அரசியல் பிடிக்காத கன்னிகா.. அரசியலை நேசித்து வாக்கு கேட்க காரணம் இதுதானாம்!!
சென்னை: கன்னிகா சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கணவருக்காகவும்,மக்கள் நீதி மையம் கட்சிக்காகவும் வாக்கு கேட்டுள்ளார்.
Recommended Video
மக்களிடம் அவர் உருக்கமாக பேசிய வார்த்தைகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

கன்னிகா செய்த செயல்
சினிமாக்களில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் கன்னிகா ரவி தற்போது தன்னுடைய கணவருக்கும் தன் கணவர் அதிகமாக நேசிக்கும் மக்கள் நீதி மையத்திற்கும் ஆக செய்த செயல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் அரசியலே பிடிக்காமல் இருந்த இவர் தற்போது அரசியலில் காலடி எடுத்து வைத்து இருப்பது பல்வேறு நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வந்தாலும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகிறது.

பல திறமைகள் கைவசம் இருக்கு
நடிகையாக மட்டுமல்லாமல் மாடல் அழகியாகவும், சிலம்பாட்டத்தில் கைதேர்ந்தவராகவும், புத்தகங்கள் எழுதுவதில் புதுமையானவராகவும், சமையல் திறமையில் கைதேர்ந்தவராகவும் பல்வேறு திறமைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் கன்னிகா ரவி தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவருடைய வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். இவருடைய ஹோம்லியான கெட்டப்பை பிடித்துப் போன ரசிகர்கள் இவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

காரணம் இவர்கள்தான்
கன்னிகாவின் கணவரான சினேகன் பாடலாசிரியர் மட்டுமல்லாமல் ஒரு அரசியல் பிரமுகர் ஆகவும் இருந்து வருகிறார். அவர் குருவான கமல் வழியை பின்தொடர்ந்து மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளராக இருக்கின்றார். ஆனால் தனது கணவர் சார்பாகவும், மக்கள் நீதி மையம் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் சார்பாகவும், மக்கள் நீதி மைய பிரதிநிதிகள் சார்பாகவும் வாக்கு கேட்டு இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் பொதுவா தனக்கு அரசியல் பிடிக்காது. ஆனால் இன்று அரசியலை நேசித்து இந்த பதிவை போடுகிறேன் என்றால் அதற்கு காரணம் அதற்கு டாக்டர் கமலஹாசன் சாரும் தன்னுடைய கணவர் சினேகன் தான். அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியாதா என்ற எண்ணமும் தான் இந்த பதிவை போட வைத்தது என்று கூறியிருக்கிறார்.

வாக்கு சேகரிப்பு
பொதுவாக எல்லோரும் நினைக்கலாம் சேவை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தனியாக செய்யலாமே என்று, ஆமா செய்யலாம் அப்படி செய்தால் எத்தனை பேருக்கு செய்ய முடியும். 10 பேருக்கு, இல்லன்னா 100 பேருக்கு செய்ய முடியும். ஆனா நாம ஒரு பதவியில் இருக்கிறோம் என்றால் மக்களுக்கு தேவையானதை கவர்மெண்ட் இடம் கேட்டு ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களுக்கு முழுமையாக அவர்களுக்கு தேவையானதை செய்ய முடியும். அதனால் தான் கேட்கிறேன் தாழ்மையுடன் ஒரே ஒருமுறை மாற்றத்திற்காக வாக்களியுங்கள். மக்கள் நீதி மையத்தில் வாக்களியுங்கள். டார்ச் லைட் சின்னத்திற்கு.. நாளை நமதே என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications