வெற்றி பெற்றதா மதராஸி? எல்லாம் ஓகே, ஆனால் கதை? சிவகார்த்திகேயனையும் சேர்த்து ஏமாற்றிய முருகதாஸ்?
சென்னை: தொடர் தோல்விகளில் இருக்கும் ஏஆர் முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து எடுத்துள்ள படம் 'மதராஸி'.. இந்த படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், தனக்கு ஒரு வெற்றி படம் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முருகதாஸை நம்பி இந்த படத்தை தந்தார்.. ஆனால் முருகதாஸ், சிவகார்த்திகேயனையும் ஏமாற்றிவிட்டார், ஆடியன்ஸையும் ஏமாற்றிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "புதுசா ஏதாவது முருகதாஸ் சொல்லியிருப்பார் என்று நினைத்தால், பழைய டெம்பளேட் கதையையே சொல்லியிருக்கிறார்.. துப்பாக்கி பார்ட்-2 பார்த்த மாதிரி மதராஸி படம் இருக்கு..

விஜய்க்கு பதிலாக இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.. அதில் ஸ்லீப்பர் செல் இருந்தனர், இதுல ஸ்பை இருக்கிறார்கள்.. துப்பாக்கியில் விறுவிறுப்பான காட்சிகள் இருந்தன.. முதல்தடவை என்பதால் துப்பாக்கி படம் ரசிக்கும்படமாக இருந்தது.
மதராஸி விறுவிறுப்பு
மதராஸியிலும் விறுவிறுப்பு இருந்தாலும் தப்பாக்கி படம் போலவே இருக்கிறது. மதராஸி படம் விறுவிறுப்பாக போனாலும், பழைய முருகதாஸ் படங்களின் சாயல்களை நினைவுபடுத்துகின்றன..
தர்பார், சிக்கந்தர், ஸ்பைடர் என 3 தோல்விப்படங்களை முருகதாஸ் தந்துவிட்டார்.. எல்லாமே பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்தான்.. அமரன் படத்தில் 300 கோடி வசூல் செய்திருந்தநிலையில், இந்த படத்திற்கும் சிவகார்த்திகேயனையே வைத்து எடுத்துள்ளார் முருகதாஸ்..
ஆக்ஷன் படங்கள்
ஆனால், சிவகார்த்திகேயன் காமெடி மூலம் மக்களை கவர்ந்தவர்.. ஆனால், மாவீரன் படத்தில் பாதி ஆக்ஷனில் இறங்கியிருந்தார்.. அமரன் படம் உண்மை சம்பவம் என்பதாலும், கதைக்கு தேவை என்பதாலும், அந்த ஆக்ஷன் மக்களிடம் எடுபட்டது.. ஆனால், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான மதராஸி படம் எடுபடவில்லை..
எனினும் தனக்கு தரப்பட்ட வேலையை சிறப்பாக சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார்.. பல காட்சிகளில் டூப் போடாமலேயே நடித்துள்ளார்.. டோல்கேட்டில் அறிமுக காட்சியில், கவின்குமாரின் சண்டைப்பயிற்சி அபாரமாக இருந்தது.. வித்யூத் ஜாம்வால் ஆஸ்பத்திரியில் தப்பித்து வருவது, ஹார்பரில் கிளைமேக்ஸ் சண்டைகள் மிகவும் அற்புதமாக இருந்தது.. ஹீரோ, வில்லன் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு சண்டை செய்திருக்கிறார்கள்.. எனினும் பழைய டெம்பிளேட் காட்சிகள் இதில் தெரிவதால், படம் சலிப்பு தட்டுகிறது.
வில்லன் சண்டை காட்சி அபாரம்
துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் கதையாக இருந்தாலும், படம் முழுக்க துப்பாக்கி சண்டைதான் இருக்கிறது..
நிறைய இடங்களில் லாஜிக் மிஸ்ஸாகிறது.. சிவகார்த்திகேயனுக்கு எப்படி துப்பாக்கி சுட தெரியும்? இதற்கு முன்பு ராணுவ வீரனாக இருந்தாரா? தீவிரவாதியாக இருந்தாரா? பிஜூ மேனன் இவரை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கிறார்? எப்படியாவது சாகணும் என்று சொல்லி கொண்டேயிருக்கிறார் என்பதற்காகவே அவரை தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கிறாரா? இப்படி பல ஓட்டைகள் உள்ளன.
பாடல்கள் நல்லா இல்லை
'சலம்பல்' பாடல் மட்டும்தான் கேட்கும்படி உள்ளது,. காதல் பாடல்கள் 2 இருந்தும்கூட, மனதில் ஒட்டவில்லை. அனிருத்தின் டச் சமீப காலமாகவே மிஸ்ஸாகிறது.. பாடல்களும் வெரைட்டியாக இல்லை. சிவகார்த்திகேயன், ருக்மணி இருந்தும்கூட, பாட்டு எதுவுமே ஹிட்டாகல..
மொத்தத்தில் எதுவுமே இந்த படத்தில் புதுமை இல்லை.. ருக்மணி வசந்த் இந்த படத்தில் நன்றாக நடித்துள்ளார்.. கிளாமராக மட்டுமே காட்டாமல், நன்றாக நடிக்க ஸ்கோப் உள்ளது..
ஏமாற்றிவிட்டார் முருகதாஸ்
படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது.. பிரம்மாதமாக படத்தை முருகதாஸ் எடுத்துள்ளார்.. கேமிரா அருமையாக இருக்கிறது.. ருக்மணி, சிவகார்த்திகேயன், பிஜூமேனன், வித்யூத் ஜாம்வால் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். ஆனால், கதை என்று ஒன்றில்லை.. கதையில் அழுத்தம் இருந்தால்தானே படம் நகர முடியும்.. அடுத்து என்ன? என்ற ஆர்வமே எழவில்லை..
தனக்கு ஒரு வெற்றி படம் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முருகதாஸை நம்பி இந்த படத்தை தந்தார்.. ஆனால் முருகதாஸ், சிவகார்த்திகேயனையும் ஏமாற்றிவிட்டார், ஆடியன்ஸையும் ஏமாற்றிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications