சூட்டிங் ஸ்பாட்டில் “சில்க்” செய்த செயல்! என் கண்ணால் பார்த்தேன்! அதை மறக்க முடியாது.. குஷ்பூ ஓப்பன்
சென்னை: நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் நடிகை சில்க் ஸ்மிதா பற்றி சில தகவல்களை பேசி இருக்கிறார். தான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில், தான் பார்த்து வியந்த நடிகை சில்க் ஸ்மிதா தான் என்று கூறிய குஷ்பூ தான் நடித்த திரைப்படத்தில் சில்க் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார்.
பொதுவாக ஒரு சிலர் மறைந்தாலும் அவர் பற்றிய நினைவுகளை பலர் பெருமையாக சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்போம். அதுபோலத்தான் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. அவர் உயிரோடு இருந்த வரைக்கும் அவர் அதிகமான திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அவரோடு நடித்த நடிகர்கள் பழகிய நண்பர்கள் என்று பலரும் சில்க் ஸ்மிதா மறைந்த பிறகும் அவர் பற்றி பல இனிமையான நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அதிலும் அதிகமானவர் பேசுகையில் சில்க் ஸ்மிதா திரைப்படங்களில் வேண்டும் என்றால் கவர்ச்சியான கேரக்டரில் நடித்திருக்கலாம் ஆனால் அவர் நிஜ வாழ்க்கையில் அப்படி எல்லாம் கிடையாது. எல்லோரிடமும் ரொம்பவும் பாசமாக பழகுவார். அவருடைய உடை நேர்த்தி அவ்வளவு அழகாக இருக்கும் என்று பல நடிகைகளும் சில்க் ஸ்மிதா குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் குஷ்பூ பேசுகையில் நான் சினிமாவில் பார்த்து வியந்த நடிகைகளில் சில்க் ஸ்மிதாவும் ஒருவர். நான் தமிழில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அர்ஜுன் உடன் ஒரு படத்தில் நடித்திருந்தேன். ஆனால் அந்த படத்தை பிறகு பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சில்க் ஸ்மிதாவும் நடித்திருந்தார். அப்போது ஒரு நாள் நான் சூட்டிங் ஸ்பாட்டில் உட்கார்ந்து இருந்தேன். அங்கு இருந்த எல்லோரும் மேடம் வராங்க மேடம் வராங்க என்று ரொம்ப பரபரப்பாக இருந்தாங்க.
நானும் யார் அந்த மேடம் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் ஒரு சேரை கொண்டு வந்து வைத்தார். அதன் கைப்பிடியில் ஒரு டவல் போடப்பட்டது. பக்கத்திலேயே இன்னொரு டேபிளும் போடப்பட்டிருந்தது. அப்போது கொஞ்ச நேரத்திலேயே சில்க் ஸ்மிதா வந்தார். அவரை பார்த்ததும் நான் வாயடைத்துப் போனேன் என்னை அறியாமல் நானே வாயை திறந்து விட்டேன். வாவ் என்று சொல்லத் தோன்றியது.
அந்த அளவிற்கு அவருடைய உடை நேர்த்தியாக இருந்தது. அதுபோல அவருடைய மேக்கப் மற்றும் அவருடைய நடவடிக்கை அவ்ளோ அழகாக இருந்தது. நான் அவரை அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். பெண்களே பொறாமைப்படும் பேரழகு என்று சிலர் சொல்வதை கேட்டு இருப்போம். அதை சில்க் சுமிதா விஷயத்தில் நானே கண்கூடாக பார்த்தேன்.
ஆனால் அவ்வளவு அழகாக அலங்காரம் உடை நேர்த்தி என்று எல்லாம் இருந்தாலும் சில்க் ஸ்மிதா அந்த இடத்தில் வந்து உட்கார்ந்த போது ஒரு குழந்தை போல தான் சிரித்து எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசுவதற்கே எல்லோரும் ஆசைப்பட்டார்கள். ரொம்பவும் இனிமையாகவும் கேரிங்காகவும் பேசிக் கொண்டிருந்தார். மேக்கப் மற்றும் உடை அலங்காரம் செய்வதில் சில டிப்ஸ்களையும் சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருந்தார்.
உண்மையில் நான் பார்த்த இப்ப வரைக்கும் வியந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை என்றால் அது சில்க் சுமிதா தான் என்று அந்த பேட்டியில் நடிகை குஷ்பூ சில்க் ஸ்மிதா பற்றி பாராட்டி பேசி இருக்கிறார். இதற்கு பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications