Kayal TV Serial: கண் மூடி சிரிக்கும் கயல்...மத்தாப்பு சிரிப்பில் மனம் மயங்குதே...
கயல் சீரியலில் எப்போதும் இருக்கமாகவும் சோகத்தோடும் இருக்கும் கயல் கண்மூடி மனம் விட்டு சிரிப்பதைப் பார்த்து ரசிகர்களின் மனம் மயங்குகிறது.
சென்னை: கயலின் சிரிப்பைப்பார்த்து ரசிகர்களின் மனம் மயங்குகிறது. டிவி சீரியலில் எப்போதும் சோகத்தோடும், குடும்ப பொறுப்புகளை தோளில் சுமப்பதால் இறுக்கத்தோடும் காணப்படும் கயல் சைத்ரா ரெட்டி சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக பேசி சிரித்து விளையாடும் போட்டோக்களைப் பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களையும் இதயங்களையும் பறக்க விடுகின்றனர்.
சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் ஹீரோயின் சைத்ரா ரெட்டிக்காக ரசிகர்கள் ஒரு எபிசோடு கூட விடாமல் பார்த்து வருகின்றனர்.
மாமியாரை பழிவாங்கும் மருமகள், நாத்தனாருக்கு கெடுத்தல் செய்யும் அண்ணி போன்ற கதைகளை நிறைய பார்த்து விட்டோம். கயல் சிரியலில் திரும்பி திசை எங்கும் வில்லன்களாக இருக்கிறார்கள். அப்பா இல்லாத குடும்பத்தில் பொறுப்பான அக்காவாக இருக்கிறார் கயல். குடும்பத்தை காப்பாற்ற இரவு பகல் பாராமல் உழைத்து தம்பி தங்கைகளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்புகிறாள். தன்னை நேசிக்கும் எழிலை கூட ஏறெடுத்து பார்க்க கயலுக்கு நேரமில்லை.

உறவுக்கார வில்லன்கள்
குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தாலும் உறவுக்காரர்கள் வில்லன்களாக மாறுகின்றனர். பெரியப்பா என்ற பெயரில் கயல் குடும்பத்திற்கு குழி தோண்டுகிறார் வில்லன். அதில் இருந்து மீண்டு குடும்பத்தை கரையேற்றுகிறாள். தங்கை வேலைக்கு போகும் நேரத்தில் உருவாகிறது புதிய சிக்கல். கல்யாணம் ஆகாமலேயே கர்ப்பமான தங்கையால் சிக்கல் உருவாகிறது.

தங்கையின் திருமணம்
கயலின் தங்கை தேவி காதலிக்கும் விக்னேஷ் உடன் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார். எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு நிச்சயம் வரை வந்திருக்கிறது. எப்படியாவது நிச்சயத்தை நிறுத்தி திருமணத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்பது பெரியப்பாவின் திட்டம். அதற்காக பல முயற்சிகளை செய்கிறார். அதை ஒவ்வொன்றாக முறியடிக்கிறாள் கயல்.

வாந்தி வருமா
மணப்பெண் தேவிக்கு நிச்சயம் நடக்கும் போது அவமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பெரியம்மா தன் பங்குக்கு மாத்திரையை கலந்து ஜூஸ் கொடுக்கிறாள். அனைவரின் முன்னாலும் வாந்தி எடுக்க வைத்து பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என திட்டம் போடுகிறாள். அது தெரியாமல் பாசத்தில் ஜூஸ் கொடுப்பதாக நினைத்து குடித்து விட்டு தவித்துக்கொண்டிருக்கிறாள் தேவி.

நிச்சயம் நடக்குமா
மூர்த்தி அண்ணன் வராமல் நிச்சயம் நடக்கப்போகிறதே என்ற கவலை கயலுக்கு இருக்கிறது. அண்ணன் வந்தால் நிச்சயத்தை நிறுத்துவேன் என்று சொல்கிறார் கயலின் மாமியார். அதை பாயிண்டாக பிடித்துக்கொண்ட பெரியப்பா எப்படியாவது மூர்த்தியை நிச்சயம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வர திட்டம் போடுகிறார். அவன் வந்தால் தேவியின் நிச்சயம் நிற்கும் என்பது பெரியப்பாவின் திட்டம். கயல் அதை முறியடிப்பாளா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. இனி வரும் எபிசோடுகளில் கதை திருமணத்தை சுற்றியே நிகழும்.

மத்தாப்பு சிரிப்பில் மனம் மயங்குதே
வேலைப்பளுவை மறந்து கயலில் தங்கை திருமணத்தை எப்படியாவது தடையின்றி நடத்த வேண்டுமே என்ற கவலை ஒருபக்கம் இருந்தாலும் அவ்வப்போது சூட்டிங் இடைவேளையில் சக நடிகர்களுடன் மனம் விட்டு சிரித்து விளையாடுகிறார் கயல் சைத்ரா ரெட்டி, அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கண்ணை மூடி தன்னை மறந்து சிரிக்கும் கயல் சைத்ரா ரெட்டியைப் பார்த்து ரசிகர்களின் மனம் மயங்குகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications