நமக்குள்ள சாரி, தேங்க்ஸ்.. வேணாம்ங்க... ஒரு கப் காபி போதும் ... ஆஹா குஷ்பூ ரொமான்ஸ்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் வெகு ஜோர்னுதான் சொல்லணும். அதுவும் ரெண்டு நாளா பிரச்சாரத்துக்கு இடையில குஷ்பூ வேற வர்றாங்க.. ரொம்ப நல்லாருக்கு.
மச்சினன் ரவி ஐடியா குடுக்க வீட்டுலயே குடும்பமா உட்கார்ந்து 96 படம் பார்க்கறாங்க. இது ரெண்டாவது மருமகளுக்கு பிடிக்கலை. காரணம் என்னன்னு பார்த்தா அங்க பாக்கியலட்சுமியும் இருக்கறதுதான்.
ரவி, பாக்கியலட்சுமி ரெண்டு பேரும் மகாலட்சுமியா நடிச்சுருக்கும் குஷ்பூ தனது கணவர் தோளில் சாஞ்சுகிட்டு படம் பார்க்கறதை பார்த்து ரொமான்ஸ் ஆகிடறாங்க. அதெல்லாம் இருக்கட்டும்.. இப்போ மகாலட்சுமி கணவருடன் செய்யும் ரொமான்ஸ் பார்க்கலாம்.

பாடல்
மகாலட்சுமி கண்ணாடியை பார்த்து தலையை வாரிக்கொண்டே பாட்டு பாடறாங்க. லட்சுமி.. நீ இவ்ளோ நல்லா பாடுவியான்னு கேட்கறார் கணவர். மகா வெட்கப்பட, என்ன லட்சுமி என்கிட்டே சொல்லவே இல்லையே.. இவ்ளோ நல்லா பாடறியேன்னு கேட்கறார்.

தப்பு பண்ணிட்டேன்..
நான்தான் லட்சுமி வேலை வேலைன்னு உன்னை பத்தி எதுவும் தெரிஞ்சுக்காம இருந்துட்டேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் கூட பார்த்ததில்லை. ஏதோ இன்னிக்கு ரவி புண்ணியத்துல படம் பார்த்தோம். இனமே வாரம் வாரம் இது போல படம் பார்க்கணும் லட்சுமின்னு சொல்றார்.

காபிதான்
சாரி லட்சுமின்னு புருஷன் சொல்ல, சாரி, தேங்க்ஸ் எல்லாம் நமக்குள்ள இனிமே வேணாம்ங்க.. அப்படி இரண்டுல ஏதாவது ஒண்ணு எப்போ சொல்ல தோணுதோ அப்போ காபி போட்டு குடுங்கன்னு சொல்றாங்க லட்சுமி. ஐயோ எனக்கு காபி போட தெரியாதேன்னு கணவர் சொல்ல, கத்துக்கோங்க.. பொண்டாட்டிக்காக இது கூட கத்துக்க கூடாதான்னு கேட்கறாங்க.

வேணாம் காலையில
சரி.. இப்போ சாரி சொன்னேன்ல.. காபி போட்டு கொண்டு வரேன் இரு லட்சுமின்னு புருஷன் சொல்ல, இப்போ வேணாங்க. காலையில போட்டு குடுங்கன்னு சொல்றாங்க. லட்சுமி என்னை விட்டு நீ எங்கயும் போக கூடாது.. நீ இல்லாம என்னால இருக்க முடியாது லட்சுமி. அப்படியே செத்தாலும் உனக்கு முன்னால நான் போயிடணும்னு அழறார். புருஷனை அணைச்சுக்கறாங்க லட்சுமி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications