ஐயோ மீண்டும் மீண்டுமா.. காணாமல்போன ஹார்ட் டிஸ்க்.. ரூ.140 கோடி போயிடுமே.. அதிர்ந்த கண்ணப்பா படக்குழு
ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவான கண்ணப்பா திரைப்படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண், விஎஃப்எக்ஸ் பணிகள் செய்யப்பட்டிருந்த காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்குடன் தலைமறைவாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின் வரலாற்று படங்களில் அனைத்து நடிகர்களும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் வரலாற்று புதினத்தை மையாக உருவாக்கி இருக்கும் திரைப்படம் கண்ணப்பா. மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கி வருகிறார். கடவுள் சிவனை வழிபடும் தீவிர பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாகும்.

கண்ணப்பா திரைப்படம்
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவின் பிரபாஸ், மோகன்பாபு, மோகன்லால், காஜல் அகர்வால், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பாக கண்ணப்பா படத்தின் டீசர் வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலும் கவனம் பெற்றது.
ரூ.140 கொடி பட்ஜெட்
அப்போது நடிகர் ரகுபாபு தரப்பில், இந்த படத்தை யாராவது ட்ரால் செய்தால், சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று வார்னிங் கொடுத்தார். இது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிய நிலையில், ரசிகர்கள் கவுன்டர் கொடுத்தனர். இந்த படத்தின் பட்ஜெட் மொத்தமாக ரூ.140 கோடியாகும்.
கொரியரில் வந்த ஹார்ட் டிஸ்க்
இந்த திரைப்படம் ஏப்ரல் 25ஆம் தேதியே வெளியாகவிருந்த நிலையில், பின்னர் ஜூன் 27ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில், விஎஃப்எக்ஸ் பணிகள் செய்யப்பட்டு வந்தது. மும்பையைச் சேர்ந்த விஎஃப்எக்ஸ் நிறுவனம் அதன் பணிகளை செய்து வந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான 24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனத்திற்கு ஹார்ட் டிஸ்கை அனுப்பி இருக்கின்றனர்.
எஸ்கேப்பான பெண்
கொரியர் மூலமாக ஹார்ட் டிஸ்க் அனுப்பப்பட்ட நிலையில், ரகு என்பவர் அந்த ஹார்ட் டிஸ்கை தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் இருந்த சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ஹார்ட் டிஸ்கை பெற்று கொண்ட சரிதா, அந்த நிமிடம் முதலே தலைமறைவாகிவிட்டார். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதன்பின் தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் புகார்
அந்த புகாரில் சரிதா படத்தினை நாசம் செய்யும் நோக்கத்துடன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஹார்ட் டிஸ்க் கிடைக்கவில்லை என்றால், மிகப்பெரிய இழப்பு நேரிடும் எனவும், அதிலுள்ள வீடியோக்கள் லீக்காகிவிட்டாலோ அல்லது டெலிட் செய்யப்பட்டலோ படத்திற்கு சிக்கலாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லால் சலாம் விவகாரம்
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தின் ஹார்ட் டிஸ்கும் இப்படிதான் மிஸ்ஸானது. இதன் காரணமாக லால் சலாம் படம் இதுநாள் வரை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவில்லை. பெரிய பெரிய படங்களுக்கு இப்படி ஹார்ட் டிஸ்க் காணாமல் போவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பலரும் ஹார்ட் டிஸ்க் மீது கூடுதல் கவனம் வைத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications