இனி "அதற்காக ஆசைப்படக்கூடாது” ..மகாலட்சுமி எடுத்த முடிவு.. அட இவ்வளவு நாட்களுக்குள் இப்படியா?
சென்னை: சமீபத்தில் தான் திருமணம் முடிந்த சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி வெளியிட்ட பதிவு பலரையும் புலம்ப வைத்துள்ளது.
திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே முடிவடைந்த நிலையில் இனி அதற்கு ஆசைப்படக்கூடாது என்று மகாலட்சுமி வெளியிட்ட பதிவிருக்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு பிடித்தது இதுதானாம்
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு தொகுப்பாளராக 90ஸ் கிட்ஸ்களின் மனதை கவர்ந்தவர். தொகுப்பாளர்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களில் இவரும் ஒருவராக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார் .இவருடைய படபட பேச்சும் புசுபுசுவென கண்ணமும் ரசிகர்களின் ஃபேவரைட் என்று எப்போதுமே கூறி வருகின்றனர். இவருடைய ஸ்பெஷலான சிரிப்பை பார்த்து இவருக்கு போன் பண்ணி பல ரசிகர்கள் ஆரம்பத்தில் வழிந்து வந்திருக்கிறார்கள். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வாசுகி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.

பிரிந்து போன முதல் திருமணம்
மகாலட்சுமிக்கு தற்போது ஒரு சில மாதங்களுக்கு முன்பும்தான் இரண்டாவது திருமணம் முடிந்து இருந்தது. ஏற்கனவே மகாலட்சுமிக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர் . முதல் கணவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நேரத்தில் மகாலட்சுமியை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த பரபரப்பு ஓய்ந்த அடுத்த கொஞ்ச நாட்களுக்குள் இவருடன் நடித்த சின்னத்திரை நடிகர் ஒருவருக்கும் இவருக்கும் தப்பான தொடர்பு இருப்பதாக அந்த நடிகரின் மனைவி சமூக வலைதளத்தில் மகாலட்சுமியின் பெயர் பரவலாக பேசக்கூடிய வகையில் செய்து விட்டார்.

தொடர்ந்த சர்ச்சைகள்
தற்போது கொஞ்ச நாட்கள் ஆகத்தான் இவருடைய பெயர் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தது. இந்த நிலையில் இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு இப்ப வரைக்கும் இவர்கள்தான் ட்ரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்போது அன்பே வா சீரியலில் வாசுகியாக அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் அனைவரையும் புலம்ப வைத்திருக்கிறது.

இப்படி ஒரு தத்துவமா
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி தான் சந்தோஷமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் சரி அதை ரசிகர்களோடு அதிகமாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இன்று அழகான கார் முன்பு நின்ற படியே இவர் விதவிதமான போட்டோக்களை எடுத்து இருக்கிறார். அப்படியே ஒரு கேப்ஷனையும் தட்டி விட்டு இருக்கிறார். அதில் "அதற்காக ஆசைப்படுவதை நிறுத்திவிட்டு, வேலையை கவனிக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார் .இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவ்வளவு நாட்களுக்குள் ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்குமோ ?என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய தொடங்கிவிட்டதால், மகாலட்சுமியிடம் முன்பு போல பேசவில்லையாம். அதனால் தான் இப்படி ஒரு கேப்ஷன் என தங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications