MS Bhaskar: ரஜினிகாந்த் போனில் பாராட்டுனாரு! கமல்ஹாசன் நேரில் கூப்பிட்டு திட்டினாரு! எம்எஸ் பாஸ்கர் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் குணச்சித்திர பீடங்களிலும் காமெடி கேரக்டரிலும் தன்னுடைய திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பை பாராட்டியது குறித்தும், கமல்ஹாசன் தனக்கு அறிவுரை வழங்கியது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

சினிமா திருப்பம் வரை
எம்.எஸ். பாஸ்கரின் சொந்த ஊர் நாகப்பட்டினம் தான். தமிழகத்தில் நவீன நாடகங்களை நிகழ்த்திய 'புதிய நாடகத்திற்கான சங்கம்' என்ற தமிழ் நாடகக் குழுவில் அவர் ஒரு உறுப்பினராக சேர்ந்து இருக்கிறார். நாடகக் கலைஞராகப் பயணித்தவர், அதன்பின் தெலுங்கு மற்றும் ஆங்கிலப் படங்களைத் தமிழில் டப்பிங் செய்து வந்தார்.
1987-ம் ஆண்டு வெளியான "திருமதி ஒரு வெகுமதி" திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்துத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90-களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவருக்கு, "எங்கள் அண்ணா" திரைப்படம் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவருடைய பல சிறந்த வசனங்கள் மற்றும் நடிப்புத் திறன் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.
சினிமாவில் இவர் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்ன திரையில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் பட்டாபி கேரக்டரில் நடித்து பலருடைய பாராட்டையும் பெற்றுவிட்டார் அந்த கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைவருடைய மனதையும் கவர்ந்திருந்தார்.
ரஜினி பாராட்டிய நடிப்பு
எம்.எஸ். பாஸ்கர் தான் ரஜினிகாந்தை போல நடித்ததைக் கண்டு ரஜினி அழைத்துப் பாராட்டியதைப் பற்றி விவரித்தார். "மாசிலாமணி" மற்றும் "குரு என் ஆளு" திரைப்படத்தில் நான் ரஜினிகாந்தைப் போன்று நடித்திருப்பதை ரஜினி பார்த்துவிட்டு எனக்குப் போன் செய்து சிரித்தார். விடாமல் ஒரு இரண்டு நிமிடம் சிரித்துவிட்டு, அந்த 'ஒரு கோடி சன் லைட்' போல என்னையே பார்ப்பது போன்று இருந்தது பாஸ்கர். பேசாமல் சிரிக்க வைக்கிறீர்களே, உங்களால் தான் இது முடியும் என்றார்" என்று எம்.எஸ். பாஸ்கர் கூறியுள்ளார்.
அதன்பின்னர் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி போன் செய்தார். அப்போது நான் கோயம்புத்தூர் சென்று கொண்டிருந்தேன். அவர் போன் செய்து பாராட்டிவிட்டு அந்த இயக்குநர் நம்பர் கேட்டார். நானும் கொடுத்தேன். இயக்குநரிடம் ரஜினி அண்ணன் போன் செய்வார் என்று சொல்லியதும் அவரும் சம்மதித்துவிட்டார். அதன்பின்னர் ரஜினி போன் செய்து இயக்குநரையும் பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசன் தேடல்
'சூது கவ்வும்' திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன், "எங்கே அவன்" என்று என்னைத் தேடியுள்ளார். அதன்பின்னர் எனக்குப் போன் செய்து பாராட்டிவிட்டு, 'சின்ன பாப்பா பெரிய பாப்பாவில்' என் உடல் முழுவதும் கோல்டாகிவிடும், அதன்மீது பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும்போது அவர் அலுவலகத்திற்கு என்னை வரச் சொன்னார். நானும் சென்றேன். அவர் என் உடம்பைப் பார்த்துப் பேசும்போது ஒரு நடிகரின் பெயரைக் சொல்லி, அந்த நடிகர் இறந்துவிட்டார் தெரியுமா? இப்படியெல்லாம் இருக்கக் கூடாது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொன்னார் என்றும் பாஸ்கர் தெரிவித்தார்.
விருதுகள்
எம்.எஸ். பாஸ்கர் "மொழி" படத்திற்காகச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும், 2017-ம் ஆண்டு வெளிவந்த "8 தோட்டாக்கள்" படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார். எம்.எஸ். பாஸ்கர் நடிப்பை பாராட்டுவதோடு, அவருக்கு அறிவுரை வழங்கிய ரஜினி, கமல் ஆகியோரின் செயல் அவருக்குப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தலில் மநீம போட்டியில்லை.. திமுகவுக்கு நிபந்தனையின்றி ஆதரவு! கமல்ஹாசன் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications