பணப்பெட்டியை தூக்காத போட்டியாளருக்கு பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி.. கடைசியில் எதிர்பாராத வெளியேற்றம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் மைனா நந்தினி வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் அனைவருமே எலிமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் மைனா நந்தினி கடைசி இடத்தில் இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

இந்த வார நாமினேசன் லிஸ்ட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இன்று வாக்குகள் செலுத்த கடைசி நாளாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஆரம்பத்தில் ஆறு போட்டியாளர்கள் இருந்தனர். ஆறு பேரும் கடைசி வாரம் என்பதால் எலிமினேஷன் லிஸ்டில் நாமினேஷன் செய்யாமலே வந்திருந்தனர். தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ரசிகர்களும் ஆரம்பமான முதல் நாளிலிருந்து வாக்கு செலுத்த தொடங்கி விட்டனர். இந்த நிலையில் முதல் மூன்று லட்சம் உள்ள பணமூட்டை வைத்ததும் கதிரவன் அதை எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டார்.

குறைவான ஓட்டுகள்
பிறகு 5 போட்டியாளர்கள் இருந்தனர். அதில் பணப்பெட்டி டாஸ்க் மீண்டும் வைக்கப்பட்டு அதில் இருக்கும் 13 லட்சத்தை எடுத்துக் கொண்டு அமுதவாணன் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மீதம் இருக்கும் நான்கு போட்டியாளர்களில் ஓட்டுகளின் அடிப்படையில் மைனா நந்தினி குறைவாக இருந்ததாகவும் அதனால் அவர் வெளியேறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மீண்டும் கிடைத்த வாய்ப்பு
ஓட்டுகளின் அடிப்படையில் மைனா நந்தினி மற்றும் அமுதவாணன் இருவரும் தான் கடைசி இடத்தில் இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பணப்பெட்டி வைக்கப்பட்டதும் இவர்களில் யாரேனும் ஒருவர் எடுத்துவிட்டு வெளியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பிக் பாஸ் முடிவு செய்திருந்தது. ஆனால் மைனா தான் எடுக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் இருந்தே முடிவாக கூறி அதில் இன்ட்ரஸ்ட் காட்டாமல் இருந்தார். ஆனால் அமுதவாணன் 15 லட்சத்துக்கு மேலே வந்தால் நான் எடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் 13 லட்சம் வந்ததும் அவர் எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கடைசி வார வெளியேற்றம்
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருந்த நிலையில் அவர்கள் வெளியே உள்ள நிலவரத்தை அனைவரிடமும் கூறி இருந்தனர். அந்த அடிப்படையில் மைனாவிற்கு எப்படியும் தனக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் தான் அந்த மேடையில் வந்து விட்டால் போதும் என்று கூறிக் கொண்டிருந்தார் ஆனால் அது நிறைவேறாமல் முதல் ஆளாக எவிக்டாகி வெளியே செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications