சந்திரலேகா சீரியல் நடிகையின் மாஸ் குத்தாட்டம்... இது வேற லெவல்
சந்திரலேகா டிவி சீரியல் நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை: டிவி சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் "டாடி மம்மி வீட்டில் இல்லை" என்று செம குத்தாட்டம் போட்டுள்ளார் சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா. அதை விட புல்லட் பாட்டுக்கு அவர் ஆடிய சோலோ டான்ஸ் வேற லெவல் என்கின்றனர் ரசிகர்கள்.
சந்திரலேகா டிவி சீரியல் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 2200 எபிசோடுகளை தொட்டுள்ளது இந்த சீரியல். பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்த்து விட்டுதான் பல இல்லத்தரசிகளுக்கு சாப்பாடே இறங்குமாம்.
சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இந்த தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா.

ஸ்வேதா சினிமா பயணம்
அஜித் குமார் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தில் அஜித் குமாரின் தங்கையாக நடித்திருந்தார் ஸ்வேதா.இந்த படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து "வள்ளுவன் வாசுகி" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சந்திரலேகா டிவி சீரியல்
ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா, விவேக் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்திரலேகா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

2000 எபிசோடுகள்
செய்தியாளராக போல்டான பெண்ணாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் இடம் பிடித்தவர் ஸ்வேதா. பெற்றவர்களுக்கு பாசமான மகளாகவும்... புகுந்த வீட்டில் நல்ல மருமகளாகவும் நடித்து வரும் சந்திராவிற்கு ரசிகைகள் அதிகம். இப்போது சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2000 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிறது.

டாடி மம்மி வீட்டில் இல்ல
சீரியலில் பிஸியாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஸ்வேதா. சமீபத்தில் சக நடிகையோடு இவர் ஆடியுள்ள டாடி மம்மி வீட்டில் இல்ல... பாடல் ஏராளமான லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

புல்லட் பாட்டுக்கு தனி டூயட்
புல்லட் பாட்டுக்கு பல நடிகைகள் ஆடி ரீல்ஸ் போட்டிருந்தாலும் ஸ்வேதா தனியாக ஆடியுள்ள நடனம் வேற லெவல் என்கின்றனர் அவரது ரசிகர்கள். நடனம் மட்டுமல்ல அசத்தலான ஆடைகளில் மணப்பெண்ணாய் ஜொலிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். சீரியலில் சீரியஸாக அழுது கொண்டே நடிக்கும் ஸ்வேதா இந்த போட்டோக்களில் அசத்தலாக இருக்கிறார் என பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications