ஜீ தமிழில் அப்படி...சன் டிவியில் இப்படி..கலக்கும் சைத்ரா..வரவேற்கும் ரசிகர்கள்
சென்னை : சன் டிவியில் ஒளிபரப்பாக ரெடியாகி வரும் கயல் சீரியலில் சைத்ராவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
முதல் சீரியலில் கதாநாயகியாக நடித்து விட்டு அதற்குப் பிறகு வில்லியாக மாறிய சைத்ரா மீண்டும் கதாநாயகியாக களம் இறங்கியதும் ரசிகர்கள் ஆதரவு குவிந்து வருகிறது.
கல்யாணத்திற்கு பிறகும் குறையாத அழகில் மின்னும் சைத்ராவை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் முடிந்ததை மறந்து காதல் கவிதைகளை பொழிகிறார்கள்.

மஞ்சள் தாவணி காற்றில் பறக்குது
பாவாடை தாவணியில் கலக்கிக் கொண்டிருக்கும் சைத்ர ரெட்டியை பார்த்த ரசிகர்களால் அவருடைய போட்டோவை ஷேர் செய்யாமல் இருக்கவே முடியவில்லையாம். இதனால்தான் இவருடைய போட்டோஸ்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் சக்கைபோடு போட்டு வருகிறது. வைரலாக வலம் வருகிறது என்றாலும் பரவாயில்லை, இது காட்டுத் தீ போல பரவி வருகிறது. இவர் இந்த மாதிரி இருந்தால் தான் அழகு என்று ஏங்கி போய் இருந்த ரசிகர்களின் ஆசை தற்போது நிறைவேறியது தான் இதற்கு காரணமா என்று தெரியவில்லை. ரசிகர்கள் தங்களுடைய தலைவியின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு கவிதைகளை கொட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய புது சீரியல் எப்போது வரும் என்று தான் பலர் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். சைத்ரா ரெட்டி புதுவித தரிசனத்தை கொடுத்ததும் ரசிகர்கள் புல்லரித்துப் போய் விட்டார்களாம்.

அழகு மனதை அள்ளுது
தமிழ் சீரியல் நடிகைகளின் ஒரு சிலர் அதிகமான உயரத்தில் அழகாக இருந்து வருகின்றனர். அதில் சைத்ரா ரெட்டியும் ஒருவர். இவர் முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பிரியா கேரக்டரில் அறிமுகமாகி இருந்தார். இந்த சீரியலில் இவருக்கு முன்பு இதே கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் திரைப்படங்களில் கலந்து கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகியதும் இவர் அவருக்கு பதிலாக களமிறங்கினார். ஆரம்பத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு மாற்றாக இவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட நாட்கள் செல்ல செல்ல இவருடைய நடிப்பில் அந்த வார்த்தைகளை எல்லாம் மறந்து விட்டனர். ஆனால் இவர் அந்த சீரியலில் நடிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அந்த சீரியல் முடிநதுவிட்டது. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஃபீல் பண்ணி தான் வந்தனர்.

உண்மையில் ஜாலி டைப் தான்
அதற்குப் பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிக்கப்போகிறார் என்று சொன்னதும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதாநாயகி கேரக்டரையே மிஞ்சும் வகையில் வில்லத்தனத்தில் களம் இறங்கிவிட்டார். தன்னுடைய உயரத்திற்கும் உடல் அமைப்புக்கும் இதுதான் சரியாக இருக்கும் என்று இவர் இந்த ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் எல்லாம் இவரை பார்த்து திட்டி தீர்த்தாலும் இளைஞர்கள் வட்டாரம் இவர் அழகை புகழ்ந்து தள்ளிக் கொண்டு தான் இருந்தார்கள். தற்போது லேட்டஸ்டாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி கதாநாயகியை விடவும் வில்லி அழகாக இருக்கிறார்கள். அந்த வகையில் சைத்ரா ரெட்டி கலக்கிவிட்டார். தொடர்ந்து பல வருடங்களாகவே வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது மீண்டும் கதாநாயகியாக மாறிவிட்டார்.

சஞ்சீவ் உடன் ஜோடி
சன் டிவியில் ஒளிபரப்பாக ரெடி ஆகிக் கொண்டிருக்கும் கயல் சீரியலில் இவர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானதும் இவருடைய ரசிகர்கள் அந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாக போகிறது என்று ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நடிக்கிறார். சஞ்சீவ் நடித்துக்கொண்டிருந்த சீரியல் முடிவடைந்ததும் இந்த சீரியலில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து வருகிறார்கள். சீரியல் எப்போது ஒளிபரப்பாக போகும் என்று தெரியாவிட்டாலும் அந்த சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஒரு சில போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. சைத்ரா ரெட்டி அந்த சீரியலில் அவருடைய குடும்பத்துடன் அழகான ஒரு புகைப்படத்தை எடுத்து இருக்கிறார். இந்த போட்டோஸ்கள் தான் தற்போது சைத்ராவின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஆர்வத்தில் ரசிகர்கள்
ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் தனக்கு 800 மில்லியன் பாலோவர்ஸ் வந்ததற்கு தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாவாடை தாவணியில் இவர் கலக்கலான ஒரு சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் எல்லாம் செம குஷி ஆகி விட்டார்கள். இதுவரைக்கும் இவரை திட்டி நெகட்டிவ் கமெண்டுகளை போட்டு வந்த ரசிகர்கள் கூட மீண்டும் இவருக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். மயக்கும் அழகை காட்டி இவர் சிரிக்கும் சிரிப்பை பார்த்ததும் பலபேர் சிலிர்த்துப் போய் விட்டார்களாம். அதனாலேயே அவருடைய போட்டோக்களை எல்லாம் அதிகமாக ஷேர் செய்து வந்தனர். இந்தநிலையில் தற்போது இவர் லேட்டஸ்ட்டாக நடிக்கும் சீரியலின் போட்டோவை பார்த்ததும் அதையும் வைரலாக்கி வருகின்றனர்.
-
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications