நீயா நானாவில் நடிகர்களுக்குள் கடும் வாக்குவாதம்.. கோபிநாத் சொன்ன வார்த்தை.. பஞ்சாயத்து தொடங்கியது
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏப்ரல் ஆறாம் தேதிக்கான எபிசோடில் தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் அரசியல் திரைப்படங்களை ஆதரிப்பவர்களும், அதை எதிர்ப்பவர்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அதில் தமிழ் சினிமாவில் அரசியலை ஆதரிப்பவர்கள் என்ற பக்கத்தில் பல நடிகர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
பஞ்சாயத்துக்கு பெயர் வாங்கிய நீயா நானா நிகழ்ச்சி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இப்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

சுவாரசியமான விவாதம்
இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் வைத்தே விவாதங்கள் நடைபெறுகிறது. மாமியார், மாமனார் கொடுமைகள் தொடங்கி கணவன் மனைவி பிரச்சனைகள் காதல், குழந்தைகள் வளர்ப்பு, சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் என பல விஷயங்களை இந்த நீயா நானா நிகழ்ச்சியில் பேசப்படுகிறது.
அந்த எபிசோடு காணவில்லை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்மொழிக் கொள்கை நிகழ்ச்சிக்கான சூட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அப்படி என்ன தான் பேசி இருப்பார்கள்? எதனால் இந்த நிகழ்ச்சி மட்டும் ஒளிபரப்பு செய்யவில்லை என்று பலர் அந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகு சூட்டிங் தொடங்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
புது தலைப்பு
அந்த வரிசையில் இந்த வாரம் தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் அரசியல் திரைப்படங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பொதுவாகவே இப்போதைய சூழ்நிலையில் பல திரைப்படங்களில் சாதி பிரச்சனைகளும், சாதி சார்ந்த அடக்குமுறைகளும் காட்டப்படுகிறது. அதுபோல அரசியல் உள்குத்துகளும் திரைப்படத்தில் தோல் உரித்து காட்டப்படுகிறது.
திரைப்படங்கள் பற்றி விவாதம்
சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் சிலவற்றை சொன்னாலும் நடக்காத பல விஷயங்களையும் பூதாகரமாக்கி சொல்லப்படுகிறது. கதையின் சுவாரசியத்திற்காக திரைப்படங்களில் இப்படி காட்டப்படுவதால் இதை பார்த்து இதை ரோல் மாடலாக எடுத்து சிலருடைய வாழ்க்கை சீரழியுது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வார ப்ரோமோ
இந்த நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கடந்த 15 வருடங்களில் அரசியல் சமூக கருத்துக்கள் அதிகம் வேண்டாம் என்று சொல்லும் மக்களிடம் ஏன் உங்களுக்கு சலிப்பும் அலுப்பும் அந்த படங்கள் தருகிறது என்று கோபிநாத் கேட்க, அதற்கு அரசியல் திரைப்படங்களை எதிர்க்கும் அணியில் இருக்கும் நடிகர் ஒருவர் இந்த மாதிரி படம் எடுப்பவர்கள் அவங்களுடைய மனசுக்குள் இருக்கும் கருத்தை எல்லாம் சொல்லி மக்கள் மனதில் வன்மத்தை உருவாக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
நடிகர்கள் வாக்குவாதம்
அதுபோல அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜாக்குவார் தங்கம் தப்பான படம் எடுப்பதால் மக்கள் மனதிலும் தப்பான சிந்தனைகள் தான் வருகிறது. நீங்கள் தப்பான படம் எடுப்பதால் மக்களுக்கு என்ன நன்மை வருகிறது என்று கொந்தளித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் வரும் திரைப்படங்கள் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை வெளி காட்டுகிறதா? அல்லது இல்லாத பிரச்சனைகளை உருவாக்குகிறது என்று நினைக்கிறீர்களா பாஸ்.












Click it and Unblock the Notifications