எனக்கு 2 பசங்க இருக்காங்க.. நீயா நானாவில் கண்ணீர் விட்ட பெண்.. இது பலருக்கு தேவையான அருமையான மருந்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார எபிசோடில் சோகப் பாடல்களின் ரசிகர்கள் மற்றும் அந்த பாடல்களை தத்ரூபமாக பாடும் பாடகர்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அப்போது ஒரு பெண் தனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தன்னுடைய மனதிற்கு பிடித்த பாடல் குறித்து எமோஷனலாக பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் நீயா நிகழ்ச்சி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் அதிகமான தலைப்புகள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வைரலாகி விடுகிறது. கடந்த வாரத்தில் கூட திரைப்படத்தை ரிவ்யூ செய்யும் ரிவ்யூவர்களும், திரைப்படத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு விவாதித்திருந்தனர். அதில் ஒரு சில ரிவ்யூவர்கள் பணம் வாங்கிக் கொண்டு ரிவ்யூ செய்வது குறித்த விஷயங்களும் அம்பலமாக இருந்தது. இது குறித்த விவாதம் இணையத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

நீயா நானா ப்ரோமோ
இந்த நிலையில் இந்த வாரமும் சினிமா சார்ந்த ஒரு விவாதம் தான் நடக்கிறது. ஆனால் இது பலருக்கும் பிடித்தமான விவாதமாக இருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் சினிமாவில் சோகப்பாடல்களை ரசிக்கும் ரசிகர்களும் அந்த பாடல்களை பாடும் பாடகர்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அப்போது தங்களுடைய மனதிற்கு பிடித்தமான பாடல் வரிகளை கோபிநாத் சொல்ல சொல்லி இருந்தார். பல ரசிகர்கள் அந்த பாடல்களை சொல்லி இருந்தனர்.
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அப்போது ஒரு பெண் தனக்கு இரண்டு ஆண் மகன்கள் இருக்கிறார்கள், அதனால் எனக்கு ஒரு பாடலைக் கேட்கும் போது என்னை அறியாமலையே கண்ணீர் வரும். என்னுடைய மகன்கள் வளரும் போது அந்த பாடலை தான் நான் கேட்டுக் கொண்டிருப்பேன் என்று சொல்லி இருந்தார். அது என்ன பாடல் என்றால் "நீங்கள் கேட்டவை" படத்தில் இடம்பெற்ற "பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா" பாடல் தான்.
சுகராகம் சோகம்
இந்த பாடல் தான் எனக்கு மனதுக்கு ரொம்பவும் நெருக்கமானது என்று சொல்லி இருக்கிறார். எதிர் தரப்பில் இருந்த ஒரு பெண் இந்த பாடலை பாட, இந்த பாடல் எனக்கு பிடிக்கும் என்று சொன்ன பெண் கலங்கி அழுதிருக்கிறார். அதுபோல இன்னொரு ப்ரோமோவில் சோகப் பாடல்கள் ஏன் கொண்டாடப்படுகிறது என்று கோபிநாத் கேட்க, அதற்கு அங்கிருந்தவர்கள் "சுக ராகம் சோகம் தானே" என்று சொல்லி இருந்தனர்.
முதல் நாயகன்
அது போல இன்னொரு பெண் எனக்கு எந்த சந்தோஷம் நடந்தாலும் முதலில் நான் கேட்கும் பாடல் "என் முதல் நாயகன் நீ" என்ற பாடல் தான். அந்த பாடல் அப்பாவுக்காக எழுதி இருப்பாங்க, ஆனால் நான் என்னுடைய அண்ணனுக்காக தான் இந்த பாடலை கேட்கிறேன் என்று எமோஷனலாக சொல்லி இருந்தார். எது எப்படியோ இந்த வாரம் எபிசோட்டில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கப் போகிறது என்று தெரிகிறது. பலர் கண் கலங்கி அழுவதற்கு தயாராக இருந்துக்கோங்க மக்களே. அதே போல அழுதாலும் சில சந்தோஷமான சம்பவங்களும் அனைவருடைய மனதிலும் எட்டிப் பார்க்கும்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications