கண்ணம்மா ஆடப்போகும் விஸ்வரூபம்... முற்றுப்புள்ளிக்கு வந்த பாரதி கண்ணம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோ ரசிகர்களை மட்டுமல்லாமல் நெட்டிசன்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளதாம்.

ஒரு சில ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரோமோவை பார்த்து ஒரு வழியாக இந்த முடிவுக்கு வந்து விட்டீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள்..

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் தற்போது தீவிரவாதிகளை அழிக்க கண்ணம்மாவின் வெறித்தனமான விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

கதையின் சுருக்கம்

கதையின் சுருக்கம்

பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பம் முதல் தற்போது வரை பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றிருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பாரதி ஒரு டாக்டராக இருந்தாலும் அவருக்கு ஆண்மை இல்லை என்று டாக்டர் கொடுத்த சர்டிபிகேட்டை நம்பிக்கொண்டு தன்னுடைய காதல் மனைவியை சந்தேகப்பட்டு அவருடைய குழந்தைக்கு தான் தகப்பன் அல்ல என்று கூறி வருகிறார். பாரதியின் மனைவியான கண்ணம்மாவும் உன் முன்பாக நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று சபதம் விடுத்து வீட்டை விட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகியும் பாரதி தான் தன் குழந்தைகளுக்கு அப்பா என்பதை தெளிவாக கூறாமல் இருந்து வருகிறார்.

தொடரும் அதே காட்சி

தொடரும் அதே காட்சி

பாரதி கண்ணம்மா சீரியலின் தீவிரமான ரசிகர்கள் எப்போது இந்த தீவிரவாதிகளின் அட்டூழியம் முடிவுக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்ப்போடு கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சில ரசிகர்கள் பாரதி தீவிரவாதிகளை அழிக்கப் போகிறாரா?? அல்லது கண்ணம்மா தீவிரவாதிகளை அளிக்க போகிறாரா?? என்று ஆர்வத்தோடு எதிர்பார்ப்பது கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த வாரத்தில் ப்ரோமோ ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலை கொடுத்துள்ளதாம்.

 ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க

ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க

ஒரு சில வாரங்களாக பாரதி கண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளின் பிடியில் பாரதியின் மருத்துவமனை சிக்கி இருக்கும் காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்ததால் ரசிகர்கள் பலர் இது திரைப்படங்களுக்கு இணையாக இருந்து வருகிறது என்றும் திரைப்படங்களில் அரைத்த மாவையே இங்கேயும் அரைக்கிறார்கள் என்றும் பல்வேறு விதமாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ரசிகர்களை அதிகமாக காண்டாகிய சீன்கள் ஒருவழியாக முடியப்போகிறது என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.

ஆட்டத்தை தொடங்கிய கண்ணம்மா

ஆட்டத்தை தொடங்கிய கண்ணம்மா

பாரதியின் மருத்துவமனையில் பிணையமாக வைத்திருக்கும் மருத்துவமனை ஊழியர்களை தீவிரவாதிகளின் ஒருவன் ஒவ்வொரு பெண்களாக சீரளித்து கொண்டிருக்கிறான். அவனை அழிக்க வேண்டி கண்ணம்மா தன்னையே பலிக்காடாவாக ஆக்கி அந்தக் ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சை செய்யும் கத்திரிக்கோல் போன்றவற்றை வைத்து கொலை செய்து விடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக கண்ணம்மா தீவிரவாதிகளை அளிக்க தொடங்கி விட்டார் என்று அவருக்கு ஆதரவாக கருத்துக்களை எழுதி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+