செதில் செதிலா காலி.. நல்லவேளை, முத்தமழை பாட்டு வைக்கல! சந்தானம் கரீனா சோப்ரா வரை போன திரிஷா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்த மழை பாட்டையாவது படத்தில் வைக்கக்கூடாதா? தக் லைஃப் படத்துக்கு சென்றதே முத்த மழை பாடலுக்காகத்தான் என்று ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டு வந்தனர்.. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக முத்தமழை பாடல் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது.. பாடகி தீயின் குரல் த்ரிஷா மைக்கில் பாடுவது போல அமைந்துள்ளது.. இந்த பாட்டு வெளியானதிலிருந்தே இணையவாசிகள் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்தில் முத்தமழை பாடல் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.. மேலும், தக் லைஃப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் மோசமான விமர்சனத்தை பெற்றுத்தந்தது..

Television Trisha muththa mizhai

முத்தமழை பாடல்

படத்தில் முத்தமழை பாட்டையாவது வைத்திருக்கலாமே? மற்ற பாடல்களும் படத்தில் முழுவதுமாக இல்லை, விண்வெளி நாயகன் பாடலும், படம்முடியும்போது டைட்டில் வந்துவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் குமுறினார்கள்.

இந்நிலையில் படக்குழுவினர் முத்த மழை பாடலை தனி வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்.. இதை பார்த்த நெட்டிசன்கள், பாடலை ட்ரோல் செய்து வருகிறார்கள்.. நல்ல வேளை இந்த பாட்டை படத்தில் வைக்கவில்லை என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "தக் லைஃப் படம் வெளியாகி ஏகப்பட்ட விமர்சனத்துக்கு ஆளாகி, படமும் ஓடாமல் போய்விட்டது. அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை,

வெளியான திரிஷா பாட்டு

"நாங்கள் பாடல்களை நன்றாகவே எடுத்துள்ளோம், இதோ பாருங்கள்" என்று யூடியூப்பில் முத்தமழை பாடலை வெளியிட்டுள்ளனர்..

அந்த பாடல் ஏற்கனவே விவாதத்தை கிளப்பியிருந்தது.. தீ பாடியதைவிட, சின்மயி பாடிய போர்ஷனை சினிமாவில் இடம்பெற செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வலுப்பெற்றன.

இப்போது, தீ பாடியிருந்த வெர்ஷனில், ஏற்கனவே ஷூட் செய்திருந்த காட்சிகளை வைத்து, யூடியூப்பில் முத்தமழையை வெளியிட்டுள்ளனர்..

திரிஷா டப்பிங்

நல்லவேளை இந்த பாட்டை படத்தில் வைக்கவில்லை.. வைத்திருந்தால் இன்னும் நிலைமை மோசமாகியிருக்கும் என்று கமெண்ட்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன..

வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் போன்றோரின் காமெடி சீன்களை வைத்து, முத்த மழை பாடல் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது.. அதிலும் சந்தானம் கெட்டப்பில் கரீனா சோப்ராவுடன் த்ரிஷாவை ஒப்பிட்டு மீம்ஸ் பரப்பி வருகிறார்கள். அத்துடன் மணிரத்னம்தான் இந்த பாடலை எடுத்தாரா? என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகிறார்கள்..

பாடகி தீ-யின் குரல் திரிஷாவுக்கு பொருந்தவில்லை , திரிஷா பாடல் முழுக்க மிமிக்ரி செய்து வைத்திருக்கிறார் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள்.. தீ-யின் குரல் வித்தியாசமானது.. தனித்துவமானது.. ஆனால், திரிஷாவுக்கு சுத்தமாக செட் ஆகவில்லை.. ஒருவேளை சின்மயி குரலை பொருத்தியிருந்தாலும்கூட, பாட்டை எடுத்த விதமே பொருந்தவில்லை..

குறைக்கப்பட்ட படத்தின் நீளம்

ஏற்கனவே படத்தின் விமர்சனமே இன்னும் குறையவில்லை.. தக் லைஃப் படத்தின் கிளைமாக்ஸில், கமல்தான் இறந்துவிடுவதுபோல அமைக்கப்பட்டிருந்ததாம். ஆனால், அது மாற்றப்பட்டு சிம்பு இறந்துவிடுவதுபோல எடுத்தார்களாம்..

அதேபோல, ஒன்றரை மணி நேரத்துக்கான ஃபுட்டேஜ்ஜை ஏற்கனவே படத்தில் வெட்டி எடுத்துவிட்டார்களாம். அதிலும் நேபாளத்தில் எடுக்கப்பட்ட போர்ஷன்தான் அதிகமாம்.

கடுப்பான சிம்பு ரசிகர்கள்

அதேபோல சிம்புவுக்கு முக்கியத்துவம் தரும்வகையில் பெரிய சீன் ஒன்று எடுக்கப்பட்டதாம். கார் சண்டையுடன் வரும் அறிமுக காட்சியும் பெரிதாக எடுக்கப்பட்டுள்ளது.. அதெல்லாமே வெட்டியெறிந்து விட்டார்களாம். கிளைமேக்ஸ், உட்பட பல சீன்கள் படத்தில் எடிட் செய்துவிட்டார்களாம்.. இப்படி பல விஷயங்கள் படத்தில் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

முத்த மழை பாட்டில் ஹைலைட் என்னவென்றால், கமல், சிம்பு இருவரையுமே நினைத்து திரிஷா பாடுவதுபோல எடுக்கப்பட்டதாம்.. எனவே, இருவருமே மாறி மாறி அந்த பாட்டில் வருவார்களாம்.. எனினும். எதனால் இந்த பாட்டை படத்தில் வைக்காமல் விட்டுவிட்டனர் என்று தெரியவில்லை.

இப்போது ஓடிடிக்காக வெயிட்டிங்.. ஓடிடியில் படம் வந்தால் செதில் செதிலாக செதுக்கவும் ஒரு தரப்பினர் தயாராக இருக்கின்றனர்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+