மகாநதி சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் ? விஜய்யை விட இவருக்கு இத்தனை மடங்கு ஊதியமா?
சென்னை: மகாநதி சீரியல் நடிகர், நடிகைகளின் ஊதியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த சீரியல்தான் விஜய் டிவியில் பேவரைட் சீரியலாகிவிட்டது. இந்த சீரியலில் யாருக்கு சம்பளம் அதிகம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மக்களின் பொழுதுப்போக்காக டிவி பார்ப்பது என காலம் மலையேறி தற்போது மெகா சீரியல்களை மறக்காமல் தவிர்க்காமல் பார்க்கும் நிலை உள்ளது. ஒரு நாள் சீரியல் பார்க்காவிட்டாலும் அக்கம்பக்கத்தினரிடமாவது கேட்டு சீரியல் கதையை தெரிந்து கொள்வோரும் இருக்கிறார்கள்.

இன்னும் பிறர் சீரியல் வில்லன், வில்லிகளை திட்டுவதும் உண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இதற்கு தற்போது போட்டியாக அய்யனார் துணை எனும் சீரியல் இருக்கிறது. அது போல் மக்களின் பேவரைட் சீரியலாக விஜய் டிவியில் கொண்டாடப்படுவது மகாநதி எனும் சீரியல்தான்.
விஜய்- காவிரி
இந்த சீரியலில் விஜய், காவிரியின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகியுள்ளது. இதனால் இதற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரங்கள் என கூறி ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. இதை பார்க்கலாமா?
ரூ 15 ஆயிரம்
இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் விஜய் என்கிற சுவாமிநாதன் ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் ஊதியமாக பெறுகிறார். அது போல் காவிரியாக நடிக்கும் லட்சுமி பிரியாவுக்கு ஒரு நாளைக்கு ரூ 10 ஆயிரமும் குமரனாக நடிக்கும் கமுருதீனுக்கு ஒரு நாளைக்கு ரூ 8000 வழங்கப்படுகிறது.
கங்காவுக்கு எவ்வளவு
அது போல் கங்காவாக நடிக்கும் தரணிக்கு ரூ 6 ஆயிரமும் யமுனாவாக நடிக்கும் ஆதிரைக்கு ரூ 5 ஆயிரமும், நர்மதாவாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் காவியாவுக்கு ரூ 2 ஆயிரமும் , நிவின் எனும் ருத்ரன் பிரவீனுக்கு ரூ 10 ஆயிரமும், ராகினி எனப்படும் சகாஸ்டிகாவுக்கு ரூ 7 ஆயிரமும் பசுபதி ரோலில் நடிக்கும் ரமேஷுக்கு ரூ 6 ஆயிரமும், தாத்தாவாக நடிக்கும் சோமுவுக்கு ரூ 8 ஆயிரமும் பாட்டியாக நடிக்கும் கல்யாணிக்கு ரூ 4 ஆயிரமும் அஜயாக நடிக்கும் பாஸ்கர் நடராஜனுக்கு ரூ 5ஆயிரமும் சுஜாதா சிவகுமாருக்கு ரூ 7 ஆயிரமும், சிறப்பு தோற்றத்தில் சந்தானமாக நடிக்கும் சரவணனுக்கு ரூ 20 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படுகிறதாம்.
560 எபிசோடுகள்
இவரது கேரக்டர் எப்போதாவது வந்தாலும் நல்லதொரு ரீச்சை கொடுக்கிறது. இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது 560 எபிசோடுகளை தாண்டி செல்கிறது. இந்த சீரியல் தினமும் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
4 சகோதரிகள்
இது 4 சகோதரிகளின் கதையை சித்தரிக்கிறது. தந்தையை இழந்து சமூகத்தில் உயர முயற்சி செய்யும் சகோதரிகளின் கதை. அவர்கள் வாழ்வில் ஜெயித்தார்களா, என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்கள் என்பது குறித்து கதை பின்னப்பட்டுள்ளது.
விருதுகள்
சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் விருதுகள், பதக்கங்கள் கொடுக்கப்படுவதால் நடிகர், நடிகைகளும் தங்களது முழு முயற்சியையும் தாண்டி நடித்து வருகிறார்கள். இந்த சீரியலை நீங்கள் பார்க்கிறீர்களா? உங்கள் கருத்துகளை சொல்லுங்களேன்!












Click it and Unblock the Notifications