காதலர் தினம் முடிந்ததும் மணிமேகலை கூறிய மகிழ்ச்சியான செய்தி..இது சூப்பர் தான்..வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: மணிமேகலை தன்னுடைய கணவருடன் நடுரோட்டில் செய்த செயல் ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே புது கார் வாங்கியாச்சு அடுத்ததாக புது பைக்கில் இவர்கள் அலப்பறை தாங்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

பிரபலமான தொகுப்பாளர்
தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே டக்கென்று மனதில் நினைவு வருபவர்களில் ஒருவராக இருக்கும் மணிமேகலை தற்போது தனது கணவருடன் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்களுடைய காதல் பல சிங்கிள்ஸை எரிச்சலடைய செய்தது மட்டுமல்லாமல் கோபப்பட வைத்துக் கொண்டிருக்கும்போது, தற்போது இவர்கள் செய்த செயல் பலரையும் பொறாமைப்பட வைத்துள்ளது. பல வருடங்களாக காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் மணிமேகலை மற்றும் உசேன் தம்பதிகளுக்கு தற்போது அவர்களுடைய ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

என்றும் காதலர் தினம் தான்
தொகுப்பாளராக இருக்கும்போதே டான்ஸ் மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இவர்களுடைய காதலுக்கு வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது இவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். எந்த ஒரு குடும்ப ஆதரவும் இல்லாமல் இவர்கள் தங்களுடைய சொந்த உழைப்பினால் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருவதை பார்க்கும் போது ரசிகர்கள் பலருக்கும் இவர்கள் முன்மாதிரியாக இருந்து வருகின்றனர். தற்போது தான் காதலர் தினம் சிறப்பாக அனைவரும் கொண்டாடி உள்ளனர். ஆனால் இவர்களுக்கு என்றுமே காதலர்கள் தினம் தான்.

குக் வித் கோமாளியில் கலக்கல்
மணிமேகலை மற்றும் உசேன் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருந்து வருகின்றனர். ஒருவருக்கு ஒருவராக ஆறுதலாக இருப்பதால் தான் அவர்களுடைய துறையில் தொடர்ந்து இவர்களால் வெற்றி அடைய முடிகிறது என்று பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கின்றனர். தற்போது மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிசியாக இருந்து வருகிறார். எப்போதுமே அவருடைய பேச்சை ரசிக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் கோமாளி தனத்தையும் ரசித்து வருகின்றனர்.

அடுத்த மகிழ்ச்சியான செய்தி
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து காதல் தம்பதிகள் தங்களுடைய காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி இருந்தனர். இந்த நிலையில் இன்று மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். மீண்டும் காதலர்களாக மாறி மணிமேகலையும் உசேனும் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடைய இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இப்போதுதான் புது கார் வாங்கி இருந்தார். அதற்குள் அடுத்த மகிழ்ச்சியான செய்தியா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து முன்னேற்றம் அடையவே வாழ்த்துக்களையும் கூறுகின்றார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications