடா இந்த பொண்ணு என்று ரசிகர்கள் ரூம் போட்டு யோசிக்க மாதிரி செய்துவிட்டார். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் இவருக்கு கிடைத்த ஆதரவை பார்த்து முன்னணி நடிகைகளே கொஞ்சம் ஜெர்க் ஆகி விட்டனர். அதற்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும் வேற லெவல் ரீச் ஆகி விட்டார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுதான் முதன் முதலில் இவருடைய பெயரை வெளிக்கொண்டு வந்தது. அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது முத்திரையை பதித்து விட்டார்.

மினுமினுப்பு கூடிப் போச்சு
தற்போது இவர் பல திரைப் படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். அதற்கான போஸ்டர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இவரிடம் எப்போது போட்டோஷூட் தொடங்குவீர்கள் என்று பலர் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டனர் .ரசிகர்களுக்காக விரைவில் தொடங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும் தற்போது உடற் பயிற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் இவர் உடல் எடையை குறைத்து மினுமினுப்பைக் கூட்டி விட்டார். அதை காட்டுவதற்காகத்தான் தற்போது புடவையில் கேஷுவல் கிளிக் போட்டிருக்கிறார். மேக்கப் ஏதும் இல்லாமலேயே பேரழகியாக வலம் வரும் இவருக்கு லைக் பட்டன் தெரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications