அனைவரையும் சிரிக்க வைத்த டவுசர் பாண்டி இறப்பை கேட்டு விஜய் செய்த உதவி... உருக்கமான தகவல்கள்
சென்னை: துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் டவுசர் பாண்டி ஆக நடித்த நடிகரை பற்றிய தகவல்கள் ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்திருக்கிறது.
முதல் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த நடிகரின் திடீர் மரணம் இப்ப வரைக்கும் அந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளதாம்.

கலங்கவைக்கும் இழப்பு
பொதுவாக இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது தான். யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத சூழ்நிலையில் தான் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம். ஆனால் பலருக்கும் பரிச்சயமான ஒருவருடைய இறப்பு கூட இருப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்களை பற்றி தெரிந்து கொண்டவர்களுக்கும் வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கும். அந்த மாதிரிதான் இறப்பு நடந்து பல வருடங்கள் ஆனாலும் அந்த வேதனை அவர்களை பிடித்தவர்களை விட்டு விலகுவதில்லை. அதுபோல தற்போது துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் டவுசர் பாண்டி ஆக நடித்த பாரி வெங்கட் மறைவு குறித்து காமெடி நடிகர் உருக்கமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

தெரியாத குணநலன்கள்
நமக்கு பிடித்தவர்களையோ, பரிச்சயமானவர்களோ இந்த உலகத்தை விட்டு விலகி போய் பல வருடங்கள் ஆனாலும் அவர்களுடைய நினைவு வரும்போது அவர்களை பற்றி அவர்கள் செய்த உதவி பலருக்கும் நினைவிற்கு வந்து விடும். அந்த மாதிரி தான் தற்போது பாரி வெங்கட் பற்றி காக்கா கோபால் உருக்கமான தகவல்களை கூறியிருக்கிறார். அதில் அவர் பாரி அண்ணனை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் இருந்தபோது என்னை சந்திக்கும் போதெல்லாம் அவர் நான் கேட்காமலே காசு கொடுத்து விட்டு போவார். அவர் பணக்காரர் எல்லாம் இல்லை. இருந்தாலும் அவர் கிட்ட கடைசியாக இருக்கிற காசு கூட என்கிட்ட கொடுத்து விட்டு சிரித்து விட்டு போவார். அந்த மாதிரி நல்ல மனசு உள்ளவர். எனக்கு பல உதவிகளை செய்து இருக்கிறார் என்று உருக்கமாக பாரி வெங்கட் பற்றி பேசியிருக்கிறார்.

சோக நினைவுகள்
அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் பாரி மட்டும் இப்ப இருந்திருந்தால் வடிவேலுக்கே டப் கொடுத்திருப்பார் என்று அனைவரும் கூறிவருகின்றனர். அதுபோலத்தான் காக்கா கோபாலும் கூறியிருக்கிறார். சினிமாவில் பாரி அண்ணன் மிகப் பெரிய கலைஞன். அந்த ஸ்பாட்டில் காமெடி ட்ராக் பண்ணுவார். திருநெல்வேலி படத்தில் நானும் அவரும் நடித்திருந்தாலும் அந்த படம் ஷூட்டிங் முடித்துவிட்டு நாங்க இரண்டு பேரும் கிளம்பி இருந்தோம் அப்போ அவர் டைரக்டர்கிட்ட காக்கா நல்ல நடிப்பான் அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று வருத்தமாக சொன்னார். சரி நாளைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஒரு காமெடி டிராக் இருக்கு அதில் இவன் பண்ணட்டும் என்று டைரக்டர் சொன்னார். சரின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் ஒரு வாரமாக பாரியை காணவில்லை என்று நாங்கள் எல்லோரும் தேடிட்டு இருந்தோம். அப்போது தான் பெரம்பலூர் பக்கத்தில் நடந்த விபத்தில் இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. உடனே நகைச்சுவை நடிகர்கள் சேர்ந்து அவருடைய உடலை மீட்டு சென்னைக்கு கொண்டு வந்து பாரி அண்ணனுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை செலுத்தினோம் என்று அந்த நேரத்தில் நடந்த மறக்கமுடியாத சோக நினைவுகளை வெளிக்காட்டி இருக்கிறார்.

விஜய் செய்த உதவி
அதுமட்டுமல்லாமல் பாரி இறந்த செய்தி கேட்டு நடிகர் விஜய்யும் அவருடைய தந்தையும் பாரி வெங்கட்டின் வீட்டிற்கு வந்து மனைவியிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு அஞ்சலி செலுத்திவிட்டு போனார்களாம். துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் பாரியின் காமெடி விஜய்க்கு ரொம்பவே பிடித்து இருந்ததால் ஒரு நல்ல நகைச்சுவை கலைஞனை இழந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தத்துடன் அப்போது சொல்லி இருந்தாராம். விஜய் மட்டுமல்லாமல் பல நடிகர்களும் அந்த நேரத்தில் பாரியின் குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக பலரையும் சிரிக்கவைத்த ஒரு கலைஞருக்கு இப்படி ஒரு நிலையா என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications