வெக்கமா இல்லையா..!! ராஜூவை கண்டமேனிக்கு வசைப்பாடிய மன்சூர் அலிகான்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜு வூட்டுல பாட்டி என்னும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மன்சூர் அலிகான் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
பொதுவாக ராஜூதான் தனது நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களை கலாய்த்து வருவார் ஆனால் தற்போது மன்சூர் அலிகான் ராஜுவை வார்த்தைகளால் பந்தாடி விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
மன்சூர் அலிகான் ராஜுவை பார்த்து பேசிய வார்த்தைகளை கேட்டதும் ரசிகர்கள் நாங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை அப்படியே இவர் பேசி விட்டாரே என்று மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

விஜய் டிவி பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு போட்டியாளர்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயித்து விடுகிறார்கள்.அந்த மாதிரி தான் கடந்த ஐந்தாவது சீசனில் போட்டியாளராக அறிமுகம் ஆகி டைட்டிலை ஜெயித்த ராஜூவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.ஒரு வாய்ப்பு தனக்கு கிடைக்காதா தனது திறமையை காட்ட என்று ஏங்கிக் கொண்டிருந்த ராஜூவுக்கு பிக் பாஸ் சிறப்பான தருணத்தை கொடுத்திருந்தது. ராஜூவின் அல்டிமேட் காமெடி மற்றும் கேரக்டரை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர்.

தொகுப்பாளராக அறிமுகம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜு எப்படியும் திரைப்படங்களில் கதாநாயக வலம் வருவார் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகும் ராஜு விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் பலர் கடுப்பாகி கமெண்ட்களில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மன்சூர் அலிகானின் வருகை
ராஜூக்கு ரசிகர்களில் மத்தியில் இருக்கும் மதிப்பை பார்த்த விஜய் டிவி அவருக்காக ராஜூ வூட்டுல பார்ட்டி என்னும் ஒரு புது நிகழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர்கள் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கொண்டிருக்கின்றனர். பிரியங்கா தொகுப்பாளராகவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் ராஜுவின் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக மன்சூர் அலிகான் வந்திருக்கிறார். தனக்கே உரிய நக்கல் தனத்தோடு எகத்தாளமான பேச்சை கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ராஜூவும் மிரண்டு போயிருக்கிறார்.

ரசிகர்களின் ஆதரவு
வெக்கமா இல்லையா?? அழகா தானே உங்க அம்மா அப்பா பெத்து விட்டு இருக்காங்க. போய் நடிக்கிற வேலையை பார்க்காமல் இப்படி ராஜு வூட்டுல பாட்டி என்று விஜய் டிவியை சுற்றிக்கொண்டு வருகிறாயே என்று கண்டமேனிக்கெல்லாம் மன்சூர் அலிகான் ராஜுவை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். இவ்ளோ அழகா இருக்கிற பையன் போயி நடிச்சு முன்னேறத விட்டுவிட்டு சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று இப்படி இருக்கிறாயே?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜு போயிருந்தேன் சார் என்று பயந்தபடியே கூறவும், இதைப் பார்த்த ரசிகர்கள் எங்களுடைய மனதிலும் இதைதான் தோன்றுகிறது. கதாநாயகனாக ராஜு வருவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ராஜு மீண்டும் தொகுப்பாளராகவே வருவது அதிர்ச்சியையும் கொடுத்திருப்பது என்பது ரசிகர்களின் கருத்துக்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications