பட்டனை கழற்றி விட்டு.. வெறித்தனம் வெறித்தனம்.. கலக்கல் கண்ணம்மா!
சென்னை: சீரியலில் சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்த கண்ணம்மா தற்போது இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழற்றிவிட்டு வெறித்தனமான போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கும் போட்டோஸ்கள் வலம் வருகின்றன.
இந்தப் படங்கள்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இவருடைய போட்டோக்களை பார்த்து அம்மாடி இது கண்ணம்மா வா சத்தியமா நம்ப முடியவில்லை என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
அந்த அளவிற்கு சட்டை பட்டனை கழற்றிவிட்டு மிரட்டியிருக்கிறார். விஜய் டிவியில் வரலாற்றிலேயே முதல்முறையாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வந்த சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.
ஆத்தாடி.. என்னா பார்வைடா சாமி.. காருக்குள்ள ரொமான்ஸா.. மயக்கும் மைனா

கண்ணம்மா சீரியல்
சன் டிவி சீரியல்கள் மட்டும்தான் டி ஆர் பி யில் முதலிடத்தில் வந்து கொண்டிருந்த காலத்தில் அந்த கதையை மாற்றி அமைத்தது பாரதிகண்ணம்மா சீரியல். அதுவும் அந்த சீரியலில் கண்ணாமாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் ஆகிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் புரட்சிப் பெண்ணாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

ஓவர் அனுதாபம்
சிலருக்கு அனுதாப ஓட்டு அதிகமாக கிடைக்கும் சிலருக்கு தன்மானத்தை கூறும் தூண்டும் வகையில் இருப்பதால் தன்னம்பிக்கையின் சிகரமாக தெரிவார்கள் அந்த மாதிரிதான் இவரும் ரசிகர்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறார். பல பெண்களுக்கும் ரோல்மாடலாக இருக்கும் இவர் சீரியலில் கிராமத்துப் பெண்ணாக கலக்குகிறார்.

சிம்பிள் அழகு
சேலை கட்டிக் கொண்டு தலை முடியை எண்ணெய் தேய்த்து இறுகப் பின்னி அப்படியே ஒரு கிராமத்து தேவதையாக அந்த சீரியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .ஆனால் அவர் மாடல் பொண்ணு என்பது பலருக்கு தெரியாது .அவர் கலர் மட்டும் தான் கருப்பு தன்னம்பிக்கையில் நெருப்பு என்பதை நிரூபிக்கும் வகையில் தான் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு இருக் கிறார்.

அசத்தல் ஆக்டிங்
ஆனாலும் இவர் இந்த இடத்திற்கு எளிதில் வந்து விடவில்லையாம். ஏகப்பட்ட அவமானங்களையும் தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் .அதுவும் இது அவரது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் கருதப்படுகிறது .நாளுக்கு நாள் இவர் முன்னேறிக் கொண்டிருந்தாலும் தான் முதலில் பிரபலமான இன்ஸ்டாகிராமை மறக்கவில்லை.

நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அதனால் தான் இவர் முதன்முதலில் போஸ்ட் போட்டதுபோல நேரம் கிடைக்கும் நேரமெல்லாம் போட்டு வருகிறார் அந்த மாதிரிதான் தற்போது இவரும் ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். என்னால் மாடல் உடையிலும் கலக்க முடியும் என்று சட்டை பட்டனை கழட்டி விட்டு தலைமுடியை விரித்து விட்டு ப்பிரீ ஷேர்ரோடு கலக்கலான லுக்குவிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார்.

அழகான குத்துவிளக்கு
சீரியலில் இவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டகிரம் மாடல் பெண்ணாக பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அதுவும் சிலர் இவரது போட்டோக்களுக்கு நீங்க எப்படி போஸ் கொடுத்துட்டு இருக்கீங்க சீரியலில் பாரதியும் வெண்பாவும் கல்யாணத்தை நடத்த போறாங்க .ப்ரோமோவில் அவர்களது கல்யாணத்தை போட்டுக்கிட்டு இருக்காங்க. நீங்க இங்க போட்டோ சூடு நடத்திவிட்டு இருக்கீங்க என்று கமெண்ட்டுபோட்டு வருகிறார்கள்.