'ஆசை அதிகம் வச்சு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை...இத்தனை ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளாரா..??
சென்னை:80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோகினியை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.இன்று வரை பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.
நல்ல நடிகை சமூக ஆர்வலராக ரோகினியை தெரிந்த பலருக்கு அவர் ஒரு நல்ல பாடலாசிரியர் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.இவரா..!? இந்த பாடல்களை எழுதினார்!? என்று ஒரு சில ஹிட் பாடல்கள் ஆச்சரியத்தை தருகிறது. ரோகிணியை பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் சில.

மறக்க முடியாத மறுபடியும் ரோகினி
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகியாகவும், குணசித்திரவேடம் என பல கதாபாத்திரங்களை ஏற்று இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் ரோகிணி. இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் மறுபடியும் படத்தில் 'ஆசை அதிகம் வச்சு' பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம் அன்றைய இளசுகளை ஒரு ஆட்டம் காண வைத்தது.தமிழ்,தெலுங்கு, மலையாளம், என்று பல மொழிகளில் நடித்துள்ள ரோகிணி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகருடன் திருமணம் மற்றும் விவாகரத்து
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு என்று புது இலக்கணத்தை வகுத்த ரகுவரனை காதல் திருமணம் செய்து கொண்டார் ரோகினி. இவர்களுக்கு ரிஷிவரன் என்ற ஒரு மகன் இருக்கிறார்.போதைப் பழக்கத்திற்கு மிகவும் அடிமையாக இருந்த ரகுவரன் எவ்வளவோ முயன்றும் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை. இதனால் ரகுவரனிடமிருந்து விவாகரத்து பெற்ற ரோகிணி இன்று வரை தனியாக வசித்து வருகிறார்.

பாடலாசிரியரா இவரா
நடிகை என்பதையும் தாண்டி பல்வேறு சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் இவர். நடிகையாகவும், சமூக ஆர்வலராகவும் பலருக்கு தெரிந்திருக்கும் ரோகிணியை பாடலாசிரியராக அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்பொழுது இவர் எழுதிய சில பாடல்களை கேட்ட இணையவாசிகள், இவரா!! இந்தப் பாடல்களை எழுதினார்!? என்று ஆச்சரியத்தோடு இவர் எழுதிய வேறு பாடல்கள் என்ன? என்ன? என்று இணையத்தில் தேடி வருகின்றனர்.

மறுபடியும் ரோகினியின் மறுபக்கம்
ரோகினி எழுதிய பாடல்களில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்றிருந்த 'உனக்குள் நானே'என்ற பாடல், விஜய் நடிப்பில் வெளிவந்த வில்லு படத்தில இருந்த 'ஜல்சா.. ஜல்சா' பாடல்களும் ரோகிணி தான் எழுதினார் என்று பலருக்கு தெரியாமலேயே ஹிட்டான பாடல்கள் ஆகும்.மற்றும் பம்பாய், இந்தியன் படங்களில் வரும் மனிஷா கொய்ராலா குரல், பேரழகன், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் ஜோதிகா குரல் போன்று பல தமிழ் ஹீரோயின்களுக்கு தனது குரலை கொடுத்துள்ளார் ரோகிணி. மற்றும் பிரபு நடிப்பில் வெளிவந்த சின்ன வாத்தியார் படத்தில் வந்த கண்மணியே கண்மனியே பாடல் எஸ்.பி.பி யுடன் இணைந்து இவர் பாடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.அதுமட்டுமில்லாமல் இவர் சின்ன சின்ன ஆசை, கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications