பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டு போடுவது வேஸ்ட்!? அம்பலமானது சூழ்ச்சிகள்... கலாய்க்கும் நெட்டிசன்கள்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஓட்டு போடுவது வேஸ்ட் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் அந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டாலும் அவர்கள் கடைசியில் சேவ் ஆகாமல் வெளியேற்றப்படுகிறார்கள் என பலர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
விஜய் டிவி அவர்களுக்கு சாதகமான ஒரு சில போட்டியாளர்களை நிகழ்ச்சியில் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களை வெளியேற்றி வருவதாக பலர் கருத்து கூறி வருகின்றனர்.

இப்போ சரியா இல்லையாம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஒரு சில சீசன்களில் மட்டும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்டில் வருகின்றனர். அவர்களின் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை hotstar ஆப் மூலமாக ரசிகர்கள் வாக்கு செலுத்தி சேவ் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்த முறை சரியாக இருந்ததாகவும் ஆனால் இப்போது நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு ஏற்ப பல போட்டியாளர்கள் அதிரடியாக வெளியிட்டப்படுவதாகவும் சேனல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்ந்து நடக்கிறது
கரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் ஆரம்பத்தில் மணிகண்டன் இருந்து வந்ததாகவும், அதனால் மணிகண்டன் தான் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் அடித்து கூறி வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏடிகே வெளியேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஜனனியின் வெளியேற்றம் நடைபெற்றிருக்கிறது. இது ஜனனியின் ரசிகர்களை மட்டுமல்லாமல் பிக் பாஸ் ரசிகர்களின் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பலர் இது அன்ஃபேர் எவிக்ஷன் என்று கூறி வந்தனர். ஏற்கனவே பிக் பாஸ் நான்காவது சீசனில் சனம் வெளியேற்றமும் இப்படித்தான் நடந்தது என்று பலர் அந்த நேரத்தில் ஹேஸ் டேக் ட்ரண்டு செய்து வந்தனர்.

மாற்றப்படும் லிஸ்ட்
இந்த நிலையில் கடந்த வாரமும் தனலட்சுமி வெளியேற்றம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தது. அதுவரைக்கும் இந்த சீசனில் மைனா நந்தினி, கதிரவன், ஷிவின் இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறி வந்தனர். ஆனால் இவர்கள் யாரும் இல்லாத வகையில் தனலட்சுமியை கடைசியில் வெளியேற்றி விட்டனர். தனலட்சுமிக்கு பெரிய அளவில் பேக்ரவுண்ட் இல்லாததால் அவர் வெளியேற்றப்பட்டதாக அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் வாக்குகளின் அடிப்படையில் அதிகமாக அசீமுக்கு தான் ஆதரவு இருந்து வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் தான் அசீம் சேவ் செய்யப்பட்டு இருக்கிறார். இதுவும் பலருடைய கேள்வியாக வலம் வருகிறது.

உண்மை இது தானா
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் எட்டு போட்டியாளர்கள் பெயர் இருக்கும் நிலையில் பிக் பாஸ்க்கு எதிராக பல்வேறு மீம்ஸ்களும் ட்ரோல்ஸ்களும் வலம் வருகிறது. அதில் பலர் நீங்கள் என்னதான் ஓட்டு செலுத்தினாலும் அது படி நடக்கப்போவதில்லை. அதனால் பிக் பாஸுக்கு யாரும் ஓட்டு செலுத்த வேண்டாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஹாட்ஸ்டாரில் அளிக்கப்படும் ஓட்டுகள் மட்டும்தான் உண்மையானதாம். அதை விட்டுவிட்டு சில அன் ஆபீஸியல் வாக்குகளின் அடிப்படையில் என சிலர் சாட் ப்ரிப்பேர் செய்து ஒவ்வொரு போட்டியாளர்களும் இவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் இருக்கின்றனர் என வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்றும் பிக் பாஸ் hotstar-ரில் தங்களுக்கு கிடைக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் தான் வெளியேற்றம் நடத்தி வருவதாக தகவல்களை தெரிவித்து இருக்கின்றனர்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications