திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குள் இப்படி செய்யலாமா? ரசிகரின் கேள்விக்கு மகாலட்சுமி கொடுத்த பதில்
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த மகாலட்சுமி ஆயுத பூஜைக்கு வெளியிட்ட புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கின்றனர்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் தான் ஆகிறது அதற்குள் இப்படி ஆயுத பூஜைக்கு கருப்பு நிற உடையில் போஸ்ட் போடலாமா என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள்.
கேள்வி கேட்பவர்கள் சரியாக கேட்க வேண்டும் அது கருப்பு உடை அல்ல என்று நெட்டிசன்களின் கண்கள் திறமையை நினைத்து நொந்தபடி மகாலட்சுமி பதிலளித்துள்ளார்.

ஒரே நாளில் பிரபலம்
ஒரே நைட்டில் ஒபாமா ஆகிறது என்று சொல்வார்கள் அதுபோலதான் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. இவர் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பல சீரியல்களில் முக்கியமான கேரக்டராக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்போது கூட இவர் இந்த அளவிற்கு பிரபலமாகவில்லையாம். ஆனால் தன்னுடைய திருமணத்தின் மூலமாக ஒரே நாளில் உலகமெங்கும் வியந்து பார்க்கும் அளவிற்கு இவர் செம பாப்புலர் ஆகிவிட்டார். மகாலட்சுமி ஏற்கனவே சர்ச்சைகளுக்கு நெருங்கிய சொந்தக்காரர் தான் போல, அதனாலே இவர் செய்யும் செயல்கள் எல்லாம் பல நேரங்களில் பிரபலமாகி விடுகிறது.

எளிமையான திருமணம்
சின்னத்திரை நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் தான் அதே திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரவீந்தரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவருடைய திருமணம் எளிமையாக திருப்பதி கோவிலில் வைத்து நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய காதல் கணவரை பற்றி கவிதைகளை எழுதி இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் எப்ப வரைக்கும் அதிலிருந்து மீளவே இல்லையாம்.

சர்ச்சைகளுக்கு பதில் இல்லை
ஏற்கனவே மகாலட்சுமி முதல் கணவரோட ஏற்பட்ட பிரச்சனை சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்தது தான். அதைத் தொடர்ந்து மகாலட்சுமிக்கும் அவரோடு நடித்த சீரியல் நடிகர் ஒருவருக்கும் காதல் என்று அந்த சீரியல் நடிகரின் மனைவி இவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இவருடைய பெயர் சமூக வலைத்தளத்தில் சர்ச் பண்ணி பார்த்தாலே தெரிந்து விடும் அளவிற்கு பிரபலமாகவே இருந்து வந்தது. தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கும் மற்றும் பிரச்சனைகளுக்கும் எப்போதுமே வாய் திறக்காமல் இருந்து வந்த மகாலட்சுமி தன்னுடைய வழக்கமான சீரியல் நடிப்பையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்து வருகிறார்.

மகாலட்சுமியின் பதிலடி
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக சரஸ்வதி பூஜையை கொண்டாடி இருக்கிறார். சிறப்பாக பூஜையை கொண்டாடி ஒரு போட்டோ சூட்டும் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த போட்டோ தான் தற்போது நெட்டிசன்களால் அதிகமாக மீண்டும் கலாய்க்கப்பட்டு வருகிறது. இவர் புடவையில் எடுத்த புகைப்படத்தை பார்த்து, நல்ல நாளில் இப்படியா கருப்பு புடவையில் வருவீங்க? என்று ரசிகர்கள் பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதுவும் திருமணம் முடிந்து ஒரு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இப்படியெல்லாம் செய்யலாமா? என்று சிலர் உரிமையோடு கோவப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மகாலட்சுமி முதல் முறையாக இது கருப்பு புடவை அல்ல கரும் பச்சை நிற புடவை நன்றாக பாருங்கள் என்று பதில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications