எதிர்நீச்சல், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இனி பிரச்சனையா? கலைஞர் டிவி வைத்த செக்.. செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் இரவு 9 மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் நிலையில் இதற்கு போட்டியாக கலைஞர் டிவியில் 9:00 மணிக்கு புதிய நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.
அதுவும் அந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்கப் போகிறார். அதாவது ஏற்கனவே நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை போலவே கலைஞர் டிவியில் இரவு 9 மணிக்கு வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு சேனல்களிலும் தங்களுடைய டிஆர்பியை கூட்டிக் கொள்வதற்காகவே புதியது புதியதாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இப்போது கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி ப்ரோமோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தொகுத்து வழங்க இருக்கிறார்.
நடிகை குயிலி தமிழ் சினிமாவில் நாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிறகு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சில வருடங்களாக எந்த சீரியலிலும் அதிகமாக காணப்படாமல் இருந்த குயிலி மீண்டும் வித்தியாசமான கேரக்டரில் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
நடிகை குயிலி பாலச்சந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் உருவான "பூவிலங்கு" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு "கல்யாணம் அகதிகள்" ,"ஆயிரம் பூக்கள் மலரட்டும்"," டிசம்பர் பூக்கள்" உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு வாய்ப்புகளுக்கு குறைய தொடங்கியதும் ஒரு சிலர் பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்
அதிலும் நாயகன் திரைப்படத்தில் இவர் போட்ட டான்ஸ் இப்ப வரைக்கும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதைத்தொடர்ந்து சில வருடங்கள் கழித்து தான் அண்ணி, அண்ணாமலை, கோலங்கள், சரவணன் மீனாட்சி என பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். இந்த நிலையில் இப்போது இவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போல "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் என்று ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதனால் அதே ஒன்பது மணி நேரத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிஆர்பிக்கு பிரச்சனை ஏற்படுமா? என்று ரசிகர்கள் இப்போது கேள்விகளை தொடங்கி விட்டார்கள்.












Click it and Unblock the Notifications